துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Monday, July 18, 2011

அல்பானியா - புட்ரின்ட்

புட்ரின்ட், அல்பானியா
(Read Original Article in : - Butrint, Albania)


'புட்ரின்ட்' (Butrint) என்பது ‘அல்பானியா’வின் (Albania) மற்றொரு புராதான சின்ன மையம். இதுவும் 1992 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ள புராதான சின்ன மையமே (UNESCO World Heritage Sites). வரலாற்றின்படி பல்வேறு சமயங்களில் இது ‘கிரேக்கர்களின் காலனியாகவும் (Greek Colony) மற்றும் ரோமன் நகரமாகவும் (Roman City) கிருஸ்துவ பிஷப்பினர் (Christian bishopheric) ஆண்ட இடமாகவும் இருந்துள்ளது. இது ‘பைசண்டின்’ மன்னர்கள் (Byzantine empire), ‘வெனிஷியர்கள்’ (Venetian) போன்றவர்கள் ஆண்ட இடம். அதன் பின் மத்தியக் காலத்தில் (Middle Ages) அதை அனைவரும் கைவிட்டு விட்டு (Deserted) ஓடியவுடன் அது ஈரப்பசையான சதுப்பு (Marsh land) நிலமாகியது.
'புட்ரின்ட்'டில் ரோமன் அம்பிதியேட்டர் இடிபாடுகள்
Author: Marc Morell (Creative Commons Attribution ShareAlike 3.0)
அங்குள்ள மொத்த நிலப்பரப்பான 4611.2 ஹெக்டரில் 'புட்ரின்ட்' என்ற இடம் 3980 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ளது. 1928 ஆம் ஆண்டு ‘இத்தாலியை’ (Italy) ஆண்ட எதேச்சிகார அரசரான (Fascist Emperer) ‘முசோலினி’யின் (Musolini) காலத்தில்தான் இந்த இடத்தின் ஆராய்ச்சி துவங்கியது. அது முதல் பல்வேறு அரசின் ஆட்சிகளில் (Various Govts) அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. முடிவாக கம்யூனிஸ்ட் ஆட்சி (communist regime) 1992 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததும் அந்த இடம் உலக புராதன சின்னமாக ஏற்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆண்டுகள் வரை அங்கிருந்த பல அற்புதமான பொக்கிஷங்கள் (artefacts) கொள்ளை (looting and plunder) அடிக்கப்பட்டு இருந்துள்ளன. அதனால் அந்த இடத்தை அழிவுறும் நிலையில் உள்ள புராதான சின்ன இடம் என அறிவித்தார்கள்.
ஆனால் இன்றும் அங்கு பல சிதைந்த நிலையில் உள்ள சின்னங்கள் உள்ளன. அவற்றில் 6 ஆம் நூற்றாண்டை ( 6th century BC) சேர்ந்த ‘அம்பிதியேட்டர்’ (amphitheatre) மற்றும் 3 ஆம் நூற்றாண்டை ( 3rd century BC) சேர்ந்த இரண்டு ஆலயங்கள் அடங்கும். அந்த இரண்டு ஆலயங்களில் ஒன்று ‘கிரேக்க’ நாட்டு மருத்துவக் கடவுள் (Greek Medicine God) உள்ள ஆலயம். அழிந்துள்ள சின்னங்களில் ஒன்று ‘இஸ்தான்புல்லில்’ (Isthanbul) உள்ள ‘ஹகிய சோபியா’ (Hagia Sophia) பேசிலிக்காவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பேசிலிக்காவாகக் கருதப்படும் ‘பைசண்டின் பேசிலிக்கா’ (Byzantine) ஆகும்.
‘புட்ரின்ட்’ கிரேக்க நாட்டின் எல்லையின் அருகில் உள்ளது. அதன் அருகில் உள்ள மிகப் பெரிய நகரம் ‘சரண்டி’ Sarande) என்பது .

உலக புராதான சின்ன மைய விவரங்கள்
(World Heritage Site Inscription Details)
இருப்பிடம் : N39 45 4 E20 1 34
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1992
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : III

அபாய நிலையில் சின்னம்- விவரம்
(Threats & Issues)

1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை புட்ரின்ட் மையத்தில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு சென்றவுடன் அபாய நிலையில் இருந்த அந்த சின்னத்தின் மையத்தை காப்பாற்ற ‘புட்ரின்ட்’ அரசு அந்த இடத்தில் தேசிய பூங்காவை அமைத்தது.

இந்த இடத்திற்கு எப்படி செல்லலாம்
(Visiting this Site)

முதலில் 'அல்பானியா'வின் தலை நகரமான 'திரானாவிற்கு' வந்து விட்டே அங்கு செல்ல வேண்டும். 'திரானா'வில் இருந்து வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு செல்லலாம் .

'திரானாவில்' உள்ள ஹோட்டல்கள்
(Hotels in Tirana)

(1) பரன் ஹோட்டல்
(Baron Hotel)
(2) சிட்டி ஹோட்டல்
(City Hotel)
(3) பிரிட்டிஸ் ஹாஸ்டல்
(Freddy's Hostel )
(4) ஹக்ஸ்யு ஹோட்டல்
(Haxhiu Hotel)
(5) ஹாஸ்டல் அல்பானியா
(Hostel-Albania)
(6) ஹோட்டல் பிரில்லியண்ட் ஆண்டிக்
(Hotel Brilant Antique )
(7) லோரிணி ஹாஸ்டல்
(Loreni Hostel)
(8) நோபில் ஹோட்டல் டிரானா
(Nobel Hotel Tirana )
(9) ஒரேஸ்டி ஹோச்டல்
(Oresti Hostel )
(10) செக்கோ இம்பிரியல் ஹோட்டல்
(Xheko Imperial Hotel)
இங்கு கிளிக் செய்து 'திரானா'வில் உள்ள அனைத்து ஹோட்டல்களின் (hotels in Tirana) விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

கீழ் கண்ட தளங்களிலும் சென்று நீங்கள் தங்கும் இடத்திற்கான முன் பதிவு செய்யலாம்.
(1) அல்பானியாவின் ஹோட்டல்கள் (hotels in Albania)
(2) உலகின் பல்வேறு ஹோட்டல்கள் (hotels worldwide)
(3) உலகின் பல்வேறு ஹாஸ்டல்கள் (hostels worldwide)

சிதைந்த நிலையில் பைசண்டின் பேசிலிக்கா
Author: Roquai (public domain)

சிதைந்த நிலையில் பேப்டிஸ்த்ரி பேசிலிக்கா
Author: Joonas Lytinen (Creative Commons Attribution 2.0)

No comments:

Post a Comment