துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Monday, July 18, 2011

அல்ஜீரியா - கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்

கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்
(Read Original Article in :- kasbah-of-algiers_algeria)

'அல்ஜீரியா'வின் (Algeria) தலை நகரான 'அல்ஜியெர்ஸ்'சில் (Algiers) உள்ளதே 'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்' (Kasbah of Algiers) என்பது. அதை 'மெதினா' (medina) என்பார்கள். அதாவது பண்டை காலத்தைய பழைய வீடு என்பது பொருள். மேலும் வாடா ஆப்ரிக்காவின் பல பகுதிகளிலும் காணப்படும் நான்கு சுவர்களுக்கு உள்ளே உள்ள இடம் போல (Walled Area) உள்ள இதை 'கஸ்பா' (Casbah) என்றும் கூறுவார்கள். 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 முதல் 14 ஆம் தேதிவரை 'அமெரிக்கா'வின் (United States) 'சந்த் பி' (Santa Fe) எனும் இடத்தில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் கூட்டத்தில் இந்த இடத்தை புராதான சின்னமாக (UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள்.

'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்'சில் என்ன பார்க்கலாம்
(What to See at the Kasbah of Algiers)

சுழன்று சுழன்று செல்லும் (labyrinthine) குறுகலான சந்துக்கள் (alleys) இங்கு பார்க்க வேண்டிய இடமாகும். தனித்து வீடுகளும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக நெருக்கமாக அமைந்து உள்ளன. ஆனால் முன்னர் இந்த இடம் நெரிச்சலான பகுதியாகவும் (Over Population) , சுற்றுச்சூழல் ஆரோக்கியமற்றதாகவும் (Pollution) இருந்தது. 2003 ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த பூகம்பத்தில் (Earthquake) இங்கிருந்த பல வீடுகள் நாசம் அடைந்தன.

வரலாறு
(History)

'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்' என்பது முன்னர் இருந்த ரோமானியர்களின் வசித்து வந்த இடத்தில் அமைந்தது. கஸ்பாவின் உள்ளே உள்ள கட்டிடங்கள் 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அவற்றில் 1794 ஆம் ஆண்டு 'டே பாபா ஹசன்' (Dey Baba Hassan) என்பவரால் கட்டப்பட்ட 'கேட்சாவா மசூதி' (Ketchawa Mosque) மற்றும் துர்கியர் ஆட்சி காலத்தில் (Turkish regency) 1660 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள 'எல் ட்ஜிடிட் மசூதி' (El Djedid Mosque) போன்றவையும் உள்ளன.

'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்' உள்ள இடம்
(Location)

இந்த இடம் அல்ஜீரியாவின் தலை நகரான 'அல்ஜியெர்ஸ்'சின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ளது.
உலக புராதான சின்னம் உள்ள இருப்பிடம் : N36 46 59.988 E3 3 37.008
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1992
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : II, V

அங்கு செல்வது எப்படி
(Getting there)

அல்ஜீரியாவின் 'ஹுவாரி பௌமிடின்னனே சர்வதேச விமான நிலையத்தில் (Houari Boumedienne International Airport) இருந்து அதன் தலை நகரான 'அல்ஜியெர்ஸ்'சுக்கு சென்று அங்கிருந்து இந்த இடத்திற்குச் செல்லலாம். உலகின் பல இடங்களுக்கும் விமான சேவையைக் கொண்டு உள்ளது.
'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்'
Author: jam-L (Creative Commons Attribution 2.0)

No comments:

Post a Comment