துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Friday, July 29, 2011

பஹரைன் - சுற்றுலாக் குறிப்புக்கள்

பஹரைன் சுற்றுலாக் குறிப்புக்கள்
(Read Original Article in :- Bahrain )

வானத்தில் இருந்துப் பார்த்தால் தெரியும் காட்சி - பஹரைன்
Author: Ranam (public domain)

'பஹரைன்' (Bahrain) ஒரு தீவுக் கூட்டப் (archipelago) பிரதேசம். மத்தியதரைக் கடலில் உள்ள இது தன்னுடன் 33 தீவுக் கூட்டத்தை கொண்ட நாடு. அந்த தீவுகளில் மிகப் பெரியதான தீவே 'பஹரைன்' ஆகும். இதை 'அல் காலிபா' (Al Khalifa) குடும்பத்தினர் ஆண்டு வருகிறார்கள். இதன் ஜனத்தொகை 1.2 மில்லியன். பரப்பளவு 750 சதுர கிலோமீட்டர்.
மனாமாவில் ஒரு வீடு
Author: Jayson De Leon (Creative Commons Attribution 2.0 Generic)

பஹரைனின் தலைநகர் மனாமா (Manama) ஆகும். 2009 ஆம் ஆண்டு கணக்கின்படி இதன் GDP of $20.6 மில்லியன் , தனிநபர் வருமானம் எனும் GDP $19,817. நாட்டின் நாணயம் தினார் (Dinar) . போன் IDD நம்பர் +973. மின்சாரம் 220V 50Hz . வீதியில் வலதுபக்கத்தில் வண்டியை ஓட்ட வேண்டும்.
இந்த நாட்டிற்குச் செல்ல சிறந்த காலம் நவம்பர் முதல் மார்ச் (November to March) மாதங்களே. மற்ற மாதங்களில் வெயில் கடுமையாக இருக்கும்.
பஹரைன் என்றால் இரண்டு இருக்கைகள் என்று அர்த்தம். காரணம் இந்த நாட்டில் இயற்கை ஊற்றுக்கள் ஒரு புறம் இருக்க கடல் நீர் வேறு உள்ளது. இந்த நாட்டில் பல காலமாகவே மனிதர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இதை அசிரியர்கள் ( Assyrians), பாபிலோனியர்கள் ( Babylonians), பெர்ஷியர்கள் ( Persians) மற்றும் அரேபியர்கள் (Arabs) ஆண்டு வந்தார்கள். அரேபியர்களே இங்கு இஸ்லாம் மதத்தைக் கொண்டு வந்தார்கள்.
 
பஹரைன் உலக வியாபார கேந்திரம்
Author: Tim Miller (Creative Commons Attribution 3.0 Unported)
3 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை பஹரைன் 'பெர்ஷியர்களின்' (Persians) ஆட்சியில் இருந்தது. 'ஷியா இஸ்லாமை' (Shia Islam) சேர்ந்த 'குவார்டமடின்ஸ்' (Qarmatians) என்பவர்கள் AD 899 ஆம் ஆண்டு பஹ்ரனை கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்களை AD 976 ஆம் ஆண்டு அபாசித் (Abbasids) என்பவர்கள் தோற்கடித்து நாட்டை கைப்பற்றினார்கள். மத்தியக் காலத்தில் தற்போது 'சவூதி அராபியா'வை (Saudi Arabia) சேர்ந்த கிழக்கு மாகாணம் ஒன்றை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. 1521 ஆம் ஆண்டு பஹ்ரனை போர்துகேய நாட்டினர் (Portuguese) கைப்பற்றி அந்த நாட்டை 80 வருடம் ஆண்டு வந்தார்கள்.ஆனால் அதன் பின் அவர்களை 'இரானை' (Iran) சேர்ந்த 'சபாவிட்' (Safavid) பரம்பரையினர் அடித்து விரட்டினார்கள். அவர்களே 'பஹ்ரைனில்' 'ஷியா' (Shiitm) மதத்தைக் கொண்டு வந்து சுமார் இருநூறு ஆண்டுகள் அந்த நாட்டை ஆண்டு வந்தார்கள்.
1783 ஆம் ஆண்டு 'பானி உத்பா' (Bani Utbah) எனும் ஆதிவாசி மக்கள் 'பஹ்ரைனை' கைப்பற்றினார்கள். பெர்ஷியர்களின் ஆட்சி முடிந்து அராபியர்கள் இந்த நாட்டிற்கு வந்தார்கள். 1797 ஆம் ஆண்டு 'அல் கலிபா' குடும்பத்தினர் 'பஹ்ரைனுக்கு' வந்தார்கள். அவர்கள் அந்த நாட்டின் ஆட்சியை 1820 ஆம் ஆண்டு கைப்பற்றியப் பின் 'பிரிட்டிஷ்' (British) நாட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள சில காலத்தில் அதாவது 1861 ஆம் ஆண்டு பிரிடிஷார் அந்த ஆட்சியை தம்மிடம் எடுத்துக் கொண்டார்கள்.
19 ஆம் நூற்றாண்டில் 'பாஸ்ரா' (Basra) , குவைத் (Kuwait), 'மஸ்கட்' (Muscat)போன்ற நாடுகளை பின் தள்ளிவிட்டு 'பஹரைன்' கடலில் முத்து எடுக்கும் தொழிலில் முன் நிலையில் உள்ளார்கள். நாடு நல்ல முன்னேற்றம் அடைய 1911 ஆம் ஆண்டு 'பஹ்ரைனுக்கு' அதிக அளவிலான தன்னாட்சியை உள்ளூர் வணிகர்கள் கேட்கத் துவங்க அவர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்து இந்தியாவுக்கு (India) அனுப்பினார்கள்.
1926 முதல் 1957 வரை 'பஹ்ரைன்' சார்லஸ் பெல்க்ரேவு (Charles Belgrave) என்ற பிரிட்டிஷ் நிர்வாகியின் கீழ் இருந்தது. இரான் நாட்டினர் பஹ்ரைனை மீண்டும் பிடிக்க நினைத்ததினால் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். 1932 ஆம் ஆண்டு பஹ்ரைனில் பெட்ரோலியம் (Petroleum) பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது. அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடி கோலியது.
அல் -ப்தேஹ் கிராண்ட் மசூதி
Author: omar_chatriwala (Creative Commons Attribution 2.0 Generic)

1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பஹ்ரைன் தனது 14 மாகாணங்களில் ஒன்று என இரான் பிரகடனம் செய்தது. அதனால் பிரிடன், சவூதி அராபியா மற்றும் யுனைடெட் நேஷன் போன்றவை கவலை கொண்டன. ஆகவே அதற்க்கு பதிலடி தருவதற்காக பிரிடன் வேலை நிறுவனங்களில் அராபியர்களை பெருமளவில் பஹ்ரைனில் வந்து குவித்தது. அதை எதிர்த்த இரான் நாடு அங்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்பியது. அதற்கேற்ப யுனைடெட் நேஷன் தலைமையில் பஹ்ரைனில் 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் பஹ்ரைன் சுதந்திர நாடாக இருக்க முடிவாயிற்று.
இன்று பஹ்ரைன் நாட்டை மன்னரும், ஒரு பிரதமரும் ஆட்சி செய்கிறார்கள். பெட்ரோலியப் பொருள் மிக அதிக அளவு அந்த நாட்டில் கிடைப்பதினால் அந்த நாடு பெரும் பொருளாதார வளர்ச்சி பெற்று உள்ளது. நகரெங்கும் விண்ணை முட்டும் கட்டிடங்கள் உள்ளன. அந்த நாட்டில் உலகிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடமாக 3353 அடி உயர கட்டிடம் கட்டுவதற்கான திட்டமும் உள்ளது.

பஹ்ரைனுக்கு செல்ல வேண்டுமா

2011 ஆம் ஆண்டு முதல் அரசியல் கிளர்ச்சியினால் பிரிட்டிஷாருக்கு எதிரான கிளர்ச்சி வலுத்துக் கொண்டு உள்ளது. ஆகவே இந்த கிளர்ச்சி அடங்கும்வரை அங்கு செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் 

 
மனாமாவில் சாலை உணவகம்
Author: Andrew Griffith (Creative Commons Attribution 2.0 Generic)

அந்தோரா (Andorra), ஆர்மேனியா (Armenia), ஆஸ்திரேலியா (Australia), ஆஸ்திரியா (Austria), அஜர்பைஜான் (Azerbaijan), பிலாரச்ஸ் (Belarus), பெல்ஜியம் (Belgium), பிரூனி (Brunei ), கனாடா (Canada), சைனா (china), ஹாங்காங் SAR(Hong Kong SAR), மகாவு (Macau SAR) and ரிபப்ளிக் ஆப சைனா-தைவான் ( Republic of China Taiwan), டென்மார்க் (Denmark), எஸ்டோனியா (Estonia), பின்லாந்து (Finland), பிரான்ஸ் (France), ஜியோர்ஜியா (Georgia), ஜெர்மனி (Germany), கிரீஸ் (Greece), ஐஸ்லான்த் (Iceland), ஐர்லாந்த (Ireland (3 months), இத்தாலி (Italy), ஜப்பான் (Japan), காசகிஸ்தான் (Kazakhstan), க்ரைஜிஸ்தான் ( Kyrgystan), லாட்வியா (Latvia), லைசிஸ்டைன் (Liechtenstein, லித்துவானியா (லிதோனியா), ஸ்செம்பெர்க் (Luxembourg), மலேஷியா (Malaysia), மொனாகோ ( Monaco), நெதர்லாந்த் (Netherlands), நியூசிலாந் (New Zealand), நார்வே (Norway), போர்த்துகல் (Portuga), ரஷ்யா (Russia), சான் மரினோ (San Marino) சிங்கபூர் (Singapore), ஸ்பெயின் (Spain), ஸ்வீடன்(Sweden), சுவிட்சர்லாந் (Switzerland), தாஜிகிஸ்தான் (Tajikistan), தாய்லாந்த் (Thailand), துர்கி (Turkey), துர்க்மெனிஸ்தான் (Turkmenistan), உக்ரைன் (Ukraine), யுனைடெட் கிங்டம் (United Kingdom (3 months), யுனைடெட் ஸ்டேட்ஸ் (United States), உஸ்பெகிஸ்தான் (உழ்பெகிச்டன்) மற்றும் வாடிகன் சிட்டி (Vatican City) போன்ற இடங்களில் உள்ளவர்கள் BD 5 / US$13 கட்டணம் செலுத்தி 14 நாட்கள் அங்கு இருக்க விசாவைப் பெறலாம். You can also apply for eVisa at BD 7.

விமானம் மூலம்
(By Plane)

மனாமாவின் கிழக்கில் உள்ள 'முஹாரக்' (Muharraq) எனும் இடத்தில் உள்ள பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து நகருக்குள் செல்லலாம். ஐரோபியாவின் பல பாகங்களிலும் இருந்து இங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன.

பஹ்ரைனில்  பெரிய நகரங்கள்
(Major Cities in Bahrain)
  • மனாமா (Manama)- தலைநகரம் 
  • ஹமாத் சிட்டி (Hamad Town)
  • இசா டவுன் (Isa Town)
  • ஜிட் ஹாப்ஸ் (Jidd Hafs)
  • முஹாராஹ் (Muharraq)
  • ரிப்பா  (Riffa)
  • சிட்ராஹ் (Sitrah) 
பஹ்ரைனில் பார்க்க வேண்டிய இடங்கள் 
(Places of Interest in Bahrain)
ஹவார் தீவு (Hawar Islands)

யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம் 
(UNESCO World Heritage Sites in Bahrain)
குவாலட் தல் பஹ்ரைன் துறைமுகம் மற்றும் டில்முனின்  தலைநகரம் 
(Qal'at al-Bahrain - Ancient Harbour and Capital of Dilmun  )

No comments:

Post a Comment