துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, July 17, 2011

அர்ஜென்டைனா - ஜெசுட் பிளாக்

'ஜெசுட் பிளாக்' மற்றும் 'எஸ்டான்ஷியாஸ் ஆப் கொர்டோபோ '
(Read Original Article in :-
 

'ஜெசுட் பிளாக்' மற்றும் 'கொர்டோபோ எஸ்டான்ஷியாஸ்' (Jesuit Block and Estancias of Córdoba ) எனப்படுவது 'அர்ஜென்டைனா'வில் (Argentina) 'கொர்டோபோவில்' (Córdoba) உள்ள 'ஜெசுட் மிஷனின்' (Jesuit Mission) உள்ளே உள்ள பல கட்டிடப் பகுதிகள் ஆகும். ஜெசுட்டினால் நிர்வாகிக்கப்பட்ட தனியான பண்ணை (Ranches) போன்று அமைந்துள்ள அவை கரோயா (Caroya) , ஜெசுஸ் மரியா (Jesus maria) , சாந்தா கடாலினா (Santa Catalina), அல்டா கிரேசியா (Alta gracia) , கண்டிலாரியா (Candelaria) மற்றும் சான் இக்னாஷியா (San Ignacia) என்பன. 'ஆஸ்ரேலியா' (Australia) நாட்டில் 02.12.2000 அன்று நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee) கூட்டத்தில் இவை இரண்டும் யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites) அங்கீகரிக்கப்பட்டது.

இங்கு என்ன பார்க்கலாம்
(What to See in Jesuit Block and Estancias of Córdoba)

'ஜெசுட் பிளாக்' அல்லது 'மன்சனா டி லாஸ் லுசெஸ்' (Manzana de las Luces) என்ற பகுதியில் தென் அமெரிக்காவின் (South America) மிகப் பழைமையான 'கோர்டோபோ பல்கலைக் கழகம்' (University of Cordoba) , மொன்செரெட் உயர் நிலைப் பள்ளிக்கூடம் (Monserrat Secondary School) , ' இக்லிஷியா டி கலா கம்பானியா' ( church Iglesia de la Compañia) எனும் தேவாலயம் மற்றும் சில வீடுகளும் உள்ளன.
Iglesia de la Compania, Cordoba, Argentina
'இக்லிஷியா டி கலா கம்பானியா'
Author: Lancastermerrin88 (Creative Commons Attribution ShareAlike 3.0)

Iglesia de Santa Catalina, Cordoba, Argentina
இக்லிஷியா டி சந்தா கடாலினா
Author: Claudio Elias (public domain)

வரலாறு
(History)

'ஜெசுட் பிளாக்' (Jesuit Block) அல்லது 'மன்ஜானா ஜெசுடிகா' (Manzana Jesuítica) மற்றும் அதன் பண்ணை 1615 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1767 ஆம் ஆண்டு அவர்கள் அமெரிக்காவில் இருந்து ஸ்பெயின் (Spain) நாட்டை சேர்ந்த சார்லஸ் III (Charles III) எனும் மன்னனினால் வெளியேற்றப் பட்டார்கள். 1853 ஆம் ஆண்டு அவர்கள் அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்று விட்ட போது அவற்றை 'பிரான்சிஸ்கன்' (Franciscans) என்பவர்கள் நிர்வாகித்து வந்தார்கள். ஆனால் ஒரே வருடத்தில் அந்தப் பள்ளியும், பல்கலைக் கழகமும் தேசியமயமாக்கப்பட்டது (nationalized).

இது உள்ள இடம்
(Location)

கோர்டோபோ என்பது அர்ஜென்டைனாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் (Second Biggest city) ஆகும். அதன் ஜனத்தொகை (population) இரண்டு மில்லியன்கள்.

உலக புராதான சின்ன விவரம்
(World Heritage Site Inscription Details
)
உள்ள இடம் : S 31 25 14 W 64 11 28
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : II, IV

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting this Site)

கொர்டோபோவில் உள்ள இந்த புராதான சின்ன மையங்களை பார்க்கச் செல்ல வேண்டும் எனில் முதலில் 'புயினோஸ் ஐரேஸ்' (Buenos Aires) சென்று அங்குள்ள ஏதாவது ஒரு ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு அங்கிருந்து இந்த இடத்திற்குச் செல்லலாம். புயினோஸ் ஐரேஸ்'சில் நிறைய சுற்றுலாப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு கிளிக் செய்து 'புயினோஸ் ஐரேஸ்'சில் (Hotels in Buenos Aires) உள்ள ஹோட்டல்களின் விவரங்களைப் பார்க்கலாம். அது போலவே கொர்டோபோவில் உள்ள (Hotels in Cordoba) ஹோட்டல்களின் ,விவரங்களை அறிய இதன் மீது கிளிக் செய்யவும்.

கொர்டோபோவிற்கு எப்படி செல்வது
(Getting there Cordoba)

‘புயினோஸ் ஐரேஸ்'சில் இருந்து ரயிலிலோ இல்லை என்றால் விமானத்திலோ கொர்டோபோவிற்குச் செல்லலாம். கொர்டோபோவின் மத்தியப் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் 'தலவெல்லா' சர்வதேச விமான நிலையம் (Talavella international airport) உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு 'அர்ஜென்டைனா'வின் பல நகரங்களில் இருந்தும் 'பொல்வியா'வின் (Bolvia) லிமா(Lima) , சந்டியாகோ டி சிலி (Santiago de Chile) , சாந்தா க்ருஸ் டி லா செய்ரா(Santa cruz de la seirra) , மற்றும் 'பிரேசிலின்' (Brazil) போர்டோ அலிக்ரீ போன்ற இடங்களில் இருந்தும் விமான சேவைகள் உள்ளன.

எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.

No comments:

Post a Comment