ப்ருனி - பெராடயான் காட்டுப் பகுதி
(Read Original Article in :-Peradayan Forest Reserve )
(Read Original Article in :-Peradayan Forest Reserve )
பெராடயான் காட்டுப் பகுதி (Peradayan Forest Reserve ) என்பது 'ப்ருனி' ( Brunei) நாட்டின் 'டெம்புராங்' மாகாணத்தில் (Temburong District) பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி ஆகும். இது லபூ (Labu) எனும் நகருக்குச் செல்லும் வழியில் உள்ள 'பங்கார்' (Bangar ) எனும் இடத்தில் இருந்து 15 கிலோ தொலைவில் உள்ளது. இந்த வனப் பகுதியில்தான் 'புகிட் படோய்' (Bukit Patoi) மற்றும் 'புகிட் பெராடயான் ' (Bukit Peradayan) என்ற மலை உச்சிப் பகுதிகள் உள்ளன.
இந்த இரண்டு மலை உச்சிக்குச் செல்ல இந்த வனப் பகுதி வழியாகவே நடந்து செல்ல வேண்டும். அது நல்ல அற்புதமான அனுபவமாக இருக்கும். முதலில் 'புகிட் படோய்' மலை உச்சியை அடைந்ததும் அந்த மலை உச்சியில் நின்று கொண்டு தென் சைனாவின் கடல் மற்றும் 'சராவக்' (Sarawak) பகுதியையும் பார்க்கலாம். முதலில் 'புகிட் படோய்' மலை உச்சியை அடைந்ததும் அங்கிருந்து திரும்பி வரலாம், இல்லை என்றால் இன்னமும் நடந்து 'புகிட் பெராடயன்' மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து பிற இடங்களின் ரம்யமான காட்சிகளைக் காணலாம். இந்த இடம் 'பங்கரில்' இருந்து 12 கிலோ மீட்டர் அல்லது 'லபு'வில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு சென்று திரும்ப சுமார் 3 மணி நேரம் ஆகும்.
இங்கு செல்வது எப்படி?
(Getting There )
'பங்கார்' நகரில் இருந்து டாக்ஸியில் சென்று திரும்ப B$30 கட்டணம் வசூலிப்பார்கள்.
இந்த பகுதி உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment