ப்ருனி - தாசிக் மேரிம்புன்
(Read Original Article in :-Tasik Merimbun)
(Read Original Article in :-Tasik Merimbun)
'தாசிக் மேரிம்புன்' (Tasik Merimbun ) 'ப்ருனியில்' (Brunei) 'டுட்லாங்' (Tutong) எனும் இடத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிகப் பெரிய ஏரியாகும் (Lake) . அதை சுற்றி 'மேரிம்புன் ஹெரிடேஜ் பார்க்' (Merimbun Heritage Park) உள்ளது. இந்தப் பார்க்கின் பரப்பளவு 7800 ஹெக்டயர் ஆகும். இதை ஆசியப் பரம்பரை பார்க்காக (Heritage Park) அங்கீகரித்து உள்ளார்கள்.
'தாசிக் மேரிம்புன்' ஆழ்ந்த (கரிய நிறம் போல) நிறத்தில் உள்ளது. அதற்குக் காரணம் அங்குள்ள மரங்களில் இருந்து விழும் மரப்பட்டைகள், கோட்டைகள் மற்றும் இலைகளின் நிறங்கள் (natural tannin) நீரில் கரைந்து அந்த ஏரியின் நீரை அழுக்கு நிறத்தில் வைத்து உள்ளது. இந்த ஏரியை தேடி நிறைய பறவைகள் வருகின்றன. குட்டிப் போட்டுப் பால் தரும் பிராணிகள் மற்றும் ஊர்வன போன்ற பிராணிகளும் அந்த எரியில் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ஒருவருக்கு B$30 என்ற கட்டணத்தில் ஒரு படகை (Boat) வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த ஏரியில் பயணம் செய்து அங்குள்ள இரண்டு தீவுகளின் (Two Islands) அழகையும் ரசிக்கலாம்.
இந்த பகுதி உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment