துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, November 5, 2011

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ப்ருஜ் கலிபா எனும் ப்ருஜ் துபாய்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
ப்ருஜ் கலிபா எனும் ப்ருஜ் துபாய்
(Read Original Article in :- Burj Khalifa (Burj Dubai), UAE )


புர்ஜ் கலிபா (Burj Khalifa ) என்பதை முன்னர் புர்ஜ் துபாய் (Burj Dubai) என பெயரிட்டு இருந்தார்கள். உலகிலேயே மிக அதிக உயரமான கட்டிடம் UAE யின் ( United Arab Emirates) துபாய் நகரில் உள்ள இதுவே ஆகும். முழுவதுமே இயந்திரம் இல்லாமல் மனிதர்களால் கட்டப்படும் இந்த கட்டிடத்தின் உயரம் 828 மீட்டர்.
இந்த கட்டிடம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று கட்டப்படத் துவங்கியது. தைபெய் (Taipei) எனுமிடத்தில் உள்ள 509.2 மீட்டர் உயர கட்டிடத்தை விட அதிக உயரமான கட்டிடம் இது.
12 -08 -2007 அன்று இது உலகின் மிக உயர அதாவது 527.4 மீட்டர் உயர கட்டிடமான சியர்ஸ் டவர் அன்ட்டேன்னா (Sears Tower's antenna) வை விட அதிக உயரமான கட்டிடமாக ஆக மீண்டும் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று 553.33 மீட்டர் உயர கட்டிடமான டோரோண்டோவின் CN டவர் (CN Tower) கட்டிடத்தை விட உயரமான கட்டிடமாக ஆயிற்று. முடிவாக 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியன்று இந்த கட்டிடமே உலகின் மிக அதிக உயர கட்டிடமாக அமெரிக்காவில் 646.38 மீட்டர் உயரமாக இருந்த KVLY-TV மஸ்ட் எனும் கட்டிடத்தை விட அதிக உயரமாக ஆகியது. ஆனால் 1991 ஆம் ஆண்டு அந்த அமெரிக்க கட்டிடம் இடிந்து விழுந்தது.
துபாயின் இந்த மிக அதிக உயரக் கட்டிடம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதியன்று புர்ஜ் கலிபா எனும் பெயரில் திறந்து வைக்கப்பட்டது. சுமார் இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த இடம் துபாய் நாட்டின் புரனகரமாக உருவாகி உள்ளது. கட்டிடம் கட்ட மட்டும் US$1.5 பில்லியன் செலவு ஆகியது. அந்த புறநகர் பகுதி முழுவதையும் கட்டி முடிக்க US$20 பில்லியன் செலவு ஆகும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த கட்டிடத்திற்கான வரை படத்தை ஒவிங்க்ச்ஸ் அண்ட் மெரில் {Owings and Merrill (SOM)} என்ற நிறுவனத்தை சேர்ந்த அட்ரியன் ஸ்மித் (Adrian Smith ) என்பவர் தயாரித்து உள்ளார். அந்த நிறுவனத்தினரே தைபெய் 101 (Taipei 101 ) மற்றும் பெட்ரோனாஸ் டுவின் டவர்களைக் (Petronas Twin Towers) கட்டியவர்கள். இந்த செய்தியை வெளியிடும் சமயத்தில் ப்ருஜ் துபாயின் சதுர அடி நிலத்தின் விலை $4,000 அளவில் இருக்க ஆர்மானி ரேசிடன்சஸ் எனும் இடத்தில் உள்ள நிலத்தின் விலை சதுர அடிக்கு $3,500 ஆக உள்ளது.

புர்ஜ் துபாய் உள்ள இடத்தைக் காட்டும் படம் 
  

புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


ப்ருஜ் துபாய் தெரியுமாறு எடுக்கப்பட்ட படம்
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Hierakares (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Aheilner (GFDL)
படங்களுக்கான அனுமதி : Approval for the use of photos taken by Imre Solt can be found at Dubai Construction Update Part 7 Page 12 at Post 223. Imre Solt's exact statement is: "I, Imre Solt, put all my images found on the Dubai Construction Update sites on the GFDL (GNU Free Documentation License). I agree to the terms that my images may be freely redistributed and used, that they may be freely modified (and modified versions may also be freely redistributed and used), that any redistribution must include the full text of the GFDL itself, that the work (and modified versions of it) must be attributed to me (the creator), and that the images can be re-used for commercial purposes (as long as the use is under the terms of the GFDL and that the full text of the GDFL goes along with the work). I acknowledge that I cannot withdraw from this agreement." He gave this statement on 17 August 2007.

No comments:

Post a Comment