யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம்
சுந்தர்பன் சதுப்பு நிலக் காடு
(Read Original Article in :-
மரக் கிளைகளில் இருந்து வேர்கள் உண்டாகும் ஒரு வகை வெப்ப மண்டல மரக் காடு (Sundarbans Mangrove Forest) என்பது 140,000 ஹெக்டர் சதுப்பு நிலக் காட்டில் 'சுந்தர்பன்' (Sundarban) எனும் இடத்தில் அமைந்து உள்ளது. பங்களாதேஷில் (Bangladesh) உள்ள இதுவே உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடு (mangrove forests) ஆகும். 'கங்கை' (Ganges), 'பிரும்மபுத்ரா' (Brahmaputra) மற்றும் 'மேக்ஹ்னா' (Brahmaputra) என்ற மூன்று நதிகளும் வந்து வங்கக் கடலில் கலக்கும் பகுதியில் இது இயற்கையாக அமைந்து உள்ளது. இதை 'நேபில்ஸ்' (Napils) எனும் நகரில் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 முதல் 6 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன அமைப்பின் (World Heritage Committee ) அங்கத்தினர் கூட்டத்தில் 'பங்களாதேஷின்' யுனேஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Site ) அங்கீகரித்தார்கள்.
'சுந்தர்பன்ஸ்' என்ற இடம் சுற்றுப்புற சூழலுக்கு நல்ல உதாரணம் என்கிறார்கள். அங்கு மிருகங்களின் பல வகைகள் உள்ளன, 240 க்கும் மேற்பட்ட பறவைகள் (Birds) , பெண்கள் புலிகள் (Bengal Tigers) , இந்திய மலைப் பாம்பு (Indian Python) மற்றும் பல வகையான முதலைகள் (Crocodiles) உள்ளன என்பதைப் பார்த்த 'யுனெஸ்கோ' (UNESCO) அதை பாராட்டியது, அங்கீகரித்தது. அது மட்டும் அல்ல அந்த சதுப்பு நிலக் காட்டில் பல தீவுத் திட்டுகள் (Islets) , நீர் தேக்கங்கள், அலை பாய்ந்து ஓடும் தண்ணீர் நிலைகள் (tidal waterways) , அடர்ந்த மண் புத்துக்கள் (Mudflats) போன்ற பலவும் உள்ளன, அடர்ந்த சதுப்பு நிலக் காட்டு மரங்கள் அங்குள்ள நீரின் உப்புத் தன்மையினால் பாதிக்கப்படாமல் வளர்ந்து வருகின்றன என்பதெல்லாம் போற்றப்படவேண்டிய விஷயம் என அந்த நிறுவனம் கருதியது.
சுந்தர்பன்னில் படகு
Author: Frances Voon (Creative Commons Attribution 2.0)
சுந்தர்பன்னில் மண் புற்றுக்கள்
Author: bri vos (Creative Commons Attribution 2.0)
சுந்தர்பன்னில் சூரிய அஸ்தமனக் காட்சி
Author: joiseyshowaa (Creative Commons Attribution 2.0)
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 21 56 60 E 89 10 59.988அங்கீகாரம் பெற்ற வருடம் : 1997
பிரிவு : Natural
தகுதி : IX, X
சுந்தர்பன் என்ற பெயர் வந்ததின் காரணம்
(Etymology)
'சுந்தர்பன்' என்ற பெயர் வந்ததின் காரணம் பலவாக இருந்தாலும் 'பெங்காலி' (Bengali) மொழியில் 'சுந்தர்பன்' என்றால் அழகியக் காடு (beautiful jungle) என்று பொருளாம். இன்னொரு காரணம் அங்கு சுந்தரி என்ற மரம் மிகவும் அதிகமாம். மூன்றாவது காரணம் 'சுந்தர்பன்' என்றால் கடல் காடு என்று அர்த்தம். ஆகவேதான் இந்த இடத்தின் பெயர் 'சுந்தர்பன்' என ஆகியதாம்.
அங்கு எப்படி செல்லலாம்
(Visiting Sundarban )
இந்த இடத்தை சென்று பார்க்க 'டாக்காவில்' (Dhaka) தங்கி இருந்து அந்த ஹோட்டல் மூலம் உங்கள் வசதிக்கேற்ப பயண திட்டத்தை தேர்வு செய்து அவர்கள் மூலம் செல்வது சிறந்தது. அல்லது நீங்கள் தனிப்பட்ட முறையில் அங்கு செல்ல மாவட்ட காட்டிலாகா அதிகாரி, சர்கியூட் ஹவுஸ், குல்னா என்ற இடத்தில் உள்ள அதிகாரியிடம் இருந்து அனுமதி பெற்றுக் கொண்டு ஒரு படகை 'மோங்க்லா' (Mongla) அல்லது 'தங்மாரி' (Dhangmari) போன்ற இடங்களில் இருந்து ஏற்பாடு செய்து கொண்டு அந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம். 'டாக்காவில்' உள்ள ஹோட்டல்களின் விவரம் அறிய அதன் மீதே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment