வெனிஸ் நகரின் முக்கிய இடங்கள்
'செயின்ட் மார்க் ஸ்கொயர்'
(Read Original Article in :- Saint Mark Square)
'செயின்ட் மார்க் ஸ்கொயர்'
(Read Original Article in :- Saint Mark Square)
'செயின்ட் மார்க் ஸ்கொயர்' (St. Mark's Square) வெனிஸ் நகரில் உள்ள திறந்த வெளி மைதானம். 'சிச்டேரி ஆப் சான் மார்கோ' (sestiere of San Marco) எனும் இடத்தில் உள்ள 'செயின்ட் ஸ்கொயர்' (St Mark's Square) என்பதை 'பிஸ்ஸா சான் மார்க்கோ' (Piazza San Marco) அல்லது பிஸ்ஸா (Pizza) அல்லது திறந்தவெளி என்பதைக் குறிக்கும் 'காம்பி' (Campi) என அழைகின்றார்கள்.
'செயின்ட் ஸ்கொயர்' உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும் .
'வெனிஸ்' நகருக்கு வருபவர்கள் முதலில் 'வாட்டர் பிரண்ட்' (waterfront) என்ற இடத்திற்கு சென்றப் பின் அங்கிருந்து 'பியாசிட்டா சான் மார்கோவிற்கு' (Piazetta San Marco) சென்றுவிட்டு 'பிஸ்ஸா சான் மார்க்கோ'விற்குச் செல்கிறார்கள். போகும் வழியில் 'சான் மார்கோ' மற்றும் 'சான் டியோடரோ' (Columns of San Marco and San Teodoro) என்ற இரண்டு தூண்களை காணலாம். 'சான் மார்கோ'வில் 'வெனிஸ்' நகரைக் குறிக்கும் விதத்தில் இறக்கைகளைக் கொண்ட 'சிங்க' உருவையும் (a winged lion) , 'சான் டியோடரோ' தூண் மீது வெனிஸ் நகரின் புகழ்பெற்ற 'டியோடரோ' துறவியின் (Patron Saint) சிலையையும் பார்க்கலாம்.
அந்த இரண்டு தூண்களையும் கடந்து செல்லும்போது இடதுபுறம் 'சான்சொவினோ' வாசக சாலையையும் (Sansovino Library), வலது புறம் டோகி அரண்மனையையும் (Doge's Palace) வரும். அங்கிருந்து 'செயின்ட் மார்க் ஸ்கொயருக்கு' வந்தால் முக்கியமான 'செயின்ட் மார்க் பேசிலிக்கா'வைப் (St. Mark's Basilica) பார்க்கலாம். அதன் இடதுபுறம் உள்ளதே 'செயின்ட் மார்க் கம்பனைல்" (St Mark's Campanile) எனும் பேசிலிக்காவின் மணிக் கூண்டு.
'செயின்ட் மார்க் ஸ்கொயர்'ரின் மூன்று பக்கங்களிலும் கடைகள், உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் (Arcades Cafes,dining) உள்ளன. 'செயின்ட் மார்க்கின்' மணிக் கூண்டுக்கு (Clock Tower) எதிரில் ஒரு வளைவு (Arch) தெரியும். அது 'வெனிஸ்' நகரின் முக்கியக் கடைவீதியான 'மெர்சிரிக்குச்' (Mercerie) செல்லும் பாதை ஆகும்.
'செயின்ட் மார்க் ஸ்கொயரின்' வடக்கு பக்கத்தில் உள்ளது வளைவான தோற்றம் தரும் மூடிய நடைபாதையான 'ப்ரோக்குரடி வெச்சி ' என்பது. 'செயின்ட் மார்க் ஸ்கொயரின்' தென் புறத்தில் உள்ளது 'ப்ரோக்குரடி நுவ்வே' (Procuratie Nuove). அதனுள் உள்ளது வெனிஸ் நகர புராதான சின்னங்களின் கலைக் கூடம் (Archaeological Museum of Venice). அது போல 'செயின்ட் மார்க் ஸ்கொயரின்' மேற்கு பக்கத்தில் உள்ள 'நேபோலேனிக் விங்' (Napoleonic Wing) என்ற இடத்தில் உள்ளது 'கோரர் மியூசியம் ' (Correr Museum) .
No comments:
Post a Comment