இத்தாலியின் வடகிழக்குப் பகுதி
பிரியுலீ வெனின்சியா ஜியூலியா
(Read Original Article in :-Friuli-Venezia-Giulia)
பிரியுலீ வெனின்சியா ஜியூலியா
(Read Original Article in :-Friuli-Venezia-Giulia)
பில்லா வாலி - பிரியுலீ வெனின்சியா ஜியூலியா
Author: Johann Jaritz (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Johann Jaritz (Creative Commons Attribution 3.0 Unported)
'பிரியுலீ வெனின்சியா ஜியூலியா' என்பது 'இத்தாலி'யின் வடகிழக்குப் பகுதியாகும். இது 'இத்தாலி'யில் உள்ள இருபது மாகாணங்களில் ஒன்று. 'இத்தாலி'யில் உள்ள நகரங்களில் இது மட்டுமே தனது சர்வதேச எல்லையை 'ஸ்லோவானியா' (Slovenia) நாட்டுடன் வைத்து உள்ளது. மேலும் வடக்கில் இதன் எல்லை 'ஆஸ்த்ரியா' (Austria) நாட்டுடன் இருக்க மேற்கு எல்லை 'வேனேடா('Veneto) மாகாணத்துடன் உள்ளது.
'பிரியுலீ வெனின்சியா ஜியூலியா' 'இத்தாலியின்' ஐந்தாவது மிகச் சிறிய மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 7,858 சதுர கிலோமீட்டர் (3,034 sq mi) மற்றும் ஜனத்தொகை 1.2 மில்லியன் . இதன் தலை நகரம் திருஸ்டி (Trieste) என்பது.
'பிரியுலீ வெனின்சியா ஜியூலியா' 'இத்தாலியின்' ஐந்தாவது மிகச் சிறிய மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 7,858 சதுர கிலோமீட்டர் (3,034 sq mi) மற்றும் ஜனத்தொகை 1.2 மில்லியன் . இதன் தலை நகரம் திருஸ்டி (Trieste) என்பது.
லா சீஸ்தா டி பார்கோலா
Author: Tiesse (public domain)
'பிரியுலீ வெனின்சியா ஜியூலியா' நான்கு பகுதிகளாக- ஜோரிசியா (Gorizia), போர்டேனன் ( Pordenone), திருஸ்டி(Trieste) மற்றும் உடைன் (Udine) - என அமைந்து உள்ளது. வடபுறம் முழுவதும் மலைகள் சூழ்ந்த பிரதேசம். அதன் முடிவில் உள்ளது ஆல்ப்ஸ் மலை தொடர்ச்சி. இங்குள்ள மிக உயரமான மலையின் அளவு கடல் மட்டத்தில் இருந்து 2,700 மீட்டர். அந்த மலைப் பகுதி தெற்கில் உள்ள 'ஸ்லோவானியா' வரை விரிந்துள்ள சிறிய மலை குன்றுகள் உள்ள பகுதி. இந்த இடம் 'வைன்' எனும் மதுபானத் தயாரிப்புக்குப் பெயர் பெற்ற இடம். இதன் மத்தியப் பகுதி விவசாய நிலம். தெற்கு புறத்தின் கடைசிப் பகுதி 'ஐசான்சோ'(Isonzo) என்ற நதியினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அந்த நதியின் மேற்குப் பக்கத்தில் உள்ள பகுதி ஆழமில்லாத (Shallow) மணல் பரப்பாக (Sandy) இருக்க கிழக்குப் பகுதி உயரமாகவும், செங்குத்தாகவும் நீண்டு உள்ள பாறைகளைக் (Cliffs) கொண்ட மலைப் பகுதியாகவும் உள்ளது. 'பிரியுலீ வெனின்சியா ஜியூலியா' பகுதியில் உள்ள பெரும்பாலோனோர் இத்தாலிய மொழியே பேசினாலும் அவர்கள் உள்ளூர் மொழியான பிரியுலீயன் (Friulian) மொழியையும் பேசுகிறார்கள். 'திருஸ்டி' பகுதியில் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் 'ஸ்லோவாகியா' மொழியை பேசுகிறார்கள்.
பிஸ்ஸா யுனிடாடி இட்டாலியாவின் திருஸ்டி நகர ஹால்
Author: Zinn (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Zinn (Creative Commons Attribution 3.0 Unported)
பிரியுலீ வெனின்சியா ஜியூலியாவை
சுற்றி உள்ள இடங்கள்
(Places of Interest in Friuli-Venezia Giulia)
(1) திருஸ்டி- மாவட்ட தலை நகர்
(Trieste regional capital )
(2) சிவிடேல் டெல பிரியுலீ
(Cividale del Friuli)
(3) ஜோரிஜியா
(Gorizia)
(4) கிராடோ
(Grado)
(5) லிக்நானோ
(Lignano)
(6) போர்டினன்
(Pordenone)
(7) சான் டானிலி டெல் பிரியுலீ
(San Daniele del Friuli)
(8) ஸ்ப்லிம்பெர்கோ
(Spilimbergo)
(9) உடைன்
(Udine)
சுற்றி உள்ள இடங்கள்
(Places of Interest in Friuli-Venezia Giulia)
(1) திருஸ்டி- மாவட்ட தலை நகர்
(Trieste regional capital )
(2) சிவிடேல் டெல பிரியுலீ
(Cividale del Friuli)
(3) ஜோரிஜியா
(Gorizia)
(4) கிராடோ
(Grado)
(5) லிக்நானோ
(Lignano)
(6) போர்டினன்
(Pordenone)
(7) சான் டானிலி டெல் பிரியுலீ
(San Daniele del Friuli)
(8) ஸ்ப்லிம்பெர்கோ
(Spilimbergo)
(9) உடைன்
(Udine)
No comments:
Post a Comment