யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
மிர் காஸ்டேல் காம்ப்லெக்ஸ்
(Read Original Article in :- Mir Castle Complex )
மிர் காஸ்டேல் காம்ப்லெக்ஸ்
(Read Original Article in :- Mir Castle Complex )
மிர் காஸ்டேல் காம்ப்ளெக்ஸ்
பெலருஸ்சில் (Belarus) 'மிர் காஸ்டேல் காம்ப்ளெக்ஸ்' ( Mir Castle Complex) என்ற முன்னாளைய அரண்மனை வளாகம் உலக புராதான சின்ன அங்கத்தினரின் 24 வது சபைக் கூட்டத்தில் (World Heritage Committee) யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site ) அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. முதலில் அமைந்த ஐரோப்பிய பாணி அரண்மணைக் கட்டிடங்கள், அடுத்தடுத்து ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களின் (cultural influences) தாக்கதை எடுத்துக் காட்டும் விதத்தில் அதோடு சேர்ந்து கட்டப்பட்ட கட்டிடங்களில் பழைய கலையுடன் ஒன்றிணைந்து காணப்படும் மாற்றுக் கலை போன்றவற்றினால் அந்த வளாகம் இப்படியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆக 'மிர் காஸ்டேல்' வளாகம் பல நிலைகளில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களை ஒன்றிணைத்துக் (cultural coalescence) காட்டும் ஒரு கட்டிட கலை வளாகமாக உள்ளது.
'மிர் காஸ்டேல்' என்பது முதலில் 15 ஆம் நூற்றாண்டில் (15th Century) கோதிக் கலையில் (Gothic Style) கட்டப்பட்டது. பின்னர் அதோடு சேர்ந்து கட்டப்பட்ட கட்டிட அமைப்பு கலாச்சார மறுமலர்ச்சி (Renaissance ) மற்றும் மிதமிஞ்சிய சித்திர வேலைபாடுகளுடன் (Boroque) காணப்பட்டன. அடுத்த நூறு ஆண்டுகள்- நேபோலியன் ஆட்சி காலத்தில் - அதை அப்படியே விட்டு விட அந்தக் கட்டிடங்கள் நலிந்து இடிந்து விழும் நிலைக்கு (run down and dilapidated) சென்றுவிட்டன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் அதை மீண்டும் புதுப்பித்து அடுத்த காலத்தைய (contemporary elements) கலை அமைப்பையும் பழமைக் கால கலையுடன் ஒன்றிணைத்து கட்டினார்கள்.
மிர் காஸ்டேல் காம்ப்ளெக்ஸ் (2005)
Author: Alex Zelenko (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Alex Zelenko (Creative Commons Attribution ShareAlike 3.0)
மிர் காஸ்டேல் காம்ப்ளெக்ஸ் (2005)
Author: Alex Zelenko (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Alex Zelenko (Creative Commons Attribution ShareAlike 3.0)
வரலாறு
(History)
இந்த வளாகம் பலரது கைகளுக்கு மாறியது. 15 ஆம் நூற்றாண்டில் கட்டத் துவக்கி, 16 ஆம் நூற்றாண்டில் முடிந்த இந்தக் கட்டிடத்தை முதலில் 'டியூக் இல்லின்ச்' (Duke Illinch) என்பவரே கட்டினார். 1568 ஆம் ஆண்டு இளவரசர் 'மிகோலாஜ் கிரைஸ்டோப் ராட்ஸ்சிவில் தி ஆர்பன்' ( Prince Mikołaj Krzysztof Radziwiłł the Orphan) என்பவர் இதன் சொந்தக்காரராக (Owner) ஆனார் . பின்னர் இந்த அரண்மனையின் கிழக்கு மற்றும் வடக்கு சுவர் பகுதிகளில் மூன்று அடுக்கு கட்டிடங்களை (three-storey palace) இதனுடன் சேர்த்து மறுமலர்ச்சிக் கால கலையில் (Renaissance Style) கட்டினார். நெப்போலியன் ஆட்சி காலத்தில் சுமார் 100 ஆண்டுகள் அது கேட்பார் அற்றுக் கிடந்தது. 1786-1813 காலத்தை சேர்ந்த இளவரசர் 'டொமினிக் ஹைரோனிம் ராட்ஸ்சிவில்' {Prince Dominik Hieronim Radziwiłł} மறையும் வரை அதாவது 1813 ஆம் ஆண்டுவரை இந்த கட்டிடங்கள் 'ராட்ஸ்சிவில்' குடும்பத்தினரிடம் இருந்தது. அதன் பின் 1799-1866 ஆண்டுகளில் இந்த 12000 சதுர கிலோமீட்டர் வளாகம் மறைந்த இளவரசரின் மகளான இளவரசி 'கரோலின் ஸ்டிபானியா ராட்ஸ்சிவில் ' {Princess Caroline (Stefania) Radziwiłł} என்பவரை மணந்து கொண்ட 'இளவரசர் லுட்விக் அடால்ப் பிரிட்ரிச் ஆப் சேன் விட்ஜென்ஸ்டைன் (Prince Ludwig Adolf Friedrich of Sayn-Wittgenstein ) என்ற ஜெர்மானிய பூர்வீகத்தைக் கொண்ட ரஷ்ய செல்வந்தரிடம் இருந்தது. அவர்களுக்குப் பிறந்த 'மரியா' (Maria) என்பவள் முதலில் ஜெர்மானிய பல்கலை கழக துணை வேந்தராக (Chancellor of Germany) இருந்தவரும் பின்னர் 'ப்ரச்ஷியா' (Prussiya) நாட்டின் பிரதமருமாக ஆன 'இளவரசர் ச்லோட்விக் ஹோஹென்லோஹி ஸ்சில்லிங்கிஸ்புர்ட்' (Prince Chlodwig Hohenlohe-Schillingsfürst) என்பவரை மணந்து கொள்ள, 1819-1901 ஆண்டுகளில் இந்த வளாகம் அவர்கள் வசம் சென்றது . அவர்களுடைய புதல்வர் (Son) 'மாரிஸ் ஹோஹென்லோஹி ஸ்சில்லிங்கிஸ்புர்ட்' (Maurice Hohenlohe-Schillingfürst) என்பவர் இந்த வளாகத்தை 1833-1898 ஆண்டுகளில் ஆட்சி செய்த ரஷ்யாவை சேர்ந்த தளபதியும் (Colonel) அரசியல்வாதியுமான (Politician) 'இளவரசர் நிகோலாய் இவானோவிச் ஸ்வியாடோபோல்க் மிர்ஸ்கி' (Prince Nikolai Ivanovitch Sviatopolk-Mirski) என்பவருக்கு விற்றுவிட்டார். அவர் இந்த வளாகத்தை 'டியொடார் புர்ஸ்சீ' (Teodor Bursze) என்றக் கட்டிடக் கலை அமைப்பாளரை வைத்து சீரமைப்பு செய்து கொண்டார். 1939 ஆம் ஆண்டுவரை 'ஸ்வியாடோபோல்க் மிர்ஸ்கி' குடும்பத்தினர் கையில் இருந்த இந்த வளாகத்தை நாசி (Nazi) படையினர் பிடித்துக் கொண்டார்கள்.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 53 27 03.9 E 26 28 21.8
அங்கீகாரம் பெற்ற வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : II, IV
இந்த வளாகம் உள்ள இடம்
(Location)
இந்த வளாகம் 'கரிலிச்சி' மாவட்டத்தின் (Karelichy District) 'மிர்' (Mir) நகரில் ராட்ஸ்சிவில் குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்த யுனெஸ்கோ புராதான சின்னமான இன்னொரு அரண்மனை 'நேஸ்விச் காஸ்டேல்' (Nesvizh Castle ) என்பதின் வடமேற்குப் பகுதியில் 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .
இந்த இடம் உள்ள தரைப் படத்தை பெரியதாகக்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
Very nice to know that this page can be translated from Tamil to English. Thank you very much for recognising my Family History.
ReplyDeleteVery nice to know that this page can be translated from Tamil to English. Thank you very much for recognising my Family History.
ReplyDeleteThanks so much madam for the comments
ReplyDelete