பெல்ஜியம் - லியூயென்
இங்கு தரப்பட்டு உள்ள 'லியூயென்' (Leuen) சுற்றுப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு பெரும் அளவு உதவியாக இருக்கும். 'லியூயென்' (French: Louvain, German: Löwen) நகரம் 'பெல்ஜியத்தின்' (Belgium) 'ப்ளெமிஷ்' (Flemish) வட்டாரத்தில் உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 56.63 சதுர கிலோமீட்டர். 2011 ஆண்டின் கணக்குப் படி இந்த நகரின் ஜனத்தொகை 91,000 . 'ப்ளெமிஷ் ப்ரபான்ட்' என்ற மாவட்டத்தின் தலை நகர் 'லியூயேன்'. The city is about 30 km to the east of ப்ருச்சில்ஸ்சில் (Brussels) இருந்து கிழக்கப் புறமாக 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நகரம் உள்ளது. இந்த நகருக்கு ரயில் அல்லது சாலை வழியிலும் செல்லலாம்.
உலகின் மிகப் பெரிய 'பீர் மதுபான' (Beer) தயாரிப்புத் தொழில்சாலையான (Company) 'ஆன்ஹியூசெர் புஷ் இன் பீவ்' (Anheuser-Busch InBev) என்பது 'லியூயென்' நகரில்தான் உள்ளது. மிகப் பழைய காலத்தைய, மிகப் பெரிய ஆனால் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வரும் 'லியூயேன் கதோலிக் பல்கலைக் கழகமும்' (Catholic University of Leuven) இங்குதான் உள்ளது.
'லியூயேன்' நகர வரலாறு AD ௮௯௧காலத்தை சேர்ந்தது. அந்த கால கட்டத்தில்தான் 'லியூயேன்னில்' நடைபெற்ற யுத்தத்தில் விகிங்க்ஸ் (Vikings) என்பவர்களை 'கரின்தியாவை' (Carinthia) சேர்ந்த 'ஆர்னுல்ப்' (Arnulf) என்ற 'ப்ரான்கிஷ்' (Frankish) இன மன்னன் தோற்கடித்தான். அப்போது இந்த நகரத்தின் பெயர் 'லோவென்' (Loven) என்று இருந்தது. 11 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளில் இந்த நகரம் வியாபார கேந்திரமாக ( Trading Center) விளங்கியது. முக்கியமாக துணிகளின் தயாரிப்பில் முன்னணியில் (Textile manufacturing) இருந்தது. இங்கு நெய்யப்பட்ட துணிகள் அந்த நகரின் புகழ் மிக்கப் பெயரால் 'லிவைன்' (lewyn) என அறியப்பட்டது. இங்குள்ள கத்தோலிக்க பலகலைக் கழகம் 1425 ஆம் ஆண்டு உருவாயிற்று. இதுவே கீழ் நாடுகளில் (Low Countries) உருவான மிகப் பெரிய பலகலைக் கழகமாக இருந்தது.
முதலாம் உலக யுத்தத்தின்போது (World War I )ஜெர்மானியர்கள் இந்த நகரின் பல கட்டிடங்களை அழித்தார்கள். ஆனால் யுத்தம் முடிந்தப் பின் அதற்கு நஷ்ட ஈட்டை (Indementies) ஜெர்மானியர்கள் கொடுக்க வேண்டியதாயிற்று.
லியூயேன் செல்ல வேண்டுமா
(Visiting Leuven )
முதலில் 'ப்ருச்சில்ஸ்' விமான நிலையத்துக்கு {(Brussels Airport (BRU) } சென்றடைந்தப் பின் அங்கிருந்து இருந்து ரயில் (Train) மூலம் இங்கு செல்லலாம். விமான நிலையத்தில் இருந்து சுமார் 13 நிமிடங்களில் இந்த நகர மையத்தை அடையலாம். வாகனம் மூலம் (Taxi) சென்றால் 20 நிமிடம் பிடிக்கும். ஆனால் நீங்கள் குறைந்தக் கட்டண விமான சேவைகள் மூலம் (Low Cost Carriers) 'ப்ருச்சில்ஸ்'சின் சார்லோ விமான நிலையத்தை வந்தடைந்தால் {Brussels South Charleroi Airport (CRL)} , விமான நிலையத்தில் இருந்து ஒரு பஸ்ஸை (Bus) பிடித்துக் கொண்டு சார்லோய் (Charloi) ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ரயிலைப் பிடித்துக் கொண்டு நகரை அடையலாம். மொத்தப் பயணகே கட்டணம் €11.40 , அதற்க்கு பிடிக்கும் நேரமோ 30 நிமிடங்களே.
லியூயேனில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to Visit in Leuven)
(1) போச்ப்ளின்
(Fochplein)
க்ரோடி மார்கெட்டின் பக்கத்தில் உள்ளது. இங்கு பல விதமான பொருட்கள் கிடைக்கும்.
(2) க்ரூட் பெகிஞ்ச்ஹோப்
(Groot Begijnhof)
1230 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஏழைகள், முதியோர் என அனாதைகள் தங்கும் 'பெகுநெஜெஸ்' (béguinages) எனப்படும் வீடுகள்.
(3) க்ரோடி மார்கெட்
(Grote Markt)
அவுடி (Oude Market) டிற்கு அருகில் வரிசையாக உள்ள மத்திய காலத்தை சேர்ந்த கட்டிடங்கள்.
(4) M வான் மியூசியம், லியூயேன்
(M van Museum Leuven)
17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலைக் கட்டிடத்தில் உள்ள அறைகள் பல்வேறு காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
(5) அவுடி மார்கெட்
(Oude Markt)
அற்புதமான மார்கெட் ஸ்கொயர் . பரம்பரை பரம்பரையாக உள்ள கட்டிடங்களை சுற்றிலும் கொண்டது.
(6) ஸ்டேடுயிஸ்
(Stadhuis)
1439 மற்றும் 1463 ஆண்டுகளில் அந்த நகரின் வியாபார வளர்ச்சி அமோகமாக இருந்தபோது கட்டப்பட்டு உள்ள டவுன் ஹால்.
(7) செயின்ட் பெடேர்ஷேர்க் சர்ச்
{St-Pieterskerk (St. Peter's Church)}
லியூயெனின் முக்கியமான தேவாலயம். மார்கெட் ஸ்கொயாரின் அருகில் உள்ளது.
No comments:
Post a Comment