பெல்ஜியம் - லைகே
(Read Original Article In :- Liège )
லைகே
Author: Jrenier (public domain)
இங்குள்ள 'லைகே' (Liège) சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
'லைகே' (Dutch: Luik, English, now uncommon: Luick, Walloon: Lidje, German: Lüttich, Latin: Leodium) என்பது வால்லோனியப் (Wallonia) பகுதியில் பிரேன்ச் (French) மொழி பேசும் மக்கள் நிறைந்த பகுதி. இதன் பரப்பளவு 69.39 சதுர கிலோ மீட்டர். 2011 ஆம் ஆண்டுக் கணக்கின்படி இதன் ஜனத்தொகை 187,000 . இந்த மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 1,879 சதுர கிலோமீட்டர் மற்றும் ஜனத்தொகை 750,000. இந்த நகரத்தின் நேரம் மத்திய ஐரோப்பிய நாடுகளின் பொதுவான நேரத்தை (Central European Time) விட ஒரு மணி நேரம் அதிகம் (UTC+1). வெய்யில் காலத்தில் இது இரண்டு மணி நேரம் அதிகமாக (UTC+2) உள்ளது.
எக்லிசி டியூ சேக்ரி கொயூர் டி கொயிண்டி
'லைகே' நகர் 'மியூஸ்' நதியின் (Meuse River) பள்ளத்தாக்கில் (Valley) உள்ளது. இதன் எல்லைகள் 'நெதர்லாந்' (Netherlands) மற்றும் 'ஜெர்மனி'யுடன் (Germany) உள்ளது. இந்த நகரின் அருகில்தான் மியூஸ் நதி ஓர்தி நதியை (Ourthe river) சந்திக்கின்றது.
'வால்லோனியா'வில் உள்ள நகரங்களில் 'சார்லிரோய்' (Charleroi) என்ற நகருக்கு அடுத்தபடியாக 'லைகே' நகரில்தான் ஜனத்தொகை மிகவும் அதிகம். இந்த மாகாணத்தில் 'லைகே'தான் பொருளாதார மற்றும் கலைகளில் புகழ் பெற்ற நகரம் ஆகும். இங்கு உள்ள தொழில்சாலைகளில் எஃகு தொழில்சாலை (steel making), ஏரோஸ்பேஸ் (aerospace), தகவல் தொடர்ப்பு (information technology), உயிரித் தொழில்நுட்பம் ( biotechnology ), தண்ணீர், பீர் மற்றும் சாக்கலேட் (water, beer and chocolate) போன்றவை செய்யும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
வாகனங்கள் மூலம் பொருட்களை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் 'பெல்ஜியத்தின்' மிகப் பெரிய மையம் இது. இந்த நகரம் ஐரோபியாவின் மூன்றாவது பெரிய நதித் (River port) துறைமுகம் உள்ள இடம் மட்டும் அல்ல, இது எட்டாவது சரக்குகளை (Cargo) ஏற்றிச் செல்லும் பெரிய விமான நிலையம்.
லைகேவிற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Liège)
'லைகே'யிற்கு நேரடியாகச் செல்ல 'லைகே' விமான நிலையம் {Liège Airport (LGG)} உள்ளது. அங்கிருந்து பொதுஜனப் பயண (Public Bus) பஸ்களில் ஏறி எளிதில் நகருக்கு செல்லலாம். 'ப்ருச்சில்ஸ்' (Brussils) , 'பாரிஸ்' (Paris ), 'ஆச்சேன்' (Aachen), 'கோலன்' (Cologne) மற்றும் 'பிரான்க்பர்ட்' (Frankfurt) போன்ற நகரங்களில் இருந்து அதி வேக (High Speed) ரயில்களும் இந்த நகருக்குச் செல்கின்றன.
லைகேயில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to visit in Liège)
அக்வோரியம் மியூசியம்
(Aquarium-Muséum )
2500 விதமான மிருகங்களின் எலும்புக் கூடுகளையும் , அந்த மிருகங்களின் தோலை பதப்படுத்தி அவற்றின் நிஜ உருவங்களை படைத்துக் காட்சியாக வைத்து உள்ளார்கள்.
அக்வோரியம் மியூசியம்
Author: Vassil (public domain)
ஆர்ச்சிபோரம்
(Archéforum)
செயின்ட் லம்பார்ட் (St.Lambart) பகுதியில் ரோமர்கள் (Roman) காலத்தில் இருந்து கிடைத்த புராதான சின்னப் பொருட்களை (archaeological) காட்சியகமாக பூமிக்கு அடியில் (Underground) அமைத்துள்ள மியூசியத்தில் வைத்து உள்ளார்கள்.
கதீட்ரல் செயின்ட் பால்
(Cathédrale St-Paul)
தேவாலயம் 1794 ஆம் ஆண்டு 'செயின்ட் லம்பார்ட்' (St.Lambart) என்ற தேவாலயம் இடிக்கப்பட்டு (Destroyed) 600 ஆண்டுகளுக்குப் (six centuries) பின்னர் அதாவது 13 ஆம் நூற்றாண்டில் 'கதீட்ரல் செயின்ட் பால்' என்ற அதே இடத்தில் அமைக்கப்பட்டது.
கிறிஸ்டல் பார்க்
(Cristal Park)
'கிரிஸ்டில்லேரி டியூ வல் செயின்ட் லம்பேர்ட்' (Cristallerie du Val St Lambert) என்ற கண்ணாடி தொழில்சாலையினர் (glass manufacturer ) இந்த இடத்தில் கண்ணாடிப் பண்டங்களை உருவாக்குவது, கண்ணாடிகளை வெட்டி அதில் வேலைபாடுகளை (glass blowing, cutting and engraving) செய்வது போன்றவற்றை இங்கு கற்றுத் தருகிறார்கள்.
எக்லிஸ்சே - செயின்ட் - பார்திலேமி
(Église St-Barthélemy)
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்லூரி தேவாலயம் (Collegiate Church) . இதில் பல பணக் குவியல்கள் (Treasures) உள்ளன.
எக்லிச்சே செயின்ட் பார்திலேமி
எக்லிச்சே செயின்ட் ஜாக்விஸ்
(St-Jacques)
1514 முதல் 1538 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ள கண்ணைக் கவரும் கோதிக் கலையில் (Gothic Style) அமைந்த தேவாலயம்
கரே டி லைகே குய்லேமின்ஸ்
(Gare de Liège-Guillemins)
சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் 'லைகே'யின் ரயில் நிலையம். உலகின் முதலாவதான சர்வதேச ரயில் நிலையம் (international railway station) இங்குதான் துவக்கப்பட்டது . இங்கு அதி வேக ரயில்கள் (high-speed trains) செல்கின்றன.
லி பர்ரன்
(Le Perron)
பெரிய கல் தூண் நினைவுச் சின்னம். இதில் மேலெழும்பிப் பாயும் நீர்வீழ்ச்சி (Fountains) மற்றும் வேலைபாடுகளோடு கூடிய சிறு தூண்களோடு உள்ள கைபிடிகள் (balustrades) உள்ளன .
மிசன் டி லா மெட்டலர்ஜி எட் டி இன் இன்டஸ்ட்ரி
(Maison de la Métallurgie et de l'Industrie)
'லைகே'யின் முந்தய கால எஃகு தொழில்சாலை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை எடுத்துக் காட்டும் மியூசியம்
மியூசி டி ஆன்செம்போர்க்
(Musée d'Ansembourg)
'லைகே'யின் பர்னீச்சர் எனப்படும் மேஜை நாற்காலி (Furniture) போன்றவற்றை செய்யும் வேலை அமைப்பைக் காட்டும் மியூசியம்
மியூசி டி ஆர்ட் எட் டி ஆர்ட் காண்டேம்போரைன்
(Musée d'Art Moderne et d'Art Contemporain (MAMAC)
'பிகாஸ்சோ', 'சகல்', 'மொனெட்', மற்றும் 'குவ்குயின்' (Picasso, Chagall, Monet and Gauguin) போன்றவர்களின் படைப்புக்களை எடுத்துக் காட்டும் இடம். 1905 ஆம் ஆண்டு முதல் உள்ளது.
மியூசி டி லா வை வல்லோனே
(Musée de la Vie Wallonne)
நாடோடிக் கதைகள் (Folklore), உள்ளூர் வரலாறு போன்றவற்றை எடுத்துக் காட்டும் மியூசியம். பழைய கான்வென்ட் (Convent) கட்டிடத்தில் அமைந்து உள்ளது.
மியூசி டி ஆர்ட் வாலன்
(Musée de l'Art Wallon)
'லைகே'யின் சிலை வடிப்பமைப்பாளர் 'ஜீன் டெல குர்' (Jean Del Cour) மற்றும் ஓவியரான 'லம்பேர்ட் லம்பார்ட்' ( Lambert Lombard ) போன்றவர்களின் படைப்புகளை வைத்துள்ள கலைக் கூடம். 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
மியூசி கிராண்ட் கர்டியஸ்
(Musée Grand Curtius)
ஐரோபியாவின் பல இடங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட அலங்காரப் பொருட்களின் (decorative arts) கலைக் கூடம்
மியூசி டிசான்ட்சீஸ்
(Musée Tchantchès)
நல்ல அதிஷ்டத்தை தரும் (Mascot) என நம்பப்படும் மரபு வழி உடைகளுடனான (traditional costume) பொம்மைகளைக் (Puppet) கொண்ட மியூசியம்.
பலைஸ் டெஸ் பிரின்செஸ் எவிகியூ
( Palais des Princes-Évêques )
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இளவரசர் பிஷாப்பின் (Prince-Bishop) அரண்மனை. பலைஸ் டெஸ் பிரின்செஸ் எவிகியூ
பிளேஸ் - செயின்ட்- லம்பேர்ட்
(Place St-Lambert)
'லைகே'யின் மத்தியப் பகுதியில் உள்ள பெரிய மைதானம்.
No comments:
Post a Comment