பெல்ஜியம் - அன்ட்வேர்ப்
(Read Original Article in :- Antwerp)
(Read Original Article in :- Antwerp)
'அன்ட்வேர்ப்' (Antwerp) அல்லது 'அன்ட்வேர்பென்' (Antwerpen) என 'டட்ச்' மொழியில் கூறப்படும் இந்த நகரம் 'பெல்ஜியத்தின்' (Belgium) மிகப் பெரிய நகரம் ஆகும். 'ஸ்செல்ட்ச்' நதியின் (River Scheldt) வலதுக் கரையில் அமைந்து உள்ள இந்த நகரம் 204.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. நகரின் ஜனத்தொகை 461,000 (2011 ஆண்டு கணக்கின்படி ). ஒரு பெரிய மாவட்டத்தின் (Metropolitan) மத்தியில் அமைந்துள்ள இந்த நகரின் ஜனத்தொகை ஒரு மில்லியனைத் (One Million) தாண்டும். 'அன்ட்வேர்ப்' நகரம் 'அன்ட்வேர்ப்' மாவட்டத்தின் தலை நகரம் ஆகும். இந்த நகரத்தின் எல்லை 'நெதர்லாந்' (Netherland) நாட்டின் எல்லையை தொட்டபடி உள்ளது.
ஐரோபியாவின் 'ரோட்டர்டாம்' (Rotterdam) என்ற நகரத்தில் உள்ள துறைமுகத்தைப் (Sea Port) போல அதற்கு அடுத்த பெரிய துறைமுகப் பகுதியாக 'அன்ட்வேர்ப்' நகரம் உள்ளது. துறைமுகத்தை சார்ந்த தொழில்சாலைகள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்களின் (Petro Chemicals) கையாளுகைக் கட்டணங்களினால் 'அன்ட்வேர்ப்' நகரின் பொருளாதாரம் பெரும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில பத்தாண்டு காலங்களாக அங்கு குடியேறி இருந்த 'இந்தியாவை ' (India) சேர்ந்த நகை (Jewellary) வியாபாரிகள் அங்கு தொழில் முறை ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் உள்ளூரில் இருந்த யூதர்கள் (Jews) அங்கு நடந்து வந்த வணிகத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.
கதீட்ரல் ஆப் அவர் லேடி
Author: Ad Meskens (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Ad Meskens (Creative Commons Attribution 3.0 Unported)
'அன்ட்வேர்ப்' நகரம் ஒரு புராணக் கதையுடன் (Legend) சம்மந்தப்பட்டது. 'ஹான்ட் வேர்பேன்' (Hand Werpen) என்ற 'டட்ச்' சொல்லின் மூலமே இந்தப் பெயர் வந்தது. அதன் அர்த்தம் 'கையை தூக்கி ஏறி' என்பதாகும். பண்டைய காலத்தில் 'பிராடோ' (Brado) என்ற வீரன் அந்த நாட்டை துன்புறுத்தி வந்த கொடியவானின் கையை வெட்டி அருகில் இருந்த 'ஸ்செல்ட்ச்' நதியில் (River Scheldt) தூக்கி எறிந்து அவர்களைக் காப்பாற்றியதால் அப்படி ஒரு பெயர் வந்ததாம்.
'கலோ ரோமார்கள்' (Gallo-Roman) காலத்தில் இருந்தே மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்து வந்து உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக இரண்டாம் நூற்றாண்டை (2nd Century) உடைந்த மண்பானைகளின் சில்லுகள் (pottery shards) இங்கு கிடைத்துள்ளன. 7 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்ள, 10 ஆம் நூற்றாண்டில் 'ஸ்செல்ட்ச்' நதி அங்கு ஆட்சியில் இருந்த புனித ரோம மாமன்னர்களின் எல்லை (Frontier) ஆயிற்று.
16 ஆம் நூற்றாண்டில் ஸ்வின் (Zwin) நதி வற்றி வண்டலாக ஆனபோது 'அன்ட்வேர்ப்' நகருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. 1560 ஆம் ஆண்டுகளில் 'ஆல்ப்ஸ்' மலைகளின் (Alps) வடக்குப் பகுதியில் ஐரோபியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாக உருவெடுத்தது.
'கலோ ரோமார்கள்' (Gallo-Roman) காலத்தில் இருந்தே மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்து வந்து உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக இரண்டாம் நூற்றாண்டை (2nd Century) உடைந்த மண்பானைகளின் சில்லுகள் (pottery shards) இங்கு கிடைத்துள்ளன. 7 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்ள, 10 ஆம் நூற்றாண்டில் 'ஸ்செல்ட்ச்' நதி அங்கு ஆட்சியில் இருந்த புனித ரோம மாமன்னர்களின் எல்லை (Frontier) ஆயிற்று.
16 ஆம் நூற்றாண்டில் ஸ்வின் (Zwin) நதி வற்றி வண்டலாக ஆனபோது 'அன்ட்வேர்ப்' நகருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. 1560 ஆம் ஆண்டுகளில் 'ஆல்ப்ஸ்' மலைகளின் (Alps) வடக்குப் பகுதியில் ஐரோபியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாக உருவெடுத்தது.
அன்ட்வேர்ப்பில் கட்டிடங்கள்
Author: Piotr Kuczynski (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Piotr Kuczynski (Creative Commons Attribution 3.0 Unported)
1566 ஆம் ஆண்டு ஏற்பட்ட ரோமன் கதோலிகர்கள் (Catholics) மற்றும் ப்ரோடேஸ்டன்ட்ஸ் (Protestants) இடையிலான பிரிவினால் இந்த நகர் தெருக்களில் சண்டை துவங்க நெதர்லாந்தை (Netherland) சேர்ந்த 'ஹாஸ்பர்க்' (Habsburg Netherlands) மற்றும் 'ஸ்பானிய' (Spanish) அரசரான பிலிப் II (பிலிப்ஸ் II) என்ற மன்னர் இடையே நடந்த 'டட்ச்' விடுதலை யுத்தம் எட்டு (Eight) ஆண்டுகள் தொடர்ந்தது. 1648 ஆம் ஆண்டு ஏற்பட்ட 'முஸ்டேர்' (Muster) உடன்படிக்கையின்படி இது 'டட்ச்' அரசை சார்ந்ததாக ஒப்பந்தம் ஏற்பட 'ஸ்செல்ட்ச்' நதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதனால் அந்த தடை 1863 ஆம் ஆண்டு விலகும்வரை 'அன்ட்வேர்ப்'பின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது.
காரோலுஸ் போர்ரோமியுஸ் சர்ச் உல் தோற்றம்
Author: Ad Meskens (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Ad Meskens (Creative Commons Attribution 3.0 Unported)
1830 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நகர ஆட்சி 'பெல்ஜியத்தை' சேர்ந்த புரட்சியாளர்கள் கையில் விழுந்தது. 1831 ஆம் ஆண்டு விடுதலைப் பெற்ற இந்த நகரின் ஆட்சி 'லேபோர்ட்' I (Lepord I ) என்ற மன்னன் தலைமையில் அமைந்தது. 1920 ஆம் ஆண்டு இந்த நகரில் ஒலிம்பிக் போட்டி (Olympic) பந்தயங்கள் நடைபெற்றன. 1940 ஆம் ஆண்டு மே மாதம் (May) முதல் 1944 ஆம் ஆண்டுவரை செப்டம்பர் (September) மாதம்வரை இந்த நகரம் நாசி (Nazi) ஆட்சியாளர்கள் வசம் இருந்தது. இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது 1944 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசினர் இந்த நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார்கள். இங்கிருந்த துறைமுகத்தின் மீது ஜெர்மானியர்கள் (Germany) குண்டுமழை பொழிந்து அதை நாசப்படுத்தினார்கள். அந்த யுத்தத்தின்போது பெருமளவில் யூதர்கள் மரணம் அடைந்தாலும் பின்னர் மீண்டும் அவர்களின் ஜனத்தொகை பெருகியது.
அன்ட்வேர்பிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Antwerp)
(Visiting Antwerp)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'அன்ட்வேர்ப் விமான நிலையம்' { Antwerp Airport (ANR)}, அல்லது 'ப்ருச்சில்ஸ் விமான நிலையம்' {Brussels Airport (BRU)} அல்லது 'ஸ்ஷிபோல் விமான நிலையம்{Schiphol Airport (AMS)} போன்றவற்றில் எதிலாவது சென்று அங்கிருந்து டாக்ஸ்சி (Taxi) அல்லது பஸ்ஸில் (Bus) பயணம் செய்து நகரை அடையலாம். டாக்ஸ்சிக்கான கட்டணம் யூரோ 10 ஆகும்.
நகரின் உள்ளே பயணிக்க
(Exploring Antwerp )
(Exploring Antwerp )
நகருக்கு உள்ளே உள்ள இடங்களுக்கு செல்ல பஸ்ஸில் பயணம் செய்யலாம். பல முறை பயணம் செய்யும் வகைக்கான பயண சீட்டுக்கள் யூரோ €9 அல்லது 10 என்றக் கட்டணத்தில் கிடைக்கின்றன . ஒரே ஒரு முறை பயணம் செய்யக் கட்டணம் யூரோ €2.00 அதே பயணச் சீட்டில் ஒரு மணி நேரத்தில் எந்த இடத்துக்கும் மாறி மாறி எந்த பஸ்ஸில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
முக்கியமான சுற்றுலா இடங்கள்
( Places of Interest in Antwerp)
(1) அன்ட்வேர்ப் சென்ட்ரல் ஸ்டேஷன்
(Antwerp Central Station)
(2) அன்ட்வேர்ப் ஜூ
(Antwerp Zoo)
(3) அக்வோடோபியா
(Aquatopia)
(4) போரேண்டோரின்
(Boerentoren ("Farmer's Tower")
(5) போவுர்லா தியேட்டர்
(Bourla Theatre )
(6) பவுர்ச்ஸ்
(Bourse )
(7) காரோலுஸ் போர்ரோமஸ் சர்ச்
(Carolus Borromeus Church )
(8) காதேட்ரல் ஆப் யவர் லேடி
(Cathedral of Our Lady (Onze Lieve Vrouwekathedraal)
(9) சர்ச் ஆப் செயின்ட் பால்
(Church of St Paul )
(10) சீடி ஹால் அண்ட் மார்கட் ஸ்கொயர்
(City Hall & Market Square (Stadthuis/Grote Markt)
(11) டையமன்ட் டிஸ்ட்ரிக்ட்
(Diamond District )
(12) ஹெட் முன்ட்ப்லின்
(Het Muntplein)
(13) ஹெட் ஸ்டீன்
(Het Steen ("The Stone")
(14) ஜஸ்டிபலிஸ்
(Justitiepaleis (Palace of Justice)
(15) கொனின்க்ளிஜ்க் மியூசியம்
(Koninklijk Museum voor Schone Kunsten (Royal Museum of Fine Arts)
(16) மிட்டேல்ஹெயம் பார்க்
(Middelheim Park )
(17) முக்ஹா மியூசியம்
(MUHKA, the Museum of Contemporary Art )
(18) பிளான்டின் மோரிடச்ஸ் மியூசியம்
(Plantin Moretus Museum )
(19) செயின்ட் ஜேம்ஸ் சர்ச்
(St James' Church )
(21) ஜூதர்பெர்ஸ்ஹுஇஸ்
(Zuiderpershuis)
(22) ஜுரென்போர்க்
(Zurenborg )
No comments:
Post a Comment