யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்
(Read Orginal Article in :-
Struve Geodetic Arc)
ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்
(Read Orginal Article in :-
Struve Geodetic Arc)
'ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்' (Struve Geodetic Arc) என்பது 'ஐரோபியா'வின் (Europe) பத்து நாடுகளை முக்கோணம் போன்று மூன்று பகுதிகளாகப் (triangulations) பிரித்து ஆய்வு செய்யும் (Survey) ஒரு ஆய்வு மையம் ஆகும். இந்த இடத்தை 'ஜெர்மனி'யில் (German) பிறந்த 'ரஷ்ய' (Russian) விஞ்ஞானியான (scientist) 'பேடிரிச் ஜியோர்க் வில்ஹெம் வான் ஸ்ட்ருவே' (Friedrich Georg Wilhelm von Struve) என்பவர் 1816 முதல் 1855 ஆண்டு காலத்தில் அமைத்தார். ஆகவே அவர் பெயரால் இந்த இடம் அழைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி மையத்தின் முக்கியக் குறிக்கோள் பூமியின் சரியான அளவையும் அதன் தோற்றத்தையும் (exact size and shape of the earth) கண்டுபிடிப்பதே. முதலில் இதன் தொடர்ச்சி மையம் இரண்டு நாடுகளின் வழியே அதாவது 'சுவீடன்' (Sweden) முதல் 'நார்வே' (Norway) வழியாக 1814 முதல் 1905 வரையிலான ஆண்டிலும், ரஷ்ய ராஜ்ஜியத்தின் (Russian Empire) வழியே 1721 முதல் 1917 வரையிலான ஆண்டிலும் சென்றது.
இந்த மையத்தின் எல்லை 'நார்வே' (Norway), 'பின்லாந்' (Finland), 'எஸ்டோனோயா' (Estonia),'லடிவியா' (latvia) ,ஸ்வீடன் (Sweden), 'லிதுவானியா' (Lithuvania), 'ரஷ்ய' (Russia), 'மோல்டோவா' (Moldova) மற்றும் 'உக்ரைன்' (Ukrain) போன்ற பத்து நாடுகளைக் தாண்டிச் சென்றதினால் 'ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்'கை யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக ( UNESCO World Heritage Site ) 'தென் ஆப்ரிக்கா'வின் (South Africa) 'துர்பனில்' (Durban) 2005 ஆண்டு ஜூலை (July) மாதம் 10 ஆம் தேதி முதல் 17 ழாம் தேதி வரை நடைபெற்ற 29 ஆம் சபை கூட்டத்தில் உலக புராதான சின்ன அமைப்பு அங்கத்தினர்கள் (World Heritage Committee ) அங்கீகரித்தார்கள்.
அத்தனை நாடுகளின் விஞ்ஞானிகளும் அங்கு ஆண்ட பல பேரரசர்களும் ஒன்றிணைந்து இந்த விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சியில் மனப்பூர்வமாக பங்கு கொண்டதை (scientific collaboration) பாராட்டும் வகையிலேயே இந்த மையத்துக்கு உலக புராதான சின்னம் என்ற அங்கீகாரத்தை அளித்தார்கள். கீழ் உள்ள தரைப் படத்தில் அத்தனை மையங்களும் உள்ள இடங்கள் காட்டப்பட்டு உள்ளன.
இந்த தொடர் வரிசை நாட்டில் முதலில் மிக அதிக அளவிலான ஆராய்ச்சியை 'ஸ்ட்ருவே' மேற்கொண்ட இடம் இன்று 'எஸ்டோனியா'வில் உள்ள 'டர்டு' (Tartu) என்ற வானமண்டல சோதனை நிலையத்தில்தான். முடிவாக 2820 கிலோமீட்டர் தொலைவுக்கு பத்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ஆராய்ச்சிக்கு உட்பட்ட இடங்களை 258 முக்கோணப் பிரிவுகளாகவும் 265 புவி அளவியல் துணைகோள்களாகவும் பிரித்து ஆராய்ந்தார்கள். அந்த மைய தொடர் வரிசையின் தென்கோடி உக்ரைனின் (Ukrain) 'ஒடேஸா ஒப்லாஸ்ட்' (Odessa Oblast,) எனும் பகுதியில் உள்ள 'ஸ்டாரோ-நெக்ராஸ்சொவ்கா' (Staro-Nekrassowka in Odessa Oblast) என்ற இடத்திலும் வடகோடி அமைப்பு 'நார்வே' நாட்டின் 'பகல்நெஸ்'சிலும் (Fuglenes) அமைந்தது.
ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க் , டர்டு ஆராய்ச்சி மையம்
Author: Oth (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Oth (Creative Commons Attribution ShareAlike 3.0)
ஹம்மேர்பிஸ்ட் மெரிடியன் நினைவுச் சின்னம்
Author: Tintazul (Creative Commons Attribution ShareAlike 3.0)
செகுட்ஸ்சில் ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்
Author: Frost SL (Sergey Morozov) (Creative Commons Attribution ShareAlike 3.0)
லித்துவானியா மேச்கொனிச்ஸ்சில் ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்
Author: Rimantas Lazdynas (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Rimantas Lazdynas (Creative Commons Attribution ShareAlike 3.0)
'ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்கில்' என்ன பார்க்கலாம்
(What to See in Struve Geodetic Arc)
'ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்கில்' பார்ப்பதற்கு எதுவும் இல்லை. அங்கு அங்காங்கே சில தூண்கள்தான் உள்ளன. ஆனால் நீங்கள் பார்க்கக் கூடிய இடம் 'எஸ்டோனியா'வில் உள்ள 'டார்டு'வில் உள்ள வானசாஸ்தர ஆராய்ச்சி நிலையத்தைதான். அந்த இடத்தில்தான் 'ஸ்ட்ருவே' நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார். 'எஸ்டோனியா'வில் 'டார்டு'வில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'டோரவேர்' மலையின் மீது (Toravere hill) அமைந்து உள்ள வானசாஸ்தர ஆராய்ச்சி நிலையமே (astronomical observatory) 'எஸ்டோனியா'வின் மிகப் பெரிய ஆராய்ச்சி நிலையம்.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 59 03 28 E 26 20 16
(10 நாடுகளில் இந்த மையங்கள் அமைந்து உள்ளன)
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2005
பிரிவு : கலை
தகுதி : II, III, VI
ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க் உள்ள இடத்தை
பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்கைக் காணச் செல்ல வேண்டுமா
(Visiting Struve Geodetic Arc )
'ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்கைக்' காண வேண்டும் என்றால் 'எஸ்டோனியா'வின் தலை நகரமான 'தல்லின்' (Tallinn) என்ற நகரில் தங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து ஏதாவது வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு 'டார்டு'வில் உள்ள இந்த இடத்துக்கு போகலாம்.
No comments:
Post a Comment