போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா
சுற்றுலா பயணக் குறிப்புகள்
(Read Original Article in :- Bosnia and Herzegovina)
திரேபின்ஸ்சிக்கா நதி
Author: Marijan (public domain)
Author: Marijan (public domain)
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' (Bosnia and Herzegovina) என்பது தென் ஐரோபியப் பகுதியின் நாடு (Southern Europe). இதன் பரப்பளவு 51,209 சதுர கிலோ மீட்டர் (19,772 சதுர மைல்). இந்த நாட்டின் எல்லைகள் வடக்கில் 'க்ரோஷியா' (Croatia), தெற்கு மற்றும் மேற்கில் 'செர்பியா' (Serbia ), தென்கிழக்கில் 'மோண்டினேக்ரோ' (Montenegro) என்ற நாடுகளுடன் உள்ளன. இந்த நாடு பிற நாடுகள் மற்றும் மாவட்டங்களால் சூழப்பட்ட நிலப் பரப்பாகவே (Landlocked) உள்ளது. ஆனால் சுமார் 26 கிலோமீட்டர் நிலப்பரப்பான 'நியும்' (Neum) எனும் பகுதியில் மட்டும் 'ஆர்டியாற்றிக் ' கடற்கரை (Adriatic Sea) உள்ளது.
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' நாட்டின் நிலங்கள் மலை அடிவார சறுக்கு அல்லது இறங்கு முகப் பகுதிகளிலேயே உள்ளது என்றாலும் சில இடங்கள் மட்டும் தட்டையான (Flat) நிலப்பரப்பாக உள்ளது. இங்குள்ள தெற்குப் பகுதிகளின் சீதோஷ்ண நிலை மத்திய தரைக் கடல் (Mediterranean) பகுதிகளில் உள்ள சீதோஷ்ண நிலையை ஓத்து உள்ளது என்றாலும் மற்ற இடங்கள் ஆசியாவின் மற்ற துணைக் கண்டங்களில் (Continental) உள்ள சீதோஷ்ண நிலையிலேயே உள்ளது. இந்த நாட்டின் ஜனத்தொகை 4.7 மில்லியன் (2011 ஆண்டின் கணக்கின்படி ). சுமார் 48 % மக்கள் 'போஸ்னியாக்'(Bosniak) என்ற பிரிவினர், மற்ற 37 % மக்கள் 'க்ரோட்ஸ்' (Croats ) என்பவர்கள். நாட்டின் தலை நகரம் 'சரஜீவோ' (Sarajevo).
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' நாட்டின் நிலங்கள் மலை அடிவார சறுக்கு அல்லது இறங்கு முகப் பகுதிகளிலேயே உள்ளது என்றாலும் சில இடங்கள் மட்டும் தட்டையான (Flat) நிலப்பரப்பாக உள்ளது. இங்குள்ள தெற்குப் பகுதிகளின் சீதோஷ்ண நிலை மத்திய தரைக் கடல் (Mediterranean) பகுதிகளில் உள்ள சீதோஷ்ண நிலையை ஓத்து உள்ளது என்றாலும் மற்ற இடங்கள் ஆசியாவின் மற்ற துணைக் கண்டங்களில் (Continental) உள்ள சீதோஷ்ண நிலையிலேயே உள்ளது. இந்த நாட்டின் ஜனத்தொகை 4.7 மில்லியன் (2011 ஆண்டின் கணக்கின்படி ). சுமார் 48 % மக்கள் 'போஸ்னியாக்'(Bosniak) என்ற பிரிவினர், மற்ற 37 % மக்கள் 'க்ரோட்ஸ்' (Croats ) என்பவர்கள். நாட்டின் தலை நகரம் 'சரஜீவோ' (Sarajevo).
மோஸ்தர் ஓல்ட் டவுன் காட்சி
Author: Ramirez (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Ramirez (Creative Commons Attribution 3.0 Unported)
உலக நாடுகளின் பொதுவான நேரத்தை (Coordinated Universal Time) விட வெயில் காலத்தில் இரண்டு மணி நேரம் கூடுதலாகவும், பிற காலத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாகவும் இந்த நாட்டின் நேரம் அமைந்து உள்ளது. இந்த நாட்டின் அதிகாரபூர்வமான நாணயம் 'கன்வேர்டபில் மார்க்' (Convertible Mark). சாலையின் வலதுபுறமே வண்டிகளை ஓட்ட வேண்டும். 2011 ஆண்டு கணக்கின்படி நாட்டின் GDP என்பது $18.3 பில்லியன், தனி நபர் வருமானம் $8,450 . சர்வதேச தொலைபேசி எண் கோட் +387.
பஞ்சா லுகாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச்
Author: Rade Nagraisalović (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Rade Nagraisalović (Creative Commons Attribution 3.0 Unported)
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' நாடு மிகவும் சிக்கலான அரசியல் நிலையில் அமைந்துள்ள இரண்டு தனித்தன்மை (two separate entities) வாய்ந்த ஆனால் ஒன்றிணைந்த கூட்டாட்சி குடியரசு நாடுகளில் (Federal republic) ஒன்றாகும். இந்த இரண்டு கூட்டு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 51 சதவிகித நிலப்பரப்பில் 'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' அமைந்து இருக்க 49 சதவிகித நிலப்பரப்பில் 'ரிபப்ளிகா ஸ்ரப்ச்க' (Republika Srpska) என்ற குடியரசு அமைந்துள்ளது.
புதிய கற்காலம் முதல் (Neolithic age) இங்கு மனிதர்கள் வாழத் துவங்கினார்கள். AD 9 ஆம் நூற்றாண்டில் ரோம மன்னர்கள் (Roman Empire) இங்கு ஆட்சி செய்தார்கள். 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்த கூட்டாட்சி குடியரசான 'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' வில் இருந்து செர்பியா (Serbia) மற்றும் 'க்ரோஷியா'(Croatia) என்ற இரண்டு நாடுகளும் வெளியேறின. இடையில் 'ஓத்தமான்ஸ்' (Ottomans) என்ற பிரிவினர் 'போஸ்னியா'வின் மீது படை எடுத்து அதைக் கைப்பற்றி 1463 முதல் 1878 வரை ஆண்டார்கள். அதன் பின் இந்த நாட்டை 'ஆஸ்ட்ரோ ஹங்கேரியர்கள்' (Austro-Hungarian) என்பவர்கள் ஆண்டார்கள்.
1914 ஆம் ஆண்டு ஜூன் (June) மாதம் 28 ஆம் தேதியன்று 'ஆஸ்ட்ரோ ஹங்கேரிய' நாட்டு இளவரசரான 'அர்ச்டியூக் பிரான்க் பெர்டினன்ட்' என்பவர் 'சரஜிவோவில்' கொல்லப்பட்டபோது முதலாம் உலக யுத்தம் (World War I) துவங்கியது. ஆனால் அந்த யுத்தத்தினால் இந்த நாட்டிற்கு எந்த விதமான சேதமும் எற்படவில்லை. அந்த யுத்தம் முடிந்தப் பின் 'செர்பியா' (Serbia) , 'க்ரோஷியா' மற்றும் 'ஸ்லோவானியர்கள்' (Slovens) மூவரும்
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' நாட்டுடன் ஒன்றிணைந்து 'யுகோஸ்லாவியா' (Yugoslavia) என்ற புதிய நாட்டை தோற்றுவித்தார்கள் (to form Yugoslavia). ஆனால் நடந்து முடிந்த இரண்டாம் உலக யுத்தத்தின் (World War II) போது 'யுகோஸ்லாவியா'வை நாசி (Nazi) படையினர் பிடித்துக் கொண்டார்கள். 'போஸ்னியாவை' 'க்ரோஷியா'(Croatia) நாட்டுடன் இணைத்தார்கள்.
ஆனால் இரண்டாம் உலக யுத்தம் (World War II) நடந்து முடிந்தப் பின்னர் மீண்டும் 'யுகோஸ்லாவியா' சோஷியலிச கூட்டாட்சி குடியரசு நாடு (Socialist Federal Republic of Yugoslavia) என்பது ஆறு நாடுகளை உள்ளடக்கிக் கொண்டு உருவாயிற்று. மீண்டும் அந்த நாட்டின் பிரதமரான 'டிடோ' (Tito) என்பவர் மரணம் அடைய மற்றும் சோவியத் யூனியனின் (Soviet Union) வீழ்ச்சி போன்றவை 'யுகோஸ்லாவியா' என்ற நாட்டு அமைப்பை சிதறிப் போகச் (disintegration) செய்தது. அதில் இருந்து 'க்ரோஷியா'(Croatia) மற்றும் 'ஸ்லோவேனியா' (Slovenia) நாடுகள் வெளியேறி சுதந்திரப் பிரகடனம் (declared Independence) செய்து கொண்டன. ஆனால் 'போஸ்னியா'விலோ மூன்று பிரிவு மக்கள் அடங்கிய ஆட்சியில் இருந்து 'செர்ப் ஜனநாயகக் கட்சி' (Serb Democratic Party) மட்டும் வெளியேறி 'ரிபப்ளிகா ஸ்ரப்ச்க' (Republika Srpska) என்ற நாடு ஒன்று சேருவதற்கு முன்னோடியாக 'செர்பியன் குடியரசு போஸ்னிய மற்றும் ஹெர்சிகோவினா' (Serbian Republic of Bosnia and Herzegovina) என்ற நாட்டை 1992 ஆம் ஆண்டு ஜனவரி (Januvary) மாதம் 9 ஆம் தேதியன்று நிறுவினார்கள்.
இக்மான் ஸ்கை மலை சரிவுப் பகுதி Author: Xe0us (Creative Commons Attribution 3.0 Unported)
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' நாடு 1992 95 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டுக் கலவரத்தை (civil war) சந்தித்தது. 'ஸ்ரேப்ரினிகா' எனும் இடத்தில் நடந்த 'செர்பியர்கள்' அல்லாதோரை விரட்டும் வகையில் நடந்தப் படுகொலையில் 8000 'போஸ்னிய' இளைஞ்சர்களும் பிற மக்களும் கொல்லப்பட்டார்கள். அதனால் 'நேடோ' (Nato) பன்னாட்டுப் படையினர் மற்றும் 'க்ரோஷியா', 'போஸ்னிய' படையினர் நடத்திய தாக்குதலினால் 'செர்பியர்கள்' பின் வாங்கி ஓடி பேச்சுவார்த்தைக்கு (negotiations) தயார் ஆயினர்.
1995 ஆம் ஆண்டு 'ஓஹியோ' (Ohio) நாட்டின் 'டேடன்' (Dayton) என்ற நகரில் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 14 ஆம் தேதியன்று ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் 'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா'வை சேர்ந்த 'அலிசா இசைட்பிகோவிக்' (Alija Izetbegović) , 'க்ரோஷியா'வை சேர்ந்த 'பரஞ்சோ டுட்மன்' (Franjo Tuđman) மற்றும் 'செர்பியாவை' சேர்ந்த 'ஸ்லோபோடன் மிலோசெவிக்' (Slobodan Milošević) போன்ற மூன்று நாட்டின் ஜனாதிபதிகளும் கையெழுத்து இட்டார்கள். அதற்கிடையில் சுமார் 100,000 பேர்கள் மாண்டுவிட்ட அந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் போர் குற்றங்களுக்காக (war crimes) யுகோஸ்லாவியா' நாட்டினரால் (Yugoslav authorities) 'மிலோசெவிக்' கைது செய்யப்பட்டு 'வியன்னாவுக்கு' (Vienna) கொண்டு வரப்பட்டு சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். ஆனால் விசாரணை நடை பெற்றுக் கொண்டு இருந்த நேரத்தில் 2006 ஆம் ஆண்டு மார்ச் (March) மாதம் 11 ஆம் தேதியன்று அவர் சிறையில் மரணம் அடைந்து கிடந்ததினால் (discovered dead ) விசாரணை முற்றுப் பெறாமலேயே ( without a verdict) முடிவு அடைந்தது.
மேலிருந்துப் பார்த்தால் தெரியும் போசிடேல்ஜ் பகுதி
Author: Mediha (Creative Commons Attribution 3.0 Unported)
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா'விற்குச் செல்ல வேண்டுமா
( Visiting Bosnia and Herzegovina )
( Visiting Bosnia and Herzegovina )
'ஆஸ்திரேலியா' (Australia) , 'கனடா'(Canada), 'ஜப்பான்'(Japan), 'மலேஷியா'(Malaysia), 'நியூசிலாந்' (New Zealand), 'சிங்கப்பூர்'(Singapore), 'அமெரிக்கா' (United States), 'அல்பானியா'யைத் (Albania) தவிர பால்கன் நாடுகள் (Balcan Countries) போன்றவர்கள் இந்த நாட்டுக்கு செல்ல விசா தேவை இல்லை. அது போல 'க்ரோஷியா' (Croatia) மற்றும் 'செர்பியா' (Serbia) நாட்டை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் (Passport) கொண்டு வரத் தேவை இல்லை. அவர்களிடம் அடையாள அட்டை (ID) மட்டும் இருந்தால் போதும்.
ஜஜ்சீ நீர்வீழ்ச்சி
Author: Micki (Creative Commons Attribution 3.0 Unported)
விமானம் மூலம்
(By Plane)
(By Plane)
இந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் 'சரஜீவோ' விமான நிலையத்துக்கே ( Sarajevo Airport (SJJ)) முதலில் செல்ல வேண்டும். 'ஆம்ஸ்டர்டாம்' (Amsterdam), 'கொபென்ஹெகம்' ( Copenhagen), 'இஸ்தான்புல்' (Istabul), 'பிராகு' (Prague) மற்றும் 'ஸ்கொப்சே' (Skopje) போன்ற இடங்களில் இருந்து தேசிய விமான சேவை (National carrier BH Airlines) உள்ளது. மேலும் 'க்ரோஷியா' ஏர்லயின்ஸ் (Croatia Airlines) சரஜிவோவில் இருந்து 'சாப்ரேக்' (Zabreg) என்ற இடத்துக்கு செல்லும் விமான சேவையை வைத்து உள்ளது. அங்கிருந்து 'ப்ருச்சில்ஸ்' (Brussels), 'பிரான்க்பர்ட்' ( Frankfurt) 'லண்டன்' (London), 'முனிச்' (Munich), 'பாரிஸ்' (Paris) மற்றும் 'ஜுரிச்' (Zurich) போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.
இந்த நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Cities in Bosnia and Herzegovina)
(1) சரஜீவோ- தலை நகர்
(Sarajevo - capital )
(2) பஞ்சா லுகா- ரிபுப்ளிக்கா ஸ்ரப்ச்காவின் தலை நகரம்
( Banja Luka - capital of Republika Srpska)
(3) பீகாக்
(Bihać)
(4) போஜ்னிகா
(Fojnica)
(5) மெடுகோரே
(Međugorje)
(6) மோஸ்தர்
(Mostar)
(7) நியும்
(Neum)
(8) துஸ்லா
(Tuzla)
(9) ஜேனிகா
(Zenica)
யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Bosnia and Herzegovina)
(1) ஓல்ட் பிரிட்ஜ் ஏரியா ஆப ஓல்ட் சிட்டி ஆப் மோஸ்தர்
{(Old Bridge Area of the Old City of Mostar (2005) }
(2) மேஹ்மத் பஸா சோகொலோவிக் பிரிட்ஜ் இன் விசிகார்ட்
{Mehmed Paša Sokolovic Bridge in Višegrad (2007) }
(Major Cities in Bosnia and Herzegovina)
(1) சரஜீவோ- தலை நகர்
(Sarajevo - capital )
(2) பஞ்சா லுகா- ரிபுப்ளிக்கா ஸ்ரப்ச்காவின் தலை நகரம்
( Banja Luka - capital of Republika Srpska)
(3) பீகாக்
(Bihać)
(4) போஜ்னிகா
(Fojnica)
(5) மெடுகோரே
(Međugorje)
(6) மோஸ்தர்
(Mostar)
(7) நியும்
(Neum)
(8) துஸ்லா
(Tuzla)
(9) ஜேனிகா
(Zenica)
யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Bosnia and Herzegovina)
(1) ஓல்ட் பிரிட்ஜ் ஏரியா ஆப ஓல்ட் சிட்டி ஆப் மோஸ்தர்
{(Old Bridge Area of the Old City of Mostar (2005) }
(2) மேஹ்மத் பஸா சோகொலோவிக் பிரிட்ஜ் இன் விசிகார்ட்
{Mehmed Paša Sokolovic Bridge in Višegrad (2007) }
No comments:
Post a Comment