டாக்கா
(Read Original Article in Dhaka)
'டாக்கா'விற்குப் (Dhaka) பயணம் செய்பவர்களின் உதவிக்காக அந்த நகரைப் பற்றிய பல விவரங்களை இதில் பகிர்ந்து கொண்டு உள்ளேன்.
டாக்கா
Author: Soman (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
Author: Soman (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
'டாக்கா' (Dhaka) என்ற நகரம் 'பங்களாதேஷின்' மிகப் பெரிய நகரம் மட்டும் அல்ல, அந்த நாட்டின் தலைநகர் ஆகும். இதன் ஜனத்தொகை 13 மில்லியன். உலகிலேயே அதிக நெரிச்சல் உள்ள நகரமும் கூட. முகலாய மன்னர்கள் (Mughals) ஆண்டு வந்த காலத்தில் ஜகாங்கீர் நகரம் (Jahangir Nagar) என அழைக்கப்பட்ட இந்த நகரை நவீன நகரமாக ஆக்கியவர்கள் பிரிட்டிஷ் (British) ஆட்சியாளர்களே. அந்த காலத்தில் இன்றைய கொல்கத்தாவை (Kolkata) ஆண்டு வந்த பிரிட்டிஷ் அரசின் இரண்டாவது பெரிய நகரமாக 'டாக்கா' இருந்தது. உலகிலேயே 'டாக்கா'வில்தான் மிக அதிக அளவில் சைக்கிள் ரிட்ஷா வண்டிகள் (cycle rickshaws) உள்ளன. அங்கு ஓடும் சுமார் 400,000 சைக்கிள் ரிட்ஷா வண்டிகளினால் அந்த நகரை சைக்கிள் ரிட்ஷாவின் தலைநகரம் என அழைக்கின்றார்கள். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் (April to August) மாதம் முடிய அந்த ஊரின் வெட்ப நிலை மிகவும் அதிகம் இருக்கும். அதே சமயத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரை ( October to March ) வெட்ப நிலை 20°C அளவில் இருக்கும். நல்ல இதமான குளிரும் இருக்கும்.
Lalbagh Fort, Dhaka
Author: Sfaisal2005 (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Sfaisal2005 (Creative Commons Attribution ShareAlike 3.0)
டாக்காவிற்கு செல்ல வேண்டுமா
(Budget Travel to Dhaka)
'டாக்கா'விற்கு செல்ல அங்குள்ள 'ஹஸ்ரத் ஷாஜலால்' சர்வதேச விமான நிலையத்துக்குச் (Hazrat Shahjalal International Airport) சென்று ஊருக்குள் செல்ல வேண்டும். அந்த விமான நிலையத்திற்கு தாய் ஏர்வேஸ் (Tahi Airways), GMG ஏர்லைன்ஸ் (GMG Airlines) மற்றும் டிராகன் Air (Dragon Air) போன்ற விமான சேவைகள் உள்ளன. குறைந்த கட்டணத்தில் அங்கு செல்ல 'டாக்கா'வில் இருந்து கோலலம்பூர் (Kuala Lumpur) செல்லும் ஏர் ஏஷியா (AirAsia) விமான சேவை உள்ளது.
உள்ளூரில் பயணம் செய்ய வேண்டுமா
(Budget Travel within Dhaka)
'டாக்கா'வில் நிறைய சைக்கிள் ரிட்ஷாக்கள் வாடகைக்குக் கிடைக்கும். நெரிச்சல் மிக்க நகரம் அது. சில இடங்களை நடந்து சென்றே பார்க்க முடியும். சில இடங்களுக்குச் செல்ல வண்டிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் வெளி நாட்டில் இருந்து வந்து உள்ளவர் எனத் தெரிந்து விட்டால் சைக்கிள் ரிட்ஷா ஓட்டுபவர்கள் மிக அதிகக் கட்டணம் வசூலித்து உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்பதினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சைக்கிள் ரிட்ஷாகளைத் தவிர ஆட்டோ ரிட்ஷாக்களும் வாடகைக்குக் கிடைக்கும். அதிக தூரம் செல்ல வேண்டும் எனில் ஆட்டோவை பயன்படுத்துவதின் மூலம் நேரத்தை மிச்சப் படுத்தலாம். ஆட்டோ ரிட்ஷாவின் குறைந்த அளவுக்கு கட்டணம் பங்களாதேஷ் நாணய மதிப்பில் Tk 13.50.
Curzon Hall, Dhaka
Author: Mir Mahadi Hassan (Creative Commons Attribution ShareAlike 3.0)
டாக்காவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Dhaka)
(1) 1857 மெமோரியல்
(1857 Memorial)
1857 -59 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த விடுதலை புரட்சியில்
உயிர் இழந்தவர்களின் நினைவுச் சின்ன மையம்.
(2) அஷான் மஞ்சில்
(Ahsan Manjil )
கலைக் கூடம் மற்றும் தோட்டங்களுடன் பிங்க் வண்ண அரண்மனை.
(3) பைதுல் மொகாரம் மசூதி
(Baitul Mukarram-National Mosque )
1962 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முக்கியமான மசூதி
(4) பால்தா தோட்டம்
(Baldha Garden)
1904 ஆம் ஆண்டு உள்ளூர் மற்றும் அந்நிய நாட்டின்
செடிகொடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோட்டம்
(5) பங்கா பாடன்
(Banga Bhaban)
பங்களாதேஷ் குடியரசுத் தலைவர் தங்கும் வீடு. பொதுமக்களுக்கு
உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை என்றாலும் வெளியில்
இருந்து அதன் அழகைக் காணலாம்.
(6) கர்சன் கூடம்
(Curzon Hall)
முதலில் லார்ட் கர்சன் என்பவர் பெயரால் அமைக்கப்பட்ட
ஆனால் தற்போது டாக்கா பல்கலைக் கழகத்தின்
விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள கட்டிடம்
(7) தக்கீஸ்வரி ஆலயம்
(Dhakeshwari Temple)
11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹிந்து ஆலயம்
(8) லால்பாஹ் கோட்டை
(Lalbagh Fort)
1678 ஆம் ஆண்டு முஸ்லிம் பேரசர் அவுரங்கஜிப்பின் மகன்
மொகம்மத் அஸ்லாம் என்பவரால் கட்டப்பட்ட கோட்டை
(9) நேஷனல் மெமோரியல்
(National Memorial )
நாட்டின் விடுதலைக்கு போராடி உயிர் நீத்தவர்களுக்காக
அமைக்கப்பட்ட தேசிய நினைவகம்
(10) பாரி பிபிச்ஸ் டோம்ப்
(Pari Bibi's Tomb)
லால்பாக்ஹ் கோட்டையில் உள்ள கல்லறை
(11) பங்களாதேஷ் பார்லிமென்ட் பார்லிமெண்ட் ஹவுஸ்
(Parliament House of Bangladesh )
ஜதியா சன்சாத் என்றும் கூறப்படும் பாராளுமன்றக் கட்டிடம் .
(12) சொனர்கோன்
(Sonargaon )
13 ஆம் நூற்றாண்டில் பெங்கால் என்ற பகுதியின்
தலைநகராக இருந்த இடம் . டாக்காவில் இருந்து
29 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

No comments:
Post a Comment