சோடிலோவில் பாறைகளில் ஓவியங்கள்
Author: Joachim Huber (Creative Commons Attribution 2.0)
இந்த உலகத்திலேயே மிக அதிக அளவிலான பாறை மீதான (Rocks) ஓவியங்கள் (Paintings) 'போட்ஸ்வானா'வில் (Botswana ) 'சோடிலோ'வில்தான் (Tsodilo) உள்ளது. 'காலஹாரி' பாலைவனப் (Kalahari Desert) பகுதியில் சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 4500 க்கும் அதிகமான ஓவியங்கள் பாறைகள் மீது வரையப்பட்டு உள்ளன். இந்த ஓவியங்கள் 100,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதில் இருந்து அப்போது இருந்திருந்த மக்களின் வாழ்கை முறையை (human activities) அறிந்து கொள்ள முடிந்தது. அந்த இடம் புனிதமானது என்றும் (Sacred site) தமது மூதையோர்களின் ஆவிகள் (ancestral spirits) உள்ள இடம் என அந்த நகர மக்கள் கருதுகிறார்கள்.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் (Disember) மாதம் 11 முதல் 16 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த இடத்தை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள். அங்கிருந்த ஓவியங்கள் அந்த காலத்தில் கரடுமுரடான இடங்களில் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த மக்களின் மத மற்றும் வாழ்கை நிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்பதற்காகவே சோடிலோவின் இந்த இடம் அப்படிப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றது.
'சோடில்லோவைப்' பார்க்கும் வரை ஆராய்ச்சியாளர்களுக்கு அஹ்தனை வருடங்களுக்கும் முன்னர் எந்த அளவிற்கான அளவில் ஆன்மீக நம்பிக்கைக் கொண்ட சடங்குகளை (Spiritual Rituals) மக்கள் செய்து வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. அப்படிப்பட்ட மத சடங்குகள் ஐரோப்பியாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமே நடந்துள்ளதாக நம்பி இருந்தார்கள். ஆனால் 'சோடில்லோவில்' 70,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பாறை ஓவியத்தில் (enormous stone sculpture) மிகப் பெரிய மலைப்பாம்பின் உருவம் செதுக்கப்பட்டு இருந்ததைக் கண்டார்கள். அதைக் கண்ட பின்னரே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்களும் ஓவியக் கலையில் எத்தனை உயர்வான நிலையில் (sophistication) இருந்து உள்ளார்கள் என்பது தெரிய வந்தது.

சோடில்லோ மலையில் நான்கு மலை முட்டுக்கள் உள்ளன. அவற்றில் அதிக உயரமானது 1400 மீட்டர் உயரமாக உள்ளது. அந்த மலைகளை ஆண் (Male) , பெண் (Female), குழந்தை (Child) மற்றும் பெயர் இல்லாதது (Unnamed) என்கிறார்கள். பெரும்பாலான ஓவியங்கள் பெண் மழைப் பகுதியில்தான் உள்ளது. அவற்றில் முக்கியமானவை திமிங்கிலம் (Whale), இரண்டு காண்டா மிருகங்கள் (Rhinos) மற்றும் ஒரு சிங்கம் (Lion) போன்றவை.
உலக புராதான மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : S 18 45 0 E 21 43 60
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2001
பிரிவு : கலை
தகுதி : I, III, VI
இது உள்ள இடத்தை பெரிய அளவில் பார்க்க
தரைபடத்தின் மீது கிளிக் செய்யவும்
தரைபடத்தின் மீது கிளிக் செய்யவும்
சோடில்லோவிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Tsodilo)
'ஒகவங்கோவின்' (Okavango) ஆற்று கழிமுகப் பகுதியில் 'சோடில்லோ' உள்ளது. அதைத் தவிர அங்கு 'காலஹாரி' பாலைவனப் பகுதியும் 'மக்கடிக்காடி' ஏரியும் (Makgadikgadi Lake) உள்ளது.
இந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் 'போட்ஸ்வானா'வின் தலநகரான 'கபரோனில்' தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து ஏதாவது சுற்றுலா நிறுவனத்துடன் தொடர்ப்புக் கொண்டு அவர்கள் மூலமோ அல்லது தனியாக வண்டியை ஏற்பாடு செய்து கொண்டோ அங்கு செல்லலாம். தற்போது 'கபரோனில்' சுற்றுலாப் பயணிகள் கட்டணக் குறைவான தங்கும் இடத்தை (hotel) முன் பதிவு செய்து கொள்ள மொகொலோடி பாக்பேக்கர்ஸ் (Mokolodi Backpackers) என்ற தளத்தில் தொடர்புக் கொள்ளலாம்.
அங்கு செல்வது எப்படி
(Getting there)
அங்கு செல்ல வேண்டும் எனில் 'போட்ஸ்வானா'வில் தங்கிக் கொள்ள ஹோடேல்ஸ் இன் போட்ஸ்வானா (hotels in Botswana) என்பதின் மீதோ அல்லது ஹோடேல்ஸ் வோர்ல்ட்வைட்(hotels worldwide) என்ற தளத்தின் மீதோ கிளிக் செய்து அதில் முன் பதிவு செய்து கொண்டு அதற்குப் பின்னர் அங்கு போகவும்.
No comments:
Post a Comment