துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 30, 2011

பெல்ஜியம் - நமூர்

பெல்ஜியம் - நமூர்
(Read Original Article in : - Namur)



'நமூர்' {Namur (Walloon: Nameur)} சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.  'பெல்ஜியத்தின்' (Belgium) மத்தியத் தென் பகுதியில் உள்ளது 'நமூர்'. பிரேன்ச் மொழி பேசும் 'வல்லோனியா'(Wallonia) மாகாணத்தின் தலை நகரம் இது. 'நமூரின்' பரப்பளவு 175.69 சதுர கிலோ மீட்டர், ஜனத்தொகை  110,000 (2011 ஆண்டின் கணக்கின்படி ).
சமப்ரே நதியின் முன்னணியில்  நமூர்  பழைய  நகரம்
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 3.0 Unported)

'நமூர்' நகர் 'சம்பரே' மற்றும் 'மியூஸ்' (Sambre and Meuse) நதிகள் சங்கமிக்கும் (Confluence) பகுதியில் உள்ளது.  முன்னர் இந்த துறைமுகப் பகுதி வர்த்தகங்களுக்கான போக்குவரத்து வழியாக (ancient trade routes) இருந்தது.  இந்த நகரம் 'ஜெர்மானியர்கள்' (Germans)  வசம் இருந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களில் (World Wars) இந்த நகரம் பெரும் அளவு நாசம் (severe damage) அடைந்தது.  இந்த நகரம் 'பெல்ஜியத்தின் முன்னணி  தொழில் நகரமாக விளங்குகின்றது.  இங்கு இயந்திரங்கள் உற்பத்தி, இரும்பு சம்மந்தமான, பீங்கான், தோல் போன்ற பொருட்கள் (metal products, porcelain and leatherware) சம்மந்தமான தொழில்சாலைகள் நிறையவே உள்ளன. 'ப்ருச்சில்ஸ்' (Brussels)  நகரில் இருந்து 'லக்ஸ்சம்பர்க்' (Luxembourg ) மற்றும் 'லில்லி'யில்  (Lille) இருந்து 'லைகே'  செல்லும் ரயில்கள் இந்த வழியேதான் செல்கின்றன. அது மட்டும் அல்லாமல் 'மியூஸ்' நதி மூலம் 'நமூர்' செல்லும் பாதை மூலமும் போக்குவரத்து உள்ளது.
நமூர் புறநகர் பகுதியின் காட்சி 
Author: Werneuchen (public domain)

நமூர் செல்ல வேண்டுமா
(Visiting namur)

'ப்ருச்சில்ஸ்' , 'லக்ஸ்சம்பர்க்', 'லில்லி' மற்றும் 'லைகே' போன்ற இடங்களில் இருந்து ரயில் மூலம் இங்கு செல்லலாம். சாலை வழியே வாகனத்தில் சென்றால் 'ப்ருச்சில்ஸ்'சில் இருந்து  E411 எக்ஸ்பிரஸ்வே (Expressway) வழியாகவும் 'லைகே'யில் இருந்து  E42 வழியாகவும் செல்ல வேண்டும். எக்ஸ்பிரஸ்வே  E25/E411 போன்றவை  'லக்ஸ்சம்பர்க்'கில் இருந்து 'நமூர்' செல்லும் பாதை. 

'நமூரில்' பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to Visit in Namur )
(1) சைடடில்லி
( Citadelle )
ரோமர்களின் காலத்தில் இருந்து மீண்டும் மீண்டும் பல முறை புதுப்பிக்கப்பட்ட 'சாம்பியாவூ' (Champeau)  மலைப் பகுதியில் உள்ள கோட்டை (Fortess)
(Route Merveilleuse 64)
சமப்ரே நதியின் முன்னணியில்  சிடாதேல்லே டி நமூர் 
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 3.0 Unported)

பழைய பெல்ப்பிரை

(2) எக்லிஸ் செயின்ட் லூப்
( Église St-Loup )

1621 மற்றும் 1645 ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ள மிகப் பெரிய  பொரோக் தேவாலயம் 
(Rue du Collège)
(3) க்ரோயேஸ்பீக்  டி க்ரோயக்ஸ் மியூசியம் 
(Groesbeeck de Croix Museum )

18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த மியூசியத்தில்  பலவிதமான ஓவியங்கள் முதல் அலங்கார தொங்கு சீலைகள்வரை (Tapesteries) பல பொருட்களை காணலாம்.
(Rue Saintraint 3)
(4) லி த்ரிசார் டோயக்னிஸ்  
(Le Trésor d'Oignies )

தங்கம், வெள்ளி, யானையின் தந்தம் (Gold /Silver /Ivory ) போன்ற பொருட்களில் மத்தியக் காலத்தில் (Medieval) செய்த நகைகள் மற்றும் பீங்கான், கண்ணாடி போன்ற  பொருட்களை உள்ளடக்கி உள்ள மியூசியம்.
(Convent des Soeurs de Notre-Dame)
(5) முஸ் அம்ப், ஈஅக்யூட், ஈ ஆர்சியலாஜிக் டி நமூர்
(Mus&eeacute;e Archéologique de Namur)

16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹல்லே அல் சேர் எனும் இடத்தில் 'கல்லோ ரோமன்' (Gallo-Roman) மற்றும் 'மேரோவிஞ்சியன்' (Merovingian) காலத்தைய கலைப் பொருட்களைக் கொண்ட  காட்சியகம்
(Rue du Pont 21)

(6) மியூசீ ப்ரோவின்ஷியல் தேச ஆர்ட் ஏன்சியன்ச்ஸ்
(Musée Provincial des Arts Anciens)

மத்திய மற்றும் மறுமலர்ச்சி காலத்தைய சிற்பங்கள், ஓவியங்கள், ஆயுதங்கள் போன்றவை உள்ள மியூசியம்
(Rue de Fer 24)

(7) மியூசீ ப்ரோவின்ஷியல் பிலிசியன் ரோப்ச்ஸ்
(Musée Provincial Félicien Rops)

'பிலிசியன் ரோப்ச்ஸ்' (Félicien Rops) எனும் உள்ளூரை சேர்ந்த ஓவியர் படைத்த கொடூரமான (macabre ) ஓவியம் முதல் புனிதத்துவத்தை பாழடிக்கிற குற்றம் உடைய (sacrilegious) ஓவியங்களைக்  கொண்ட காட்சியகம். 
(Rue Furnal 12)
கதீத்ரலே செயின்ட் ஆபின்  
Author: Werneuchen (public domain)

No comments:

Post a Comment