அக்ரோ டூரிஸம்
(Read Original Article in :-Agrotourism in Italy)
(Read Original Article in :-Agrotourism in Italy)
‘இத்தாலி’யில் (Italy) 'அக்ரிடூரிஸ்மோ' (Agriturismo) எனும் திட்டத்தின் கீழ் 'அக்ரோடூரிஸம்' (Agrotourism) என்ற பெயரில் கிராம விளை நிலங்களில் (Country side) சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் இடத்தைத் தருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் (scheme) இரண்டாயிரத்திற்கும் (2000) மேற்பட்ட பண்ணை வீடுகள் (Farms) , வில்லாக்கள் (Villas), மற்றும் மலைகளில் தங்கும் (Mountain Abodes) இடங்களை கட்டி அவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்குத் தருகிறார்கள். அப்படிப்பட்ட சில இடங்கள் ஹோட்டல் அறைகளைப் (hotel-style) போலவும் அனைத்து வசதிகளுடன் இருக்கும், இல்லை தாமே அனைத்தையும் செய்து கொள்ள வேண்டிய (self-catering chalets) நிலையில் உள்ள அறைகளாக இருக்கும்.
'அக்ரிடூரிஸ்மோ' திட்டத்தின் கீழ் கிடைக்கும் தங்கும் இடங்கள் தனி அறை முதல் (Basic Rooms) , குடும்பத்தினர் தங்க வசதி உள்ள பண்ணை வீடுகளாக (family-run farm houses) இருக்கும். விவசாய நிலங்களில் உள்ள பண்ணை வீடுகளையும், தனிமையில் உள்ள சில கோட்டைகளையும் இப்படிப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் தங்கும் இடங்களாக மாற்றி அமைத்து உள்ளார்கள். அங்கு தோட்டங்களில் இருந்து பறித்த காய்கறிகளைக் கொண்டு நல்ல உணவு தயாரிப்பார்கள். தேவை என்றால் பக்கத்தில் உள்ள உணவகங்களில் சென்று உணவு உண்ணவும் முடியும் . அந்த பண்ணை வீடுகளில் தங்குவத்தின் மூலம் அங்குள்ள மலைகளில் ஏறுவது, விலங்குகள் மீது சவாரி செய்வது, மீன் பிடிப்பது (riding, fishing and mountain trekking) போன்று எதையாவது செய்து கொண்டு பொழுதைப் போக்க முடியும்.
ஆனால் அப்படிப்பட்ட தங்கும் இடங்களில் குறைந்தது இத்தனை நாட்களாவது தங்க வேண்டும் (minimum stay) அல்லது அத்தனை நாட்களுக்கான கட்டணம் தர வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும். மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அக்ரிடூரிஸ்ட் மீது கிளிக் (Agriturist ) செய்து விவரங்களைப் பார்க்கலாம்.

No comments:
Post a Comment