பெல்ஜியம் - கெண்ட்
(Read Original Article in :- Ghent )
காணட் கனால் அருகில் வீடுகள்
'கெண்ட்' (Dutch: Gent; French: Gand) நகரம் என்பது 'பெல்ஜியத்தின்' (Belgium) மூன்றாவது பெரிய (third most populous) நகரம். இதன் பரப்பளவு 156.18 சதுர கிலோமீட்டர். 2011 ஆண்டின் கணக்கின்படி இந்த நகரின் ஜனத்தொகை 233,000. இந்த நகரம் 'ஸ்செல்டட்' (Scheldt ) மற்றும் 'லைஸ்' (Lys) நதிகள் இணையும் (confluence) இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட {(Coordinated Universal Time (UTC+1)} இந்த நகரின் நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாகவே உள்ளது. அதேபோல வெயில் காலத்தில் இரண்டு மணி நேரம் அதிகமாக உள்ளது. சர்வதேச தொலைபேசி எண் கோட் : 09.
சின்ட் -மிச்சிஎல்ஸ்ப்ருக் எனும் இடத்தில் இருந்து
பார்த்தால் தெரியும் சின்ட் -நிக்லாஸ்கெர்க்
'கெண்ட்' நகரசபையில் (Municipality) 'கெண்ட்' நகரை தவிற 'அப்ஸ்ணீ' (Afsnee), 'டேஸ்டேல்டோன்க்' (Desteldonk), 'துரோன்ஜென்' (Drongen), 'ஜென்ட்ப்ருகீ' (Gentbrugge), 'லிடிபெர்க்' (Ledeberg), 'மரியாகெர்கீ' (Mariakerke), ' மென்டோன்க்' (Mendonk), 'ஓஸ்டேகர்' (Oostakker), 'சின்ட் அமாண்ட்ஸ்பெர்க்' (Sint-Amandsberg), 'சின்ட் டேனிஜ்ஸ் வெஸ்டெம்' (Sint-Denijs-Westerm), 'சின்ட் க்ருஸ் வின்கேல்' (Sint-Kruis-Winkel), 'வொண்டேல்ஜெம்' (Wondelgem) மற்றும் 'ஜிவிஜ்னார்டி' (Zwijnaarde) போன்றவை உள்ளன. 'கெண்ட்' நகரசபையின் ஜனத்தொகை 600,000 . ஆக இது 'பெல்ஜியத்தின்' நான்காம் அதிக எண்ணிக்கை (fourth most populous) உள்ள மக்களைக் கொண்ட சிறு நகரமாக உள்ளது. இங்குதான் உலகிலேயே மிக அதிகமாக நடந்து செல்லும் மக்கள் (pedestrian) உள்ளார்கள் என்கிறார்கள் (வாகனம் இல்லை?)
'செல்டிக்' (Celtic) மொழியில் 'கெண்ட்' என்றால் சங்கமம் (Confluence) என்று பொருள். இந்த நகரம் இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளதினால் அந்தப் பெயர் வந்துள்ளது. கற்காலம் தொட்டு (Stone Age) இங்கு மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்கள். இந்த இடத்தில் 'ரோமானியர்கள்' (Romans) முதல் 'ப்ராங்க்ஸ்' (Franks) எனப்படும் இனத்தவர்வரை வாழ்ந்து உள்ளார்கள். ஆனால் அது பற்றிய சரித்திரக் குறிப்புக்கள் (Documented History) அதிகம் கிடைக்கவில்லை.
சின்ட் -பீட்டர்ஸ்கேர்க்
AD 650 ஆம் ஆண்டில் 'செயின்ட் அமான்ட்' (Saint Amand) என்பவர் நிறுவிய இந்த நகரம் 'செயின்ட் பீட்டர் அப்பே' (Saint Peter Abbey) மற்றும் 'செயின்ட் பாவோஸ் அப்பே' (St. Bavo's Abbey) என்பவர்களால் மேலும் வளர்ச்சி பெற்றது. 851 மற்றும் 879 ஆண்டுகளில் இந்த நகரை 'விகிங்' (Viking) என்பவர்கள் கொள்ளையடித்து நாசப்படுத்தினார்கள். ஆகவே 12 ஆம் நூற்றாண்டில் இந்த நகரை மீண்டும் மேம்படுத்தினார்கள். இது 'லண்டன்' (London) மற்றும் 'மாஸ்கோ' (Moscow) நகரங்களை விடப் பெரியதாக என்றாலும் 'பாரிஸ்' (Paris) நகருக்கு அடுத்த பெரிய நகரமாகவே ஐரோப்பியாவில் விளங்கியது.
கெண்ட் மாதா கோவில் மணிக் கூடு கோபுரம்
கம்பளி மற்றும் கம்பளம் (Wool) போன்ற தொழில்சாலைகள் இங்கு பெருமளவில் வளர்ந்தன. ஆனால் 1337-1453 வரை நூறு ஆண்டுகளாக நடந்த யுத்தங்களினால் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் வீழ்ந்தது. யுத்தங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்த நகரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் இதன் அரசியல் மற்றும் பொருளாதார மையங்கள் 'ப்லாண்டேர்ச்ஸ்' (Flanders) (இன்றைய 'கெண்ட்' மற்றும் 'ப்ருக்கேச்ஸ்' எனும் இடங்கள் அடங்கியது) மற்றும் 'ப்ரபாந்து' (Brabant ) (இன்றைய 'ஆண்ட்வெர்ப்' மற்றும் 'ப்ருச்சில்ஸ்' அடங்கியது ) எனும் பகுதிகளுக்கு சென்றன.
'கெண்ட்' நகரில் பிறந்தாலும் 'சார்லஸ் V' (Charles V) என்பவர் ரோம பேரரசின் (Roman Empire) மற்றும் ஸ்பெயின் (Spain) நாட்டு மன்னனாகவும் ஆனார். 1539 ஆம் ஆண்டு எழுந்த கெண்ட் கிளர்ச்சியை (Revolt) அவர் ஈவு இறக்கம் இன்றி (Dealt mercilessly) அடக்கி ' செயின்ட் பிரேவோ அப்பேயை' தரைமட்டமாக்கி அங்கு 'ஸ்பானிய' படையினர் (Spanish troops) பாதுகாப்பில் இருக்க ஒரு கோட்டையைக் (Fortress) கட்டினார்.
இன்று 'கெண்ட்' நகரம் தனது பழைய தன்மையை பாதுகாத்து வைத்துக் கொண்டு (Preserved) உள்ளது. இங்கு பல தேவாலயங்களும் (Churches) கன்னிகாஸ்திரீ (nuns) ஆகாமலேயே சன்யாசிகளாக இறை பணியில் ஈடுபட்டு வந்திருந்த இருந்த இளம் பெண்கள் பயன்படுத்தி வந்த தங்கும் இடங்கள் (béguinages) உள்ளன.
கெண்ட் நகருக்கு செல்ல வேண்டுமா
(Visiting Ghent )
'ப்ருச்சில்ஸ்' (Brussels) நகரில் இருந்து அரை மணி நேரத்தில் (Half an hour) இங்கு செல்ல ரயில்கள் உள்ளன. அங்கிருந்து கிளம்பி 'ஜென்ட்-சின்ட்- பீட்டர்ஸ்' ரயில் நிலையத்துக்குச் (Gent-Sint Pieters Railway Station) சென்று இறங்கிக் கொண்டு அங்கிருந்து நகருக்குள் ட்ராம் (Tram) வண்டியில் பயணிக்க வேண்டும்.
கரைவேன்ஸ்டீன் கோட்டை
உள்ளூரில் பயணிக்க
(Exploring Ghent )
இந்த நகருக்குள் உள்ள அனைத்தையும் நடந்து சென்றே பார்க்க முடியும். இல்லை என்றால் ஒரு இரு சக்கர சைக்கிளை (Bi Cycle) வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் ட்ராம் செல்லும் பாதையில் புதைகப்பட்டு உள்ள தண்டவாளங்கள் (Tracks) மற்றும் சாலைகள் மேடு பள்ளமாக உள்ளதினால் சைக்கிளை ஜாக்கிரதையாக ஓட்டிச் செல்ல வேண்டும்.
கெண்ட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Ghent)
(1) பெல்போர்ட்(Belfort)
(2) டிசைன் மியூசியம் கெண்ட்
(Design Museum Gent)
(3) துள்ளி கிரைட்
(Dulle Griet)
(4) கிரேஸ்லி மற்றும் கொரேன்லை
(Graslei and Korenlei)
(5) க்ரூட் விஷுலிஸ்
(Groot Vleeshuis)
(6) ஹெட் க்ரேவேன்ஸ்டீன்
(Het Gravensteen)
(7) ஹெட் ஹுயிச்ஸ் வான் அலிஜின்
(Het Huis van Alijn)
(8) கலன் பெகேன்ஹோல்ப்
(Klein Begijnhof)
(9) மியூசியம் வோர் ஷோன் குன்ஸ்டேன்
(Museum voor Schone Kunsten)
(10) சின்ட் பாப்ஸ்கதீட்ரல்
(Sint-Baafskathedraal)
(11) சின்ட் நிக்லாஸ்கேர்க்
(Sint-Niklaaskerk)
(12) ஸ்டாட்டுயிச்ஸ்
(Stadhuis)
(13) ஸ்டாட்ஸ்மியூசியம் கெண்ட்
(Stadsmuseum Gent)
(14) ஸ்டெடில்ஜெக் மியூசியம் வூர் அக்சுயெல்லி குன்ஸ்ட்
(Stedelijk Museum voor Actuele Kunst)
(15) வ்லாம்ஸ்சே ஒபேரா
(Vlaamse Opera)
No comments:
Post a Comment