யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ராட்ஸ்சிவில் குடும்ப இருப்பு
(Read Original Article in :-
ராட்ஸ்சிவில் பேமிலி காம்ப்ளெக்ஸ்
'ராட்ஸ்சிவில்' (Radziwiłł) குடும்ப குடியிருப்பு மற்றும் கலை நிகழ்சிக் (Cultural) கட்டிடங்களின் சிற்ப மற்றும் கட்டிடக் கலை அமைப்பைக் கண்டு 'தென் ஆப்ரிக்காவின்' (South Africa) 'டுப்ளின்' (Dublin) எனும் நகரில் 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 முதல் 17 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன அமைப்பின் (World Heritage Committee ) அங்கத்தினர் 29 வது சபைக் கூட்டத்தில் 'பங்களாதேஷின்' யுனேஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Site ) அங்கீகரித்தார்கள்.
'லிதுவானியாவின்' (Lithuania) 'கிராண்ட் துச்சி' எனும் ஆட்சியாளர்களின் சொந்தக்காரர்களும் 'பெலாருஸ்சின்' பெரும் செல்வந்தர்களுமான 'ராட்ஸ்சிவில்' குடும்பத்தினர் 1533 முதல் 1939 ஆம் ஆண்டுவரை 'நேச்விச்' (Nesvizh) குடியிருப்பு வளாகத்தை தம்மிடம் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் மத்திய ஐரோபியாவின் விஞ்ஞான, கலை, கட்டிட நுணுக்கம் மற்றும் கைவண்ணம் (sciences, arts, crafts and architecture) போன்றவற்றை பறை சாற்றிய வண்ணம் அமைந்து இருந்தது. தெற்கு மற்றும் மேற்கு ஐரோபியாவின் விஞ்ஞான, கலை, கட்டிட நுணுக்கம் மற்றும் கைவண்ணம் போன்றவற்றை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியக் கலைகளுடன் ஒன்றிணைத்து இங்கு ஒரு வடிவம் கொடுத்ததில் 'ராட்ஸ்சிவில்' குடும்பத்தினர் பெரும் பங்கு வகிக்கின்றார்கள்.
16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் மத்திய ஐரோபியாவின் விஞ்ஞான, கலை, கட்டிட நுணுக்கம் மற்றும் கைவண்ணம் (sciences, arts, crafts and architecture) போன்றவற்றை பறை சாற்றிய வண்ணம் அமைந்து இருந்தது. தெற்கு மற்றும் மேற்கு ஐரோபியாவின் விஞ்ஞான, கலை, கட்டிட நுணுக்கம் மற்றும் கைவண்ணம் போன்றவற்றை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியக் கலைகளுடன் ஒன்றிணைத்து இங்கு ஒரு வடிவம் கொடுத்ததில் 'ராட்ஸ்சிவில்' குடும்பத்தினர் பெரும் பங்கு வகிக்கின்றார்கள்.
ராட்ஸ்சிவில் பேமிலி காம்ப்ளெக்ஸ்/ நேஸ்விச் அரண்மனை
Author: Recka (Creative Commons Attribution ShareAlike 3.0)
புதுப்பிக்கப்படும் ராட்ஸ்சிவில் பேமிலி காம்ப்ளெக்ஸ் Author: Szeder László (Creative Commons Attribution ShareAlike 3.0)
நேஸ்விச்சில் கார்பஸ் க்ரிஸ்டியின் சர்ச்
Author: Alex Zelenko (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Alex Zelenko (Creative Commons Attribution ShareAlike 3.0)
'ராட்ஸ்சிவில்' பேமிலி காம்ப்ளெக்ஸ்சில் என்ன பார்க்கலாம்
(What to See at the Radziwiłł family complex at Nesvizh)
ஆறு பக்கத்தில் முற்றங்களைக் (courtyard) கொண்ட சுமார் பத்து கட்டிடங்களை ஒன்றடக்கி உள்ளதே 'ராட்ஸ்சிவில்' பேமிலி காம்ப்ளெக்ஸ். 'ராட்ஸ்சிவில்' குடும்பத்தினர் தங்கிய 'நேஸ்விச் அரண்மனையை 'லிதுவானியாவை' சேர்ந்த படைத் தளபதியான (Marshal) 'மிகோலாஜ் க்ரிட்ஸ்டோப் ராட்ஸ்சிவில்' (Mikołaj Krzysztof Radziwiłł) என்பவரே கட்டினார். மூன்று அடுக்கு நாட்டுப்புற வீட்டைப் (château) போன்ற அரண்மனைக் கட்டிடம் 1582 ஆண்டு கட்டப்படத் துவங்கி 1604 ஆம் ஆண்டு முடிந்தது. மத்தியக் கால கட்டிட அமைப்பை மாற்றி கலாச்சார மறுமலர்ச்சி (Renaissance ) காலத்தை சேர்ந்த மிதமிஞ்சிய சித்திர வேலைபாடுகளுடன் (Boroque) கூடிய கட்டிடங்களாக மாற்றி அமைக்கப்பட்டு அதன் பாதுகாப்பிற்காக நான்கு பக்கங்களிலும் எட்டு பக்க கண்காணிப்பு கோபுரங்களையும் அமைத்தார்கள்.
இந்த அரண்மனை வளாகத்துக்குள் இருந்த அகழியில் (Ditch) ஒரு பாலத்தைக் (Dam) கட்டி 'கார்பஸ் க்ரிஸ்டியின் சர்ச்சை' (Church of Corpus Christi) இதனுடன் இணைத்தார்கள். அதை கட்டியவர் 'சியன் மரியா பெர்னார்தோனி' (Gian Maria Bernardoni) என்பவரே. ரோமின் (Rome) ஜேசு II ஆம் ஆலயஇம் கட்டப்பட்ட பின் பிறகு அதே வடிவில் அமைக்கப்பட்ட ஜெசூட் ஆலயம் இதுவே. மூடப்பட்ட மேற்கூறையுடன் (Doomed) அதி அற்புதமான சித்திர வேலை அலங்காரம் செய்யப்பட்டுள்ள (Boroque) முகப்பைக் (Facade) கொண்ட கிழக்கு ஐரோபிய பகுதியில் உலகிலேயே முதலாவதாக அமைக்கப்பட்டுள்ள தேவாலயம் இதுவே. இந்த தேவாலயத்தில் 'ராட்ஸ்சிவில்' குடும்பத்தை சேர்ந்த 72 பேர்களின் சாதாரண மரத்தினால் ஆனா சவப் பேட்டிகள் புதைகப்பட்டு உள்ளன.
உலக புராதான மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 53 13 22.0 E 26 41 29.0
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2005
பிரிவு : கலை
தகுதி : II, IV, VI
இந்த வளாகம் 'மிர் காஸ்டேல்' (Mir Castle) என்ற அரண்மனை வளாகத்தின் தென்கிழக்குப் பகுதியில் இருந்து இது 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. யுனெஸ்கோ நிறுவனம் 'ராட்ஸ்சிவில்' குடும்ப வளாகத்தை புராதான சின்னமாக அறிவிப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே 'மிர் காஸ்டல்' வளாகத்தை புராதான சின்னமாக அங்கீகரித்து இருந்தது.
இது உள்ள தரைப் படத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment