'புர்கினா பாசோ'வின் (Burkina Faso) 'லோரோபினி'யில் (Loropéni ) உள்ளது பாறைக்கல் சிதைவுகளாகவே (pre-colonial stone ruins) உள்ளன . இந்த இடம் நாட்டின் தென் பகுதியில் உள்ள 'கவ்வா' (Gaoua) எனும் இடத்தில் உள்ள 'லோபியோ' (Lobi) என்றப் பகுதியில் உள்ளது. இந்த சிதைவுகளைப் பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் இந்த சிதைவுகள் 'கான்' (kaan) என்ற இனத்தவரின் மன்னனாக (King) இருந்த 'கான் ல்யா' (Kaan lya) என்பவரின் அரண்மனை (Palace) சுவர்கள் என்கிறார்கள்.
சின்டவ்வில் ஒரு காட்சி. ஆனால் இது லோரோபினி சிதைவுகள் அல்ல Author: Wegmann (Creative Commons Attribution 3.0 Unported)
இப்படிப்பட்ட பத்து (10) இடங்களை பாதுகாக்கப்பட்ட மையமாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். சஹாராவிற்கு அப்பால் இருந்த வர்த்தக சாலை (Sahara trade route) இருந்தப் பகுதியில் காணப்படுவதால் இந்த சிதைவுகள் அங்கிருந்த தங்க சுரங்கத்தைப் (mining of gold ) பாதுகாக்கவே அமைக்கப்பட்டு இருந்த மதில் சுவராக (Fortress) இருக்கும் என்கிறார்கள்.14 முதல் 17 ஆம் நூற்றாண்டுவறை அங்கு கிடைத்த உலோகத்தின் அளவு (தங்கம்) உச்சகட்டத்தை அடைந்து உலோகம் கிடைப்பது அறிதாகியதும் அந்த இடத்தைக் கைவிட்டுவிட்டுச் சென்று இருக்கலாம் என்கிறார்கள் .
ஆகவே 2009 ஆம் ஆண்டு ஜூன் (June ) மாதம் 22 முதல் 30 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன மைய அங்கத்தினர்கள் (World Heritage Committee ) கூட்டத்தில் 'லோரோபினியை' யுனெஸ்கோ (UNESCO World Heritage Site) புராதான சின்ன மையமாக அங்கீகரித்தார்கள். இது மட்டுமே அந்த நாட்டின் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற பகுதியாக உள்ளது.
ஆகவே 2009 ஆம் ஆண்டு ஜூன் (June ) மாதம் 22 முதல் 30 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன மைய அங்கத்தினர்கள் (World Heritage Committee ) கூட்டத்தில் 'லோரோபினியை' யுனெஸ்கோ (UNESCO World Heritage Site) புராதான சின்ன மையமாக அங்கீகரித்தார்கள். இது மட்டுமே அந்த நாட்டின் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற பகுதியாக உள்ளது.
அதற்கு அங்கீகாரம் கிடைத்ததின் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்க உலோகம் வெட்டி எடுக்கப்பட்ட தொழில் நடந்து வந்த ஏழு நூற்றாண்டுகளும் அந்த இடம் சீரிய முறையில் பாதுகாப்பு அரண் அமைத்து பாதுகாத்து வந்து உள்ளது என்பதே. ஆனால் இந்த மையம் ஆப்ரிக்க நாட்டின் வேறு இடங்களான 'நைஜீரியா' (Nigeria) போன்றவற்றில் உள்ள அரண் அமைத்து பாதுகாக்கப்பட்ட நகரங்களை விட வித்யாசமானது.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 10 15 0 W 3 34 60
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2009
பிரிவு : கலை
தகுதி : III
இந்த இடம் உள்ள தரை படத்தைப் பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீதே கிளிக் செய்யவும்
பார்க்க படத்தின் மீதே கிளிக் செய்யவும்
இங்கு செல்வது எப்படி
(Visiting Ruins of Loropéni )
இந்த இடத்தை சென்றுப் பார்க்க 'கவ்வா' நகரில் தங்க வேண்டும். அங்கிருந்து சுற்றுலா மைய அலுவலகங்கள் எதையாவது தொடர்புக் கொண்டு அவர்கள் மூலம் இங்கு செல்லலாம் அல்லது நீங்களே வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு போகலாம்.
No comments:
Post a Comment