பெல்ஜியம் - ப்ருகேஸ்
(Read Original Article in :- Bruges )
'ப்ருகேஸ்' (Bruges) சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுடைய சுற்றுலா பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். மேற்கு 'ப்லாண்டேர்ஸ்' (West Flanders) என்ற மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் மற்றும் அந்த மாகாணத்தின் தலை நகரம் இது. 'பெல்ஜியத்தின்' (Belgium) வடமேற்குப் பகுதியில் உள்ள 'ப்ருகேஸ்' நகரின் பரப்பளவு 138.4 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 ஆண்டு கணக்கின்படி இதன் ஜனத்தொகை 117,000.
வரலாற்று சிறப்பு மிக்க 'ப்ருகேஸ்' (historic center of Bruges) யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World heritage site) அங்கீகாரம் பெற்று உள்ளது. ' ப்ருகேஸ்' நகர மையத்தில் 'கூல்கேர்டி' (Koolkerke), 'சின்ட் அண்ட்ரிஸ்' (Sint-Andries), 'சின்ட் மிசேல்ஸ்' (Sint-Michiels), 'அஸ்சிப்ரோயெக்' (Assebroek), 'சின்ட் க்ரூஸ்' (Sint-Kruis), 'டுட்சிலே' ( Dudzele) மற்றும் 'லிஸ்ஸிவெகே' (Lissewege) போன்ற பகுதிகளும் உள்ளன.
'ஆம்ஸ்டர்டாமைப்' (Amsterdam) போலவே இங்கு பல வாய்க்கால்கள் (Canals) உள்ளன. ஆகவே இதை 'வடக்கு வெனிஸ்' (Venis) என்று கூறுகிறார்கள். 'ஜுலிய சீசர்' (Julius Ceasar) ஆட்சியில் இருந்த ரோமானியர்கள் (Romans) இந்த நகரை கொள்ளைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க முதலில் அரண்களை அமைத்தார்கள். ரோமானியர்கள் வருவதற்கு முன்னரே 'கேல்லோ' (Gallo) என்பவர்கள் இங்கு இருந்துள்ளார்கள். 4 ஆம் நூற்றாண்டில் 'ப்ருகேஸ்'களிடம் இருந்து 'பிராங்க்ஸ்' (Franks) என்ற பிரிவினர்கள் இதைக் கைபற்றினார்கள். 9 ஆம் நூற்றாண்டில் 'விகிங்க்ஸ்' (Vikings) என்பவர்கள் இங்கு கொள்ளை அடித்தபோது 'கவுண்ட் ஆப் ப்லாண்டேர்ஸ் பால்ட்வின் I' (Count of Flanders Baldwin I) என்பவர் ரோமானியர்களின் இடங்களை பாதுகாக்க கோட்டையை மேலும் பலப்படுத்தினார். அப்போதுதான் 'ப்ரைக்கியா' (Bryggia) என்றப் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியாயின.
ப்ருகேஸ் செல்ல வேண்டுமா
(Visiting Bruges)
'ப்ருச்சில்ஸ்' (Brussels) அல்லது 'லில்லி' (Lily) என்ற இடத்துக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து இந்த இடத்துக்கு ரயிலில் (Train) செல்லலாம். ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு ரயில் சேவை உள்ளது. அந்த இடங்களில் இருந்து இங்கு சுமார் 20 நிமிடங்களில் செல்லலாம். 'ப்ருச்சில்ஸ் ஜுயிட்' (Brussel-Zuid) என்ற இடத்தில் இருந்து ரயிலில் சென்றால் இங்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகும்.
ப்ருகேஸ்சில் என்ன பார்க்கலாம்
(Places of Interest to Visit in Bruges)
வரலாற்று சிறப்பு மிக்க 'ப்ருகேஸ்' நகரை நடந்தே சென்று பார்க்கலாம். 'ப்ளெமிஷ்' (Flemish) எனும் பகுதியில் உள்ள 'டி லேஜின்' (De Lejn) என்ற வாகன சேவை (Transportation authority) அமைப்பு நிறைய பஸ் வசதிகளை வைத்து உள்ளது. அவற்றைத் தவிர இரு சக்கர சைக்கிள்களை (Bi Cycle) வாடகைக்கு எடுத்துக் கொண்டும் நகரை சுற்றிப் பார்க்கலாம்.
அரேன்ட்ஷுயிஸ்
(Arentshuis)
'டிஜ்வேர்' வாய்க்காலை (Dijver Canal) நோக்கி அமைந்து உள்ளது 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அரேன்ட்ஷுயிஸ் மாளிகை (Mansion). இதனுள் 'க்ரோயினிங்கே' மியூசியத்தின் ஒரு பிரிவு அமைந்து உள்ளது.
பெகிஜ்ன்ஹோப்
(Begijnhof)
1244 ஆம் ஆண்டு 'கான்ஸ்டண்டினோபிலை சேர்ந்த மார்கரேட்' (Margaret of Constantinople ) என்பவரால் கன்னிகாஸ்ரீ ஆகாமல் கடவுள் சேவை செய்த இளம் பெண்கள் தங்குவதற்காக இந்த இடம் அமைக்கப்பட்டது. நாட்டுப்புற சூழ்நிலையில் அமரும் இருக்கைகளைக் (Rustic Furnitures) கொண்டு , அற்புதமான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த இடம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
பெல்போர்ட்
(Belfort )
எட்டு கோண வடிவில் (Octogen) கட்டப்பட்டு உள்ள இந்த கோபுரம் (Tower) 13 அல்லது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இதன் உயரம் 83 மீட்டர். இதனுள் மேலே செல்ல 366 படிகள் உள்ளன. இதற்குள் 47 மணிகள் (Bells) உள்ளன. அதன் ஓசைகளை கி-போர்டிலும் (Key board) இசைக்க முடியும்.
மார்கெட்
(Markt (Bruges Market Square)
17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீடுகள் அழகுற சீரமைக்கப்பட்டு பெரிய மைதானத்தில் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ள இந்த இடம் 'மார்கெட்ஸ்கொயர்' (Market Square) என அழைகப்படுகின்றது. இங்கு 1881 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ள 'நியோ கோதிக் ப்ரோவின்ஷியல் ஹோப்' (Neo Gothic Provencial Hof) என்ற இடத்திற்குச் சென்று பார்க்கலாம். மேலும் அந்த மைதானத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு உள்ள 'பீட்டர் டி கொனின்க்' (Pieter de Coninck) மற்றும் 'ஜான் ப்ரேடில்' (Jan breydel ) போன்றவர்களில் சிலையையும் காணலாம்.
புர்க்
(Burg)
மார்கெட் ஸ்கொயருக்குப் பின்னால் உள்ள பெரிய கற்களால் அமைக்கப்பட்டு உள்ள இடமே 'கோப்பில்டு ஸ்கொயர்' (Cobbled Stone Square) எனப்படுவது. இதை 'புர்க்' (Burk) அல்லது 'போர்ட்' (Fort) என்கிறார்கள் . இதை சுற்றி 'நகரக் கூடம்' (Town Hall) , 'ஓடி கிரிப்பி' (Oude griffe) மற்றும் 'மறுமலர்ச்சிக் கதவு' போன்றவை உள்ளன.
சாக்கோவின் கதை
(Choco-Story)
முன்னர் வைன் மது விடுதியாக (Wine Tavern) இருந்த இந்த இடம் தற்போது சாக்கலேட்களின் காட்சியகமாக (museum for chocolates) உள்ளது. இங்கு சாக்கலேட் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம், அவற்றை சுவைத்தும் பார்க்கலாம். மத்திய அமெரிக்காவில் (Central America) துவங்கி மற்ற இடங்களுக்குப் பரவிய சாக்கலேட்டின் கதையை (Story) முழுவதும் தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டிடத்துக்குள் 'லுமினா டோமேஸ்டிகா' (Lumina Domestica) என்பதும் உள்ளது.
பிரைட் மியூசியும்
(Friet Museum)
சாக்கோவின் கதையை வடிவமைத்தவர்களே பெல்ஜியத்தின் பொரியல் வகைகளின் கதையையும் வடிவமைத்து உள்ளார்கள். இங்கு பல விதமான உருளைக் கிழங்கு (Potato) போன்றவற்றின் பொரியல் வகைகள், அவற்றின் ஆரம்பம், அதை செய்வது எப்படி போன்றவற்றைக் காணலாம் .
க்ரோயிங்கி மியூசியம்
(Groeninge Museum)
இது நுண் கலைகளின் மியூசியம். 'ப்ளெமிஷ்' (Flemish) மற்றும் 'டட்ச் ' (Dutch) மேதாவிகளின் கலை வண்ணத்தை இங்கு காணலாம். 17 முதல் 20 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த வேலைபாடுகள் காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை ஓட்டி உள்ள அரேன்ட்ஷுயிஸ் சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள அந்த மாதிரியான மேலும் பல படங்களை காணலாம்.
க்ருதூஸ் மியூசியம்
(Gruuthuse Musium)
இங்கு மேலும் அதிக கலைப் பொருட்களின் (Applied Arts) காட்சியைக் காணலாம். 'டிஜ்வேர்' (Dijver Canal) வாய்க்காலின் அருகில் ஒரு மாளிகைக்குள் உள்ள உள்ள இந்த மையம் 15 ஆம் நூற்றாண்டில் ஒரு வியாபாரியின் வீடாக (Merchant House) இருந்ததாம்.
ஹைலிக் ப்லோயேட் பேசிலேக்
(Heilig Bloed Basiliek )
'ப்ருகேஸ்சில்' உள்ள மிக முக்கியமான தேவாலயம் இது. ஐரோபியாவின் மிக முக்கியமான புனித சின்னங்களில் ஒன்று (Religuries) வைக்கப்பட்டு உள்ள இடம். இங்கு உள்ள ஒரு கண்ணாடிக் குடுவையில் (Phial) ஏசுவின் உடலைக் கழுவியபோது சிந்திய ரத்தத்தை 'அரிமாதியா'வை சேர்ந்த 'ஜோசப்' (Joseph of Arimathea) என்பவர் பிடித்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள்.
லுமினா டோமேஸ்டிகா
(Lumina Domestica )
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகளின் காட்சியகம் இங்கு உள்ளது. இங்கு பல வரலாற்று காலத்தை சேர்ந்த 6500 க்கும் அதிகமான விளக்குகள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளது.
மின்னி வாட்டர்
(Minnewater)
'ப்ருகேஸ்'சில் ஏரிகள் அடங்கிய பார்க் இது. 1488 ஆண்டு முதல் இங்கு அன்னப் பறவைகள் உள்ளன. 'ப்ருகேஸ்' மக்கள் நகர மக்கள் மன்ற உறுப்பினரான 'பிர்ரி லாஞ்சல்ச்ஸ்' (Pierre Lanchals) என்பவரின் தலையை சீவி கொன்றனர். அவர் நினைவாக இது ஏற்படுத்தப்பட்டது.
ஓந்தால்கெர்க் ஓந்சீ லிவி வ்ரௌஹ்
(Onthaalkerk Onze-Lieve-Vrouw)
நம் பெண்மணியின் நல்வரவு தேவாலயம் (Welcome Church of Our Lady) என்பது இதன் அர்த்தம். இந்த கூர்மையான (Spire) கோபுரத்தைக் கொண்ட கதோலிக தேவாலயம் 122 மீட்டர் உயரமானது. நடுக் காலமான (Medieval) 1220 ஆண்டை சேர்ந்த இதன் உட்புறம் மிகவும் எளிமையாக அமைக்கப்பட்டு உள்ளது.
செயின்ட் ஜோஹ்ன்ஹாஸ்பிடல் மற்றும் ஹான்ஸ் மேம்ப்லிங் மியூசியம்
(St-Janhospitaal and Hans Memling Museum)
12 ஆம் நூற்றாண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையாக (Hospital) இருந்த இது தற்போது மியூசியமாக உள்ளது. இது இரண்டு அம்சங்களை வெளிக் காட்டும் (Showcases) விதத்தில் அமைந்து உள்ளது. முதலாவதாக மத்திய காலத்தில் இருந்த மருத்துவமனை , உபகரணங்கள் (medical instruments) மற்றும் பழங்காலப் படுக்கைகள் (antique beds) போன்றவை ஒருபுறம் இருக்க மறுபுறம் ஜெர்மனியில் (Germany) பிறந்த ஹான்ஸ் மேம்ப்லிங் (Hans Memling) என்பவர் அந்த மருத்துவமனைக்காக வரைந்த பலவிதமான ஓவியங்கள் (Paintings) என இரண்டும் உள்ளன.
செயின்ட் சல்வடோர்கதீட்ரல்
(St-Salvatorkathedraal)
12 ஆம் நூற்றாண்டில் சமயகுருவின் வட்டார சர்ச்சாக (Parish Church) கட்டப்பட்ட இதன் பகுதிகள் ஆண்டாண்டுகளாக பெரிதாக்கப்பட்டுக் கொண்டே (enlarged over the centuries) சென்றது. முடிவாக 1834 ஆம் ஆண்டில் 'செயின்ட் டோனஷனின் தேவாலயம்' (Cathedral of St Donation) அழிக்கப்பட்டபோது இதை 'ப்ருகேஸ்'சின் பிரதான தேவாலயமாக மாற்றி அமைத்தார்கள்.
ஸ்டடுயிஸ்
(Stadhuis)
'ப்ருகேஸ்'சின் நகர மண்டபம் (Town hall) இது. 1375 ஆம் ஆண்டு இதன் முகப்பு அற்புதமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டிடத்தின் பிறை மாடங்களில் (Niches) பிரபுக்களின் மற்றும் பிரபுக்களின் மனைவிகளின் (counts and countesses) சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை வெகு காலத்துக்குப் பின்னரே வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதற்கு உள்ளே கோதிக் கலையில் 1400 ஆம் ஆண்டு அற்புதமாக அமைக்கப்பட்டுள்ள மண்டபம் (Gothic Hall) போன்றவை உள்ளன. இந்த கட்டிடம் முழுவதுமே அடுத்தடுத்து புதுப்பிக்கப்பட்ட நிலையை அற்புதமாக எடுத்துக் காட்டுகின்றது.
விஸ்மார்க்ட்
(Vismarkt)
இது மீன் மார்கெட். இங்குள்ள கண் இல்லாத கழுதையின் சந்து ("Alley of the Blind Donkey") என்றப் பெயரில் உள்ள 'ப்லிண்டி எசில்ஸ்ட்ராட்' (Blinde Ezelstraat) என்ற ஒடுக்கமான பாதை (Alley) நம்மை 'புர்கு' (Burg) பகுதிக்கு கொண்டு சேர்க்கும்.
கிழக்கு ப்ருகேஸ்சில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Eastern Bruges )
இந்த இடத்துக்கு அதிகப் பயணிகள் செல்வது இல்லை என்றாலும் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன
கைடோ கேசெல்லிமியூசியும்
(Guido Gezellemuseum)
இந்த வீட்டில்தாம் புகழ் பெற்ற 'ப்ளெமிஷ்' கவிஞ்சரான 'குயடோ கேசல்லே' வளர்ந்தார். இங்குள்ள அறைகள் ஓரளவுக்கு காலத்துக்கு தகுந்தாற் போல அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
ஜெருசெலேம்கேர்க்
(Jeruzalemkerk)
காண்ட்சென்ரம்
(Kantcentrum)
'ஜுருசலேம்கேர்'கின் (Jeruselemkerk) பக்கத்தில் உள்ள 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த இடம் ஜரிகை, நாடா அல்லது இழை கச்சடி (Lace making) போன்றவற்றை செய்யும் புகழ் பெற்ற இடம் ஆகும்.
க்ரூஸ்பூர்ட்
(Kruispoort)
'ப்ருகேஷ்' செல்லும் மத்திய காலத்தை சேர்ந்த நுழை வாயில். 1402 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது நகரின் கிழக்குப் பகுதியின் காவல் நுழை வாயிலாக இருந்தது. ஒரு காலத்தில் இங்கு 20 காற்றாலை மின் யந்திரங்கள் இருந்தன. ஆனால் தற்போது இங்கு நான்கே நான்கு காற்றாலை மின் விசிறிகள்தான் உள்ளன.
மியூசியம் ஒன்சீ லைவ் வ்ரௌவ் தேர் போட்டேரி
(Museum Onze-Lieve-Vrouw-ter-Potterie)
1276 ஆம் ஆண்டு இது வயதான பெண்மணிகளின் மருத்துவ மனையாக இருந்தது. தற்போது நம் மண்பாண்டபொருள் பெண்மணியின் மியூசியமாக (Our Lady of the Pottery) உள்ளது.
ஸ்குட்டர்ஸ்கில்டி செயின்ட் செபெஸ்டியன்
( Schuttersgilde St-Sebastian)
பெரிய வில் சங்க (Longbow Archers guild) வில்லாளிகளின் இடமான இதில் மத்தியக் கால படைவீரர்கள் இணைந்து இருந்தார்கள். ரோம மன்னன் 'டியோக்ளேஷியன்' (Emperor Diocletian) என்பவர் ஒரு கிருஸ்துவ வீரரை வில் அம்பு எய்து கொல்லுமாறு கூறியதினால் அந்த தியாகியின் நினைவாக இது அமைந்தது. அப்படி செய்தும் 'செயின்ட் செபெஸ்டியனின் (St. Sebastian) காயம் ஆறி விட்டதினால் அவரை தடியினால் அடித்துக் கொலை செய்தார்கள்.