அல்பானியா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
மத்திய தரைக் கடலில் ஐரோபியாவின் தெற்குப் பக்கத்தில் உள்ள நாடே அல்பேனியா. இதன் வடக்கு பக்கத்தில் மெசிடோனியாவும் கிழக்கில் மாண்டினிகோ மற்றும் மேற்கில் கிரீஸ் மற்றும் கடலுக்கு எதிர் கரையில் மேற்குப் பக்கத்தில் இத்தாலியும் உள்ளன. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின், 1992 ஆம் ஆண்டு முதல், இந்த நாடு கம்யூனிஸ்ட் நாடாக மாறியது. ஆனால் என்விர் ஹோக்ஸாவின் மறைவிற்குப் பின் அந்த நாடு பல கட்சி ஜனநாயக ஆட்சியின் கீழ் மாறியது.
பல வருடங்களாக எந்த நாட்டினராலும் அங்கீகரிக்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டு (Isolation) இருந்த ‘அல்பானியா’ (Albaniya) நாடு தற்போது ஐரோப்பிய யூனியனில் (Europian) இணைய முயற்சிகள் செய்து வருகின்றது. 2008 ஆம் ஆண்டில்தான் அந்த நாட்டை ‘நேடோ’ (Nato) நாட்டுப் படையுடன் இணைந்து கொள்ள அனுமதித்தார்கள். புராதான சின்னங்களைக் காண ‘அல்பானியா’ நாட்டிற்கு வருபவர்கள் அங்குள்ள கடற்கரைக் காட்சிகளை கண்டு களிக்கவே வருகிறார்கள்.
‘அல்பானிய’ நாட்டில் அதன் தலை நகரமான (Capital) ‘திரானா’ (Tirana) எனும் நகரில் மட்டுமே சர்வதேச விமான நிலையம் (International Airport) உள்ளது.
அல்பானிய நாட்டைப் பற்றிய செய்திகள்
(Fast Facts about Albania)
அங்கீகரிக்கப்பட்ட பெயர் : ‘அல்பானியக்’ குடியரசு
தலை நகரம் : ‘திரானா’ (353,000)
ஜனத்தொகை : 3,079,000
நாணயம் : லேக் (Lek)
மொழிகள் : அல்பானியன் (அரசாங்க மொழி), கிரீக்
மதங்கள் : இஸ்லாம் , அல்பானியன் ஆர்தொடாக்ஸ் , ரோமன் காதொலிக்
பரப்பளவு : 27,400 சதுர கிலோ மீட்டர்
இருப்பிடம் அல்லது கண்டம் : ஐரோப்பியா (Europe)
அல்பானியாவிற்கு செல்ல சிறந்த காலம்
(When to visit Albania)
‘அல்பானியா’விற்கு செல்ல சிறந்த காலம் குளிர்காலத்தின் துவக்கமான செப்டம்பர் (September) மாதமே. அப்போது அங்கு நிறையப் பழ வகைகள் (Fruits) கிடைக்கும். கடற்கரை ஜன நெருக்கம் இல்லாமல் இருக்கும். ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் (July - August) மாதங்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.
சீதோஷ்ண நிலை
(Climate )
ஜூலை மற்றும் ஆகஸ்ட் (July and August) மாதங்களில் கடும் வெயிலாக (Hottest) இருக்கும் (31 deg C). ஜனவரி (January) மாதங்களில் நல்ல குளிர் (Wettest) இருக்கும். (6.7 deg C).
‘அல்பானியா’விற்கு செல்வது எப்படி
(Getting into Albania)
‘அல்பானிய’ நாட்டில் அதன் தலை நகரமான (Capital) ‘திரானா’ (Tirana) எனும் நகரில் மட்டுமே சர்வதேச விமான நிலையம் (International Airport) உள்ளது. அதை 2001 ஆம் ஆண்டு அன்னை ‘நீனா தெரிசா’ (Nena Teresa) என மறு பெயரிட்டு உள்ளார்கள். 2007 ஆம் ஆண்டு அங்கு இன்னொரு டெர்மினல் (Terminal) அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ‘அன்கொனா’ (Ancona), ‘ஏதென்ஸ்’ (Athens), ‘பாரி’ (Bari), ‘பொலொக்னா’ (Bologna), ‘புருச்சில்ஸ்’ (Brussels), ‘புத்தபெஸ்ட்’(Budapest), ‘கோலன்/பான்’(Cologne/Bonn), ‘ப்லோறேன்ச்ஸ்’ (Florence), ‘பிராங்பர்ட்’ (Frankfurt), ‘ஜெனோவா’ (Genoa), ‘இஸ்தான்புல்’ (Istanbul), ‘ஜுப்ல்ஜன’ (Ljubljana), ‘லண்டன்’ (London), ‘மிலான்’ (Milan), ‘முனிச்’ (Munich), ‘நேப்பில்ஸ்’ (Naples), ‘பலமா’ (Palma), ‘பெருசியா’ (Perugia), ‘பெஸ்கரா’ (Pescara ), ‘பிஸ்சா’ (Pisa), ‘பிரேஸ்டினா’ (Pristina), ‘ரிமினி’ (Rimini), ‘ரோம்’ (Rome), ‘சோபியா’ (Sofia), ‘த்ரிஸ்டி’ (Trieste), ‘துரின்’ (Turin), வெனிஸ் (Venice) மற்றும் ‘வெரோனா’ (Verona) போன்ற இடங்களுக்குச் செல்ல விமான சேவைகள் உள்ளன.
நீங்கள் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் கட்டணமாக (entry/exit fee) 10 யுரோ (Euro) தர வேண்டும். அந்தக் கட்டணத்துக்கான தொகையை சில்லரையாக கொண்டு செல்ல வேண்டும். காரணம் அங்கு மீதி சில்லறை தரமாட்டார்கள்.
விமான நிலையத்தில் இருந்து ‘திரானா’ 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து ஒரு வாடகை வண்டியில் (Taxi) செல்லக் கட்டணம் 20 யுரோ எனும் அளவிற்கான ‘அல்பானிய’ நாணயமான 2500 லேக் (Lek) தர வேண்டும். விமான நிலையத்தில் இருந்து பஸ்ஸில் (Bus) திரானாவின் மத்தியப் பகுதியில் உள்ள தேசிய மியூசியம் (National Musium) செல்ல ஒரு வழிக் (One Way) கட்டணம் 200 லேக் ஆகும்.
அல்பானியாவின் துரேச்ஸ் பகுதியில் உள்ள கோட்டைகள்
Author: Pasztilla (public domain)
Author: Pasztilla (public domain)
அல்பானியாவின் பெரிய நகரங்கள்
(Major Cities and Towns of Albania)
(1) திரானா (Tirana )
அல்பானியாவின் தலை நகரம்
(2) துரேஸ் (Durrës)
அல்பானியாவின் இரண்டாவது நகரம் மட்டும் அல்ல மிகப் பழமையானதும், பொருளாதாரத்தில் முன்னேறிய முக்கியமான நகரமும் ஆகும்.
(3) கோர்ஸ் (Korçë)
அல்பானியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இந்த நகரம் போர்ஸ் மாகாணத்தின் மாவட்டத் தலை நகரமும் ஆகும்.
(4) எல்பாசன் (Elbasan)
ஷும்பின் நதிக்கு பக்கத்தில் அமைந்து உள்ள மத்திய அல்பானியா நகரம்
(5) ஸ்கொடேடிர் (Shkodëder)
அல்பானியாவின் வட மேற்குப் பகுதியில் ச்கடார் எனும் ஏரிக்கு அருகில் அமைந்து உள்ள நகரம்.
(6) ஜிரோகஸ்டர் (Gjirokastër)
கல்லினால் ஆனா நகரம் எனப்படும் ஜிரோகஸ்டர் நகரம் யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ள புராதான சின்ன மையம் (UNESCO World Heritage Site) ஆகும்.
(7) பிராட் (Berat )
ஆயிரத்தொரு ஜன்னல்களைக் கொண்ட நகரம் எனப்படும் பிராட் நகரமும் யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ள புராதான சின்ன மையம் (UNESCO World Heritage Site) ஆகும்.
(8) வ்லோரி (Vlorë)
அல்பானியாவில் இரண்டாவது பெரிய துறைமுகம் உள்ள நகரம்
(9) குகெஸ் (Kukës)
அல்பானியாவின் வடக்கு பக்கத்தில் உள்ள மலைகளின் இடையே உள்ள நகரம்.
(10) க்ருஜே (Krujë)
தேசிய வீரரான ஸ்கண்டேர்பேக் என்பவற்றின் சொந்த ஊர். இந்த நகரம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரமாகும். ,
(11) ப்ரோக்ராடேக் (Pogradec)
தென்கிழக்கு அல்பானியாவின் இந்த நகரத்தில்தான் புகழ் பெற்ற எழுத்தாளர்களும், கவிஞ்சர்களும் பிறந்துள்ளார்கள்.
(12) சரண்டே (Sarandë)
யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ள புராதான சின்ன மையமான (UNESCO World Heritage Site) திருமணமான தம்பதியினர் தேன்னிலவுக்குச் செல்லும் புட்ரின்ட் (Butrint) என்ற இடத்தின் அருகில் உள்ளது.
யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ள புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Site)
(1) புட்ரின்ட் (Butrint)
(2) பிராட் மற்றும் ஜிரோகஸ்ட்ரா ( Berat and Gjirokastra)

No comments:
Post a Comment