துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி' - ஜெனோவா

ஜெனோவா
( Read Original Article in :-Genova)

 
Genoa, Italy

இத்தாலியின் ஜெனோவா
Author: Twice25 (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

வடக்கு 'இத்தாலி'யின் ஒரு நகரமே 'ஜெனோவா' (Genova). அதன் ஜனத்தொகை சுமார் 900,000 இருக்கும். 'லிகுரியா' (Liguria) பிராந்தியத்தில் (Province) 'ஜெனோவா' மாவட்டத்தில் உள்ள இது அந்த மாவட்டத்தின் தலை நகரமாகும்.
ஐரோபியாவின் (Europe) மற்ற நாடுகளைப் போலவே 'ஜெனோவா'விற்கும் தனி வரலாறு (History) உள்ளது. 2500 முதல் 2000 BC வரை இங்கு 'செல்டிக்' (Celtic) மக்கள் குடியேறி இருந்தார்கள். 'ஜெனோவா'வின் கல்லறை சதுக்கம் (cemetery) 6 BC ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. ' கிரீஸ் நாட்டினர் ' (Greeks) , 'எட்ருஸ்கன்ஸ்' (Etruscans) நாட்டினர் மற்றும் 'போனிசியன்ஸ்' (Phoenicians) போன்ற இனத்தவர் 'ஜெனோவா'வில் தங்கி இருந்தார்கள். அதன் பின்னர்தான் அங்கு ரோமானியர்கள் குடியேறினார்கள். ரோமானியர்களை தொடர்ந்து 'ஓஸ்ரோகோத்ஸ்' (Ostrogoths) மற்றும் 'லோம்போர்ட்ஸ்' (Lombards) இனத்தினரும் அங்கு வந்து குடியேறினார்கள்.
Genoa street view

'ஜெனோவா'வின் ஒரு சாலை
Author: Massimo Giuliani (public domain)


12 ஆம் நூற்றாண்டில் 'ஜெனோவா' நகரம் ரோமா மன்னரின் தலைமையில் 'ஜெனோவா'வின் பிஷப் (Bishop) தலைமையில் தனி நகரமாக (independent city-state) உருவெடுத்தது. 13 ஆம் நூற்றாண்டு வரை செழிப்பாக இருந்த அந்த நகரத்தின் ஜனத்தொகை (Population) ஒரு துயரமான நாளில் (Black Death) பெருமளவு அழிந்தது (decimated).
'கிரிஸ்டோபர் கொலம்பஸ்' (Christopher Columbus) 'ஜெனோவா'வின் ஒரு முக்கியமான மனிதர். அவர் 'செயின்ட் ஜார்ஜ் ' (Bank of Saint George) அருகில் புதிய இடத்தைக் கண்டு பிடிக்க (discovery) தன்னுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தை (1/10 th) தானமாகத் (donated) தந்தார்.
'ஜெனோவா' மீது 'பிரான்ஸ்' (France) நாட்டினர் பல முறை படையெடுத்து உள்ளார்கள். 1719 ஆம் ஆண்டில் அந்த நகரத்தினரை 'பிரான்ஸ்' நாட்டு அதிகாரத்தின் கீழ் வருமாறு மன்னன் 'நெப்போலியன்' (Napolepon) வற்புறுத்தினாராம் .
இரண்டாம் உலக யுத்தத்தின் (Second World War) போது 'ஜெனோவா' மீது தொடர்ந்து குண்டு மழை (Bombardment) பொழியப்பட்டது. அந்த நேரத்தில் ஆங்கிலேயப்  படையினர் 'சான் லோரேன்சோ' (San Lorenzo) என்ற தேவாலயத்தின் (cathedral) மீது வீசிய குண்டு வெடிக்காமல் போயிற்று. அதை இன்னமும் அங்கு பார்வைக்காக வைத்து (Exibited) பாதுகாத்து வருகிறார்கள்.
'ஜெனோவா'வின் இசை, கலைகள், கட்டிடக் கலை, உணவு மற்றும் வரலாறு போன்றவை முக்கியமானவை. உலகின் மிகப் பழைய வங்கியான 'செயின்ட் ஜார்ஜ் ' (Bank of Saint George) இங்குதான் முதலில் அமைந்தது. 'இத்தாலி'யின் பல பெரிய வர்த்தக நிறுவனங்களின் தலைமை இடம் 'ஜெனோவா'வில் உள்ளது.
Church of San Giuseppe al Lagaccio in Genoa
ஜெனோவாவின் 'சர்ச் ஆப் சன் கியுசெப்பே அல் லகச்சியோ'
Author: DanPaolo (Creative Commons Attribution 3.0 Unported)

ஜெனோவாவிற்கு விமானப் பயணம்
(Budget Travel to Genoa By Plane )

'ஜெனோவா'வின் 'கிரிச்டோ போரோ கொலோம்போ' (Christoforo Colombo) விமான நிலையத்துக்கு (Airport) பல நாடுகளில் இருந்து விமான சேவைகள் உள்ளன. அங்கு வந்ததும் விமான நிலையத்தின் 'ஷட்டல் பஸ்ஸான' (Shuttle bus) 'வோலா பஸ்ஸைப்' (Volabus) பிடித்து ஜெனோவாவின் புற நகர் பகுதியில் (Down town) இறங்கிச் செல்ல வேண்டும்.

ரயிலில் செல்ல (By Train)
'மிலன்' (Milan), 'துரின்' (Turin), 'ரோம்' (Rome), 'பிசா' (Pisa) மற்றும் 'ப்லோரேன்ஸ்' (Florence) போன்ற இடங்களில் இருந்து இங்கு செல்ல பல ரயில்கள் உள்ளன. 'பிரின்ஸ்சிபி' (Principe station) எனும் ரயில் நிலையத்தில் இருந்து 'ஜெனோவா'வின் புற நகர் (Downtown) செல்ல ரயில் சேவை உள்ளது.
ஜெனோவாவின் உள்ளே சுற்றிப் பார்க்க நடந்தே செல்லலாம். அதன் பழைய பகுதிகளுக்குச்(old city) செல்ல பஸ்ஸில் பயணிக்கலாம்.
Royal Palace, Genoa
மன்னர் அரண்மனை
Author: © Giovanni Dall'Orto

No comments:

Post a Comment