கதீட்ரல், எச்மியாஸ்ட்சின் சர்ச் மற்றும்
ஸ்வார்த்நாட்ஸ் தொல்பொருள் மையம்
ஸ்வார்த்நாட்ஸ் கதீட்ரல் சிதைவுகள்
Author: David Holt (Creative Commons Attribution 2.0)
'கதீட்ரல்', 'எச்மியாஸ்ட்சின்' சர்ச் மற்றும் 'ஸ்வார்த்நாட்ஸ்' தொல்பொருள் மையம் (cathedral and churches of Echmiatsin and the archaeological site of Zvartnots) போன்றவை 'ஆர்மேனியா'வில் (Armenia) உள்ள உலக புராதான சின்ன மையங்கள் ( World Heritage Sites in Armenia) ஆகும். ஆர்மேனியன் தேவாலயங்களில் காணப்படும் கட்டிட நிர்மாணக் கலையின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக அமைந்து உள்ளன. மத்திய காலத்தை சேர்ந்த இந்த கட்டிடங்களின் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டே 'ஆர்மேனியா'வின் தேவாலயங்கள் பலவும் கட்டப்பட்டு உள்ளன என்பது நன்கே தெரிகின்றது.
'ஆஸ்திரேலியாவின்' (Australia) 'கைர்ன்ஸ்' (Cains) நகரில் 2000 ஆண்டு நவம்பர் மாதம் 24 முதல் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன அங்கத்தினர்கள் (World Heritage Committee) கூட்டத்தில் 'கதீட்ரல்', 'எச்மியாஸ்ட்சின்' சர்ச் மற்றும் 'ஸ்வார்த்நாட்ஸ்' தொல்பொருள் மையம் போன்றவை யுனேஸ்கோவின் உலக புராதான சின்னங்களாக (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்டன. அந்த இடங்களின் மொத்தப் பரப்பளவு 74.3 ஹெச்டைர்களாகும்.
எச்மியாஸ்ட்சின் கதீட்ரல்
எச்மியாஸ்ட்சின் கதீட்ரலில் தெய்வ பீடம்
எச்மியாஸ்ட்சின் கதீட்ரலில் கச்கார் எனப்படும்
கலை நுணுக்கம் வாய்ந்த தூண்
Author: Heretiq (public domain)
எச்மியாஸ்ட்சின் ஹிரிப்சிம் சர்ச்
Author: Heretiq (public domain)
எச்மியாஸ்ட்சின் செயின்ட் கயானே சர்ச்
சிதைந்த நிலையில் ஸ்வார்த்நாட்ஸ் கதீட்ரல்
Author: David Holt (Creative Commons Attribution 2.0)
இந்த மையங்களில் என்ன பார்க்கலாம்
இந்த மூன்று மையங்களான 'கதீட்ரல்', 'எச்மியாஸ்ட்சின்' சர்ச் மற்றும் 'ஸ்வார்த்நாட்ஸ்' தொல்பொருள் மையங்களில் 'எச்மியாஸ்ட்சின்' கதீட்ரல் அனைவரும் விரும்பிப் பார்க்க நினைக்கும் இடம் ஆகும். 301 AD யில் 'செயின்ட் க்ரேகோரி' (St Gregory) என்பவரால் கட்டப்பட்டு இருந்தாலும் 1700 வருஷங்களில் அது பல முறை மாற்றி கட்டப்பட்டு உள்ளது. இதுவே அனைத்து ஆர்மேனியன் மதக் குரு தேவாலயங்களின் (Apostolic Church) தலைமை கதோலிக் தேவாலயம் (seat of the Catholicos) ஆகும். அதன் அருகிலேயே உள்ள 'செயின்ட் ஹிரிப்சிம் கதீட்ரல்' (St. Hripsime Cathedral) மற்றும் 'செயின்ட் கயானே' (St. Gayane Church) தேவாலயம் என்ற இரண்டும் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.
'செயின்ட் ஹிரிப்சிம் தேவாலயம்' (St.Hripsime) ஏழாம் நூற்றாண்டில் விஸ்தாரமாகவும், நல்ல உயரமான மேல் கூறையுடனும் கட்டப்பட்டு உள்ளது.
'செயின்ட் ஹிரிப்சிம் தேவாலயம்' (St.Hripsime) ஏழாம் நூற்றாண்டில் விஸ்தாரமாகவும், நல்ல உயரமான மேல் கூறையுடனும் கட்டப்பட்டு உள்ளது.
'செயின்ட் கயானே' சர்ச் (St. Gayane Church) என்பது ஆர்மேனியன் மன்னன் ஒருவர் கன்னி மேரி(Virgin) ஒருவரைக் கொன்று விட்டதினால் அவள் நினைவாக கட்டப்பட்டது.
'ஸ்வார்த்நாட்ஸ்' கதீட்ரல் எனும் மாதாகோவிலும் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுதான். 'ஆர்மேனியா' நாடு 'பைசண்டைன்' (Byzantine) ஆட்சியில் இருந்தபோது இதை 641 முதல் 653 AD யில் 'கத்தோலிக்ஸ் நெர்செஸ்' (Catholicos Nerses) என்பவர் கட்டினார். ஆனால் அது 10 ஆம் நூற்றாண்டில் இடிந்து விழுந்து விட்டது.
இவை உள்ள இடம்
'எச்மியாஸ்ட்சின்' அல்லது 'எச்மியாட்சின்' என்பது 'அர்மாவீர்' (Armavir) மாகாணத்தின் மிகப் பெரிய நகரம் ஆகும். ஆர்மாநியாவின் நான்காம் பெரிய நகரமான இதன் ஜனத்தொகை 53,000. நீங்கள் இங்குள்ள அனைத்து இடங்களையும் நடந்தே சென்று பார்க்கலாம்.
'ஸ்வார்த்நாட்ஸ்' என்பது ஏரவானில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 'ஏரவான்' சர்வதேச விமான நிலையத்தின் அருகில் உள்ள 'ஸ்வார்த்நாட்ஸ்' மாதாகோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ளது.
உலக புராதான சின்ன மையம்
(World Heritage Site)
உள்ள இடம் : N 40 09 33 E 44 17 42அங்கீகாரம் பெற்ற வருடம் :2000
பிரிவு : கலை l
தகுதி : II, III
இங்கு செல்வது எப்படி
'ஆர்மேனியா'வின் மேற்கு பக்கத்தில் இந்த இரண்டு மையங்களும் உள்ளன. ஆகவே நீங்கள் தலைநகரான 'ஏரவானில்' தங்கி இருப்பதே நல்லது. அங்கிருந்து இந்த மையங்கள் வெகு தொலைவில் இல்லை என்றாலும் அங்கிருந்துதான் உங்களுடைய பொருளாதார வசதிக்கு ஏற்ப தேர்ந்து எடுக்கும் வகையில் போக்குவரத்து சாதன வசதிகள் உள்ளன.
'எரேவாவானில்' உள்ள ஹோட்டல்களில் இணையத்தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ள மேலே உள்ள 'எரவானின்' மீதே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment