மனாமா -சுற்றுலா குறிப்புகள்
(Read Original Article in :- Manama)
'பஹ்ரைனின்' தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரமே 'மனாமா' (Manama) . இது 'பஹ்ரைனின்' வடக்குப்புறத்தில் உள்ளது. இதன் ஜனத்தொகை 162000 ஆகும்.
இந்த நகரைப் பற்றிய குறிப்பு AD 1345 லேயே உள்ளது. 1521 ஆம் ஆண்டு இதை போர்துகீயர்கள் (Portuguese) பிடித்துக் கொண்டார்கள். 1783 ஆம் ஆண்டு முதல் இது 'அல் கலிபாவின்' (Al -Khalifa) குடும்ப ஆட்சியின் கீழ் உள்ளது. 1971 ஆம் ஆண்டு இது 'பஹ்ரைனின் ' தலை நகரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மனாமாவை கடந்த 20 ஆண்டுகளில் நன்கு பராமரித்து வந்துள்ளார்கள். காரணம் அங்குள்ள கச்சா எண்ணை (Oil Wealth) வியாபாரத்தின் வளர்ச்சி. மத்திய தரைக் கடல் (Middle East) நாடுகளில் மிக அதிகமாக நிதி முதலீடு செய்யும் அளவிற்கு இந்த நகர வியாபாரம் முன்னேறி உள்ளது. கச்சா எண்ணை வியாபாரத்தைத் தவிர வேறு வியாபார கேந்திரங்களிலும் இந்த நகரம் முன்னேறி உள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் பெருமளவு இந்த நாட்டின் வளர்ச்சி இருந்தாலும் நாளடைவில் குறைந்து கொண்டே போகும் (depleting reserves) அந்த பொருட்களின் வளம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு வேறு வழிகளை நாடுமாறு உள்ளது.
மனாமாவிற்கு செல்ல வேண்டுமா
'மனாமாவின்' கிழக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'முஹாரக்' (Muharraq) எனும் இடத்தில் உள்ள 'பஹ்ரைன்' சர்வதேச விமான நிலையத்துக்கு (International Airport) சென்று அங்கிருந்து நகருக்குள் செல்லலாம். அந்த விமான நிலையத்தில் இருந்து டாக்ஸ்சி (Taxi) அல்லது அரசின் பஸ்களில் (Bus) செல்லலாம். டாக்ஸ்சியில் செல்வது சிறப்பானது. அதன் கட்டணம் அதிகம் இல்லை.
மனாமா தேசிய விரைவு சாலை வழிப் பாதை
Author: Jayson De Leon (Creative Commons Attribution 2.0 Generic)
Author: Jayson De Leon (Creative Commons Attribution 2.0 Generic)
No comments:
Post a Comment