'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்' (Al Qal'a of Beni Hammad) என்பது 'அல்ஜீரியா'வின் (Algeria) மலைகளின் நடுவில் நல்ல பாதுகாப்பான இடத்தில் உள்ள சிதைந்த நிலையில் உள்ள இடம். இதை 1980 ஆம் ஆண்டு யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) அறிவித்தார்கள். இதை 'காலா திஸ் பென்னி ஹம்மாட்' (Kalâa des Béni Hammad) என்றும் கூறுகிறார்கள். 'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்' இஸ்லாமிய நாகரீகத்தின் (Islamic civilization) அடையாள சின்னமாகக் கருதுகிறார்கள். இந்த இடம் பண்டைய காலத்தைய முஸ்லிம் நகரம் (ancient Muslim city) எவ்வாறாக இருந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாம்.
'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்'தில் என்ன உள்ளது
(What to See at Al Qal'a of Beni Hammad)
இங்கு சதுர வடிவிலான கோபுரம் செங்கல்களினால் (brick tower ) கட்டப்பட்டு உள்ளது. குளிர்காலத்தில் இந்த மையத்தை சுடர் உள்ள இடங்கள் பனிப்பொழிவினால் (Covered With Snow) மூடப்பட்டு விடுகின்றன.
இது உள்ள இடம்
(Location)
'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்' என்ற புராதான சின்னம் அல்ஜீரியாவின் 'மாடிட் பிசாரா' (Maadid Bechara) எனும் நகராட்சிப் பிரிவில் உள்ள 'விலையா டி எம்சில்வா' (Wilaya de M'Sila) எனும் பகுதியில் உள்ளது. 'ஜபேல் மாடிட்' மலைப் பிரதேசத்தில் (Jebel Maâdid mountain range) உள்ள இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் (Meter) உயரத்தில் அமைந்து உள்ளது.
வரலாறு
(History)
'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்' என்ற இதை 1007 ஆம் ஆண்டில் 'அல்ஜீரியாவை' உருவாக்கிய 'போலோகினே' (Bologhine) என்பவற்றின் மகனான 'ஹம்மாத்' (Hammad) என்பவரால் கட்டப்பட்டது. 'ஹம்மாத்' இனத்தவர்கள் 1152 ஆம் ஆண்டு வரை 'அல்ஜீரியா'வை ஆண்டவர்கள். அவர்கள் 'பெர்பெர்' (Berber) வம்சத்தை சேர்ந்தவர்கள்.1090 ஆம் ஆண்டு 'ஹிலாரியர்கள்' (Hilalians) என்பவர்கள் அந்த நகரை தாக்கியபோது அங்கிருந்து வெளியேறிய 'ஹம்மாத்' தமது தலைநகரை 'பெஜையா' (Bejaia) என்ற நகருக்கு மாற்றிக் கொண்டார்கள். 'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்'தை 1152 ஆம் ஆண்டில் . 'அல்மொஹாத்' (Almohads) என்ற இனத்தவர் அழித்து 'ஹம்மாத்' வம்ச ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். World Heritage Site
புராதான சின்னமாக ஏற்கப்பட்டதின் விவரம்
(Inscription Details)
1980 ஆம் ஆண்டு பாரிஸ் (Paris) நகரில் செப்டம்பர் (September) மாதம் 1 முதல் 15 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பு கூட்டத்தில் (World Heritage Committee) 'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்' ஒரு புராதான சின்னமாக ஏற்கப்பட்டது.
உலக புராதான சின்னம்
இருப்பிடம் : N35 49 6.384 E4 47 12.624
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1980
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : III
இந்த இடத்திற்கு எப்படி செல்லலாம்
(Getting there)
இங்கு செல்வதற்கு கடுமையான விதிகள் (tricky endeavour) உள்ளன, அதற்கு விசாவும் (Visa) தேவை. அந்த விசா படிவத்தில் இறந்து போன பெற்றோர்களின் (Deceased Parents) விவரத்தையும் குறிப்பிட வேண்டும். 'அமெரிக்க' நாட்டினர் திரும்பிப் பெற முடியாத கட்டணமாக US $100 டாலர் (US $100) இணைக்க வேண்டும். அதை மணி ஆர்டர் (Money Order) மூலம் 'அல்ஜீரியா'வின் தூதரகத்திற்கு (Embassy) அனுப்ப வேண்டும். மற்ற நாட்ட்னர் கட்டண விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அதை அனுப்ப வேண்டும்.
பார்சிலோனா (Barcelona) , மாட்ரிட் (Madrid), மிலான் (Milan), லண்டன் (London) , பெர்லின் (Berlin) , ஜெனீவா (Geneve) , மொண்டேரில் (Montreal) , இஸ்தான்புல்(Isthanbul), மாஸ்கோ (Moscow) போன்ற இடங்களில் இருந்து விமானம் மூலம் இங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன.
'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்' சிதைவுகள்
Author: Michel-Georges Bernard (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Michel-Georges Bernard (Creative Commons Attribution ShareAlike 3.0)
'அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்' சிதைவுகள்
Author: Michel-Georges Bernard (Creative Commons Attribution ShareAlike 3.0
No comments:
Post a Comment