'டிஜிமெலா' (Djemila) அல்லது 'குய்குல்' (Cuicul) எனப்படும் ரோமன் நாட்டின் பழைய சிறிய பட்டணம் 'அல்ஜீரியா'வில் (Algeria ) உள்ளது. மலைப் பிரதேசங்களில் கட்டப்பட்டு உள்ள அற்புதமான 'ரோம' (Rome) நாட்டு கட்டிட கலைக்கு எடுத்துக் கட்டாக உள்ள இந்த இடத்தை 1982 ஆம் ஆண்டில் இந்த இடம் புகழ் மிக்க புராதான சின்னமாக (World Heritage Site) அங்கீகரிக்கப்பட்டது. பெர்பிரோ மற்றும் ரோமன் கலை இரண்டையும் கொண்ட இந்த புராதான இடம் (World Heritage Site) நன்கு பராமரிக்கப்பட்டு உள்ளது.
'டிஜிமெலா'வில் என்ன பார்க்கலாம்
(What to See in Djemila)
'டிஜிமெலா'வில் ரோமன் நாட்டின் பண்டை கால ஆலயங்கள் (Temples), பேசிலிக்கா(Basilica), வளைவுகள் (Arches), 'டிஜிமெலா'வின் மலைப் பிரதேச சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டு உள்ள இருப்பிடங்கள் (Dwellings) போன்றவை உள்ளன.
'டிஜிமெலா' என்றால் 'அழகிய' (The Beautiful One) என்று அர்த்தம். அது போலத்தான் 'லாத்தின்' (Latin) பாஷையிலும் 'குய்குல்' அல்லது 'குர்குலம்' என்பதின் அர்த்தம் ஆகும். வரலாறு
(History)
முதலாம் நூற்றாண்டில் (First Century AD) இதைக் கட்டிய ரோமானியர்கள் இதை 'குய்குல்' என அழைத்தார்கள். இந்த இடம் ராணுவ மையமாக (Military Garisson) இருந்தது. இங்கு 'கார்டோ மாக்சிமஸ்' (Cardo maximus) மற்றும் 'தேகுமானுஸ் மாக்சிமஸ்' (Decumanus Maximus) என்ற இரண்டு சாலைகள் அமைக்கப்பட்டன. பின்னர் இந்த இடம் விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் (Trading Center) இடமாக ஆயிற்று.
ரோமானிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களினால் 'குய்குல்' கைவிடப்பட்டு விட அதை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டு கொண்டு அதன் பெயரை 'அழகிய' என்ற அர்த்தம் தரும் அராபியப் (Arabic) பெயரான 'டிஜிமெலா' என வைத்தார்கள்.
இந்த பகுதி உள்ள இடம்
(Location)
'அல்ஜீரியா'வின் கிழக்குப் பகுதியில் உள்ள கடலின் வட பகுதியில் உள்ள மலைப்பகுதிகளுக்கு இடையே உள்ளது 'டிஜிமெலா'
உலக புராதான சின்னம்
இருப்பிடம் : N36 19 14.016 E5 44 12.012
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1982
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : III , IV
இங்கு செல்வது ஏப்படி
(Getting there)
இந்த இடத்தை சென்று பார்க்க விரும்பினால் 'அல்ஜீரியா'வின் ஏதாவது ஒரு சுற்றுலா பயண அலுவலகத்தை (travel agent) அணுகவும்.
'டிஜிமெலா'வின் இடிபாடுகள் உள்ள இடம்
Author: Michel-Georges Bernard (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Michel-Georges Bernard (Creative Commons Attribution ShareAlike 3.0)
'டிஜிமெலா'வின் இடிபாடுகள் உள்ள இடம்
Author: Michel-Georges Bernard (Creative Commons Attribution ShareAlike 3.0
No comments:
Post a Comment