பெர்டோ - 'நியூசிட்லர்சீ'
( Read Original Article in :-
( Read Original Article in :-
நியூசிடல் ஏரி (Neusiedl lake) அல்லது ஜேர்மன் மொழியில் 'நியூசிட்லர்சீ' (Neusiedlersee) அல்லது ஹங்கேரிய (Hungary) மொழியில் 'பெர்டோ' (Fertö) எனப்படும் மரம் செடிகள் இல்லாத சம வெளியில் (Steppe) உள்ள இந்த ஏரி ஐரோப்பியாவிலேயே (Europe) மிகப் பெரிய ஏரி ஆகும். சுமார் 315 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்த ஏரியின் 240 சதுர கிலோ மீட்டர் ஏரி 'ஆஸ்ட்ரியாவில் (Austria) இருக்க மீதி 75 சதுர கிலோமீட்டர் ஏரி 'ஹங்கேரி' நாட்டுப் பகுதியில் உள்ளது.
குளிர்காலத்தில் 'நியூசிட்லர்சீ'
Author: Lutz Fischer-Lamprecht (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Lutz Fischer-Lamprecht (Creative Commons Attribution ShareAlike 3.0)
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 முதல் 16 தேதிகள் வரை நடந்த உலக புராதான சின்ன அமைப்பினர் (World Heritage Committee) கூடிய கூட்டத்தில் 'பெர்டோ - 'நியூசிட்லர்சீ' என்ற இந்த ஏரி யுனெஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்டது. இங்கு ஒரு காலத்தில் குறிப்பிட்ட கலாச்சாரத்தில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்கள். ஏழாம் நூற்றாண்டில் இது மிக அதிக அளவிலான ஜனத்தொகை கொண்டு இருந்த இடம். மேலும் 454 AD யில் 'ஒஸ்ரகோத்ஸ்' நாட்டு மன்னனான (king of Ostrogoths) 'தியோடரிக்' (Theodoric) என்பவர் 'நியூசிட்லர்சீ' ஏரியில்தான் பிறந்தார் போன்ற பல காரணங்களினால் இந்த இடத்தை யுனெஸ்கோ புராதான சின்னமாக அங்கீகரித்தார்கள்.
இன்று அந்த ஏரியின் கரைப் பகுதியில் (Shore) உள்ள 'ஆஸ்ட்ரியா'வின் பகுதியில் ஊர்கள் 'இல்மிடிஸ்' (Illmitz), 'போடர்ஸ்டொர்ப் ஆம் சி' ( Podersdorf am See), 'விடேன்' (Weiden), 'நியூசிடல் ஆம் சி' (Neusiedl am See), 'ஜோய்ஸ்' (Jois), 'வின்டேன்' (Winden), 'பிரிட்டன்ப்ருன்' (Breitenbrunn), 'புர்பாச் ஆம் நியூசிட்லர்சீ' (Purbach am Neusiedlersee), 'டோனிர்ஸ்கிர்சேன்' (Donnerskirchen), 'ஒக்கவு' (Oggau), 'ருஸ்ட்' (Rust) மற்றும் 'மோர்பிஸ்ச்' (Mörbisch) போன்றவை. அது போல 'ஹங்கேரி'யின் பகுதியில் உள்ள ஊர்கள் 'பெர்டோரகொஸ்' (Fertörákos), 'பெர்டோபோஸ்' (Fertöboz), 'பெர்டோ டி' (Fertö d), பல்ப் (Balf) மற்றும் 'பெர்டோஜ்லக்' (Fertöújlak) போன்றவை .
'நியூசிடல் ஏரி' இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் (migratory birds) புகலிடமாகவும் உள்ளது. தக்கை கட்டைகளில் மிதந்தபடி மற்றும் படகோட்டிக் (sailing and windsurfing) கொண்டு செல்லும் பந்தயங்களை இந்த ஏரி மீது நடத்துகிறார்கள். வருடா வருடம் நீச்சல் போட்டி இந்த ஏரி மீது நடக்கும். அப்போது போட்டியாளர்கள் 'மோர்பிஸ்சில்' ( Mörbisch) இருந்து 'இல்மிடிஸ்' வரை நீச்சலடித்துச் செல்வார்கள்.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 47 43 09.4 E 16 43 21.8
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2001
பிரிவு : கலை
தகுதி : V
உள்ள இடம்
(Location)
இந்த ஏரி உள்ள இடத்தை தரைப் படத்தில் (Map) பார்க்க இதன் மீது கிளிக் செய்யவும்.
இங்கு எப்படி செல்லலாம்
(Visiting Fertö/Neusiedlersee Cultural Landscape)
நீங்கள் இந்த ஏரியைப் பார்க்க வேண்டும் என்றால் 'வியன்னா' அல்லது 'புத்தபெஸ்ட்டில்' தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து ஏதாவது வாகனத்தைப் பிடித்துக் கொண்டு இங்கு செல்லலாம். வியன்னாவில் உள்ள ஹோட்டல்கள் (hotels in Vienna) மற்றும் 'புத்தபெஸ்ட்டில்' உள்ள ஹோடல்களில் ( hotels in Budapest) முன் பதிவு செய்து கொள்ள அந்தந்தப் பெயர்கள் மீது மேலே கிளிக் செய்யவும்.
வியன்னாவில் இருந்து 'நியூசிடல் ஆம் சி' செல்ல ஓஸ்ட் ஆடோபஹ்ன் (A4) {Ost -Autobahn} பஸ்சிலும் , 'மோர்பிஸ்ச் ஆம் சி' செல்ல சுடோஸ்ட் ஆடோபஹ்ன் (A3) {Sudost -Autobahn} பஸ்சிலும் செல்லலாம். அது போல 'புத்தபெஸ்ட்டில்' இருந்து மோடர்வே M1 (Motorway) மூலம் க்யோர் (Gyor) நகரத்தின் அருகில் உள்ள ஹாய்வே (Highway) 85 வரை செல்லவும். அங்கிருந்து மேற்கு நோக்கிச் சென்று அந்த ஏரியின் கரையில் உள்ள நேஷனல் பார்க்கை அடையலாம்.
வியன்னாவில் இருந்து 'நியூசிடல் ஆம் சி' செல்ல ஓஸ்ட் ஆடோபஹ்ன் (A4) {Ost -Autobahn} பஸ்சிலும் , 'மோர்பிஸ்ச் ஆம் சி' செல்ல சுடோஸ்ட் ஆடோபஹ்ன் (A3) {Sudost -Autobahn} பஸ்சிலும் செல்லலாம். அது போல 'புத்தபெஸ்ட்டில்' இருந்து மோடர்வே M1 (Motorway) மூலம் க்யோர் (Gyor) நகரத்தின் அருகில் உள்ள ஹாய்வே (Highway) 85 வரை செல்லவும். அங்கிருந்து மேற்கு நோக்கிச் சென்று அந்த ஏரியின் கரையில் உள்ள நேஷனல் பார்க்கை அடையலாம்.
நுயூசிடில் ஆம் சி பரிஷ் தேவாலயம்
No comments:
Post a Comment