துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி' - மிலான்

மிலான்
(Red Original Article in :-Milan )

 

Milan, Italy

'மிலான்' (Milan) அல்லது 'மிலானோ' (Milano) என்ற இந்த நகரமும் வடக்கு 'இத்தாலி'யில்தான் உள்ளது. உலகில் நாகரீகத்துக்குப் (Fashion) பெயர் பெற்ற இடம் இது. இங்குதான் உலகப் புகழ் பெற்ற 'லா ஸகலா ஒபேரா ஹவுஸ்' (La Scala opera house) என்பதும் உள்ளது. 'மிலானின்' ஜனத்தொகை 4.3 மில்லியன் ஆகும். தனி நபர் வாழ்கை தரத்தைக் காட்டும் GDP என்பதில் மற்ற இடங்களைவிட 'மிலான்' மிக உயர்ந்த இடத்தில் உள்ள இடம் மட்டும் அல்ல (highest GDP) இங்குள்ள பலதரப்பட்ட ஊழியர்களும் மிக அதிக அளவு ஊதியம் (highest paid) பெறுகிறார்கள். அதனால்தானோ என்னவோ 'மிலான்' உலகின் ஐந்தாவது விலைவாசிகள் மிக அதிகமாக உள்ள நகரம் எனப்படுகின்றது.
'மெடியோலனும்' (Mediolanum) எனப்படும் 'செல்டிக்' (Celtic) இனத்தவர் வந்து குடியேறவே 'மிலான்' நகரம் அமைக்கப்பட்டது. 222 BC யில் இந்த நகரம் கைபற்றப்பட்டு 'ரோமானிய' மன்னர் ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டது. வரலாற்றுச் செய்தியின்படி முன்னர் இந்த நகரம் 'விஸ்கோண்டி' (Visconti) , 'சோர்சா' (Sforza) ,மற்றும் 'ஸ்பானியர்களினால்' (Spanish) ஆளப்பட்டு வந்தது. 1805 ஆம் ஆண்டில் 'நெப்போலியன் I' (Napoleon I) என்பவரே இந்த நகரத்தை 'இத்தாலி'ய ராஜ்யத்தின் தலைநகரமாக (Capital) அறிவித்தார். உலக மகா யுத்தத்தின்போது இந்த நகரம் பெருமளவில் நாசப்படுத்தப்பட்ட (devastated) போதும் , அது யுத்தத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டு வந்து (swiftly rebuilt ) பழைய நிலையை அடைந்தது.
இன்று மிலான் சர்வதேச நகரம், அனைத்து இன மக்களும் (cosmopolitan ) அங்கு வாழ்கிறார்கள். மற்ற நாடுகளின் மீது இதன் ஆதிக்கம் (Influence) அதிகமாக உள்ளது. நாகரீகம் மற்றும் பல கலையில் (fashion and design) இது உலக நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது.
Duomo, Milan
டுயோமோ , மிலான்
Author: MarkusMark (public domain)

மிலானுக்கு விமானத்தில் செல்ல
'மிலானுக்குச்' செல்ல இரண்டு விமான நிலையங்கள் உள்ளன. அவை 'மால்பென்ஸா' (Malpensa) மற்றும் 'லினேட்' (Linate) என்பன.
'மால்பென்ஸா' விமான நிலையத்தில்  இரண்டு டெர்மினல்கள் உள்ளன. முதலாவது டெர்மினல் (Terminal I) சர்வதேச விமானங்களுக்காகவும் (international) இரண்டாவது டெர்மினல் (Terminal 2) குறைந்தக் கட்டண உள்நாட்டு சேவைகளுக்காகவும் (intercontinental) உள்ளன. இரண்டில் எந்த டெர்மினலில் இறங்கினாலும் அடுத்த டெர்மினலுக்குச் செல்ல இலவச ரயில் சேவை உள்ளது. அவற்றைத் தவிர டாக்சி சேவையும் உள்ளது.
டெர்மினல் I ல் இறங்கினால் 'மல்பென்சா எச்பிரச்ஸ்' ரயில் ( Malpensa Express Train) மூலம் 'மிலான்' புற நகர் பகுதிக்குச் செல்ல 40 நிமிடங்கள் ஆகும் . அதற்கான கட்டணம் €11.00 மட்டுமே. ஆனால் விமானத்திலேயே அந்த டிக்கட்டை வாங்கினால் கட்டணமாக €13.50 வசூலிப்பார்கள்.
டெர்மினல் 2 ல் இறங்கினால் 'ஏர்பஸ் " மூலம் 'மிலான்' புற நகர் பகுதிக்குச் செல்ல முடியும். அது போல அங்கிருந்து 'லினேட்' (Linate) விமான நிலையத்திற்குச் செல்லவும் பஸ்கள் உள்ளன. 'மிலான்' விமான நிலையத்தில் இருந்து டாக்சிகளில் 'மிலானுக்குச்' செல்ல வேண்டும் எனில் அதற்கு கட்டணமாக குறைந்தது  €85.00 கொடுக்க வேண்டும்.
'லினேட்' (Linate) விமான நிலையத்தில் இருந்து மிலானுக்குச் செல்ல நிறைய பஸ் சேவைகள் உள்ளன. பஸ் எண் 73 ணை  பிடித்து மிலானின் புற நகர் பகுதியான 'சன் பபிலோ ஸ்கொயர்' என்ற இடத்தை அடையலாம். அதற்கான கட்டணம் €1.00 மட்டுமே ஆகும்.

ரயில் மூலம் பயணம்
மிலானுக்கு ரயில் மூலம் வந்தால் 'மிலானோ சென்ட்ராலே' (Milano Centrale) ரயில் நிலையத்தில் ரயில் வந்து சேரும். பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வர ரயில்கள் உள்ளன.

'மிலானுக்குள்' சுற்றிப் பார்க்க
'மிலானுக்கு' வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் 'மிலானுக்குள்' சுற்றிப் பார்க்க பொதுஜன சேவையை அரசு அமைத்து உள்ளது. அவை அசிண்டா டிரான்ஸ்போர்டி மிலானிசி (Azienda Trasporti Milanesi) என்ற அமைப்பின் கீழ் இயக்க அவற்றில் மெட்ரோ (Metro), ரயில் (Train) , டிராம் (Trams) , பஸ்கள் (Buses) , மற்றும் S-லயன்ஸ் எனப்படும் புற நகர் ரயில் போன்ற சேவைகள் அடங்கி உள்ளன.
மெட்ரோ என்பது 'மெட்ரோபோலிடனா' (Metropolitana) என்பதின் சுருக்கம். தற்போது ஒரே ஒரு பாதையில் சென்று கொண்டு இருக்கும் அந்த சேவை மேலும் இரண்டு பாதைகளில் செல்ல உள்ளன. ஆகவே சுற்றுலாப் பயணிகளுக்கு ஊரை சுற்றிப் பறக்கச் செல்ல சிறந்த சாதனம், மெட்ரோ, அதன் பின் டிராம். பஸ்களில் செல்ல நான் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்துவது இல்லை. காரணம் அவை செல்லும் பாதைகள் (routes) நமக்கு எளிதில் புரியாது (complicated).
மெட்ரோவின் கட்டணம் ஒருவருக்கு €1. ஆனால் €3.00 கொடுத்து 24 மணி நேரத்திற்கான பயண சீட்டு அல்லது €5.50 கொடுத்து 48 மணி நேரத்திற்கான பயணச் சீட்டை வாங்கிக் கொண்டாலோ எத்தனை முறை வேண்டுமானாலும் அதில் பயணம் செய்யலாம். அல்லது €9.00 திற்கு ஒரே சமயத்தில் 10 பயண சீட்டுக்களை (carnet of 10 tickets) வாங்கிக் கொள்ளலாம். 
Galleria Vittorio Emanuelle II, Milan
கல்லீரியா விட்டோரியா இமானுயேல்  II

No comments:

Post a Comment