துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி' - ப்ரேச்சியா

ப்ரேச்சியா
(Read Original Article in :- Brescia)
Brescia, Italy
ப்ரேச்சியா, இத்தாலி  
'ப்ரேச்சியா' (Brescia) என்ற நகரம் வடக்கு 'இத்தாலி'யின் 'லோமபர்டி' (Lombardi) என்ற இடத்தில் உள்ளது. இது 1.2 மில்லியன் ஜனத்தொகைக் கொண்ட 'ப்ரேச்சியா' மாகாணத்தின் (Province) தலை நகரமாகும் (Capital) . 'லோம்பர்டியில்' உள்ள மற்றொரு நகரமான 'மிலானுக்கு' (Milan) அடுத்தபடியாக உள்ள இரண்டாவது பெரிய நகரமே இது. இதன் ஜனத்தொகை 190,000 ஆகும்.
ரோமானியர்களின் ஆட்சி காலத்தில் இருந்தே 'ப்ரேச்சியா' சதுர வடிவில் அமைந்து உள்ளது. இந்த நகரம் அமைக்கப்பட்டதற்கு பல புராணக் கதைகள் உள்ளன. 4 BC நூற்றாண்டில் 'கல்லிக் செனோமணி' (Gallic Cenomani) என்ற இடத்தின் தலை நகரமாக இது இருந்துள்ளது. 225 BC யில் ரோமானியர்கள் இதைக் கைப்பற்றிக் கொண்டார்கள். 41 BC யில் அந்த மக்களுக்கு ரோமன் நாட்டு குடியுரிமை (citizenship) வழங்கப்பட்டது.
'ப்ரேச்சியா' 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை 'லோம்பர்டி'யினரால் ஆளப்பட்டு வந்தது. AD 774 லில் சார்லேமக்னே (Charlemagne) என்பவர் 'ப்ரேச்சியா' வைக் கைபற்றிக் கொண்டார்கள். அதன் பின் 1859 ஆம் ஆண்டில் 'ப்ரேச்சியா' இத்தாலியின் ஒரு நகரமாக ஏற்கப்பட்டு இரண்டாம் உலக யுத்தத்தின்போது (Second World War) அவர்கள் எதேச்சாதிகாரத்தை (Fascism) எதிர்த்து போர் புரிந்ததற்கு சன்மானமாக அந்த இடம் தங்கப் பதக்கம் (Gold Medal) பெற்றது.
தற்போதைய 'ப்ரேச்சியா' வயலின் (Violin) இசைக் கருவியை (Musical Instruments) உற்பத்தி செய்தில் முன்னணியில் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் அங்கு ஆரம்பிக்கப்பட்ட இசைக் கல்லூரியில்தான் (school for makers and players of string) பல விதமான உலோகக் கம்பிகளைக் கொண்ட இசை வாத்தியங்கள் செய்யப்பட்டன.

'ப்ரேச்சியா'விற்கு விமானத்தில்
(Budget Travel to Brescia By Plane)
'ப்ரேச்சியா'விற்கு விமானத்தில் (Plane) செல்ல வேண்டும் எனில் 'மிலானில்' உள்ள 'ஓரியோ ஸல் செரியோ' (Orio al Serio Airport) விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கு செல்ல 'ரைனைர்' (Ryanair) போன்ற கட்டணக் குறைவான விமான சேவைகள் உள்ளன. அதைத் தவிர அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'வினோரா' (Venora) எனும் இடத்தில் உள்ள 'வில்லா பிராங்கா' (Villa Franca) எனும் விமான நிலையம் சென்றும் அங்கிருந்து செல்ல முடியும்.

ரயில் மூலம் செல்ல (By Train)
'மிலானில்' இருந்து ஒரு மணி நேரத்தில் செல்லும் 'ரியானோலே' (Reionale commuter train) பயணிகளின் ரயில் அல்லது 'யுரோ ஸ்டார் எக்ஸ்பிரஸ்' (Eurostar express train) ரயிலிலும் அங்கு செல்ல முடியும்.
'ப்ரேச்சியா'வின் புற நகர் பகுதிகளைக் (Down town) காண பஸ்சிலோ அல்லது நடந்தோ (foot or bus) செல்லலாம். பக்கத்து ஊர்களுக்கு வண்டியில் செல்லலாம்.
Brescia Cathedral
'ப்ரேச்சியா மாதாகோவில்'

No comments:

Post a Comment