துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி' - போலோக்னா

போலோக்னா
(Read Original Article in :-Bologna)
Bologna, Italy

வடக்கு 'இத்தாலி'யில் (North Italy) உள்ளதே 'போலோக்னா' (Bologna) என்ற நகரம். இது 'போ வாலி'யில் (Po Valley) உள்ளது. 'எமிலியா ரோமக்னா' (Emilia-Romagna ) எனும் நிர்வாகப் பகுதியின் தலைநகரமும் (Capital) இதுவே. AD 1088 காலத்தில் நிறுவப்பட்ட 'யூனிவர்சிட்டி ஆப் போலோக்னா' (University of Bologna) என்பதே மேற்கத்தைய நாடுகளின் மிகப் பழமையான பல்கலைக் கழகம் (University) ஆகும். போலோக்னாவின் கலாசாரம் (Culture) வரலாறு சிறப்பு மிக்கது. அங்கு பலதரப்பட்ட (cosmopolitan appearance) மக்களும் வசிக்கின்றார்கள்.
'போலோக்னாவை' சுற்றி நான்காம் நூற்றாண்டு முதலேயே (4th century BC) மக்கள் வந்து தங்கினார்கள். ரோமானியர்கள் ‘கார்தகினியான்ஸ்’ (Carthaginians) என்பவர்களின் கிராமங்களை அழித்த (destroying) அந்த கால கட்டத்தில்தான் இங்கு மக்களின் குடியேற்றம் துவங்கியது. 'செல்டிக்' (Celtic) என்ற அந்தப் பிரிவினரே பின்னர் ரோமன்களாக (Celtic) மாறினார்கள். முன்னர் 'கலோனியா ஆப் போனோனியா' (Colonia of Bolonia) எனப்பட்ட அந்த இடம் பின்னர் 88 BC யில் நகராட்சியின் (Municipality) கீழ் வந்தது. ரோமானியர்களின் ஆட்சி காலத்தின் இந்த நகரம் செழிப்பாக (Prosperous city) இருந்தது. அதை இரண்டாவது பெரிய நகரமாகவே கருதினார்கள்.
ஐந்தாவது நூற்றாண்டில் (fifth century) 'பெட்ரோனியஸ்' என்பவரால் கட்டப்பட்ட 'செயின்ட் பெட்ரோனியஸ்' (St Stefano by St. Petronius) என்ற தேவாலயம் (Church) அமைந்தப் பின்னர்தான் 'போலோக்னா'விற்கு மீண்டும் புதிய வாழ்கை கிடைத்தது என்றே கூற வேண்டும். ஆனால் 'ஜெர்மனியை' (Germany) சேர்ந்த 'லியுட்பிரான்ட்' (Liutprand) எனும் 'லோம்போர்ட் மன்னர்' (Lombord King) AD 728 அந்த நகரைக் கைபற்றினார்.
Piazza Maggiore, Palermo
பலிர்மோவின் பியாசா மக்கிஒர்
Author: Gaspa (Creative Commons Attribution 2.0 Generic)

13 ஆம் நூற்றாண்டில் (13th Century) 'லெக்கே டெல் பரடிஸ்சோ' (Legge del Paradiso) என்ற சட்டதின் மூலம் ' போலோக்னாவில்' இருந்த அடிமைகளை விடுவித்தார்கள் (free slaves). அப்போது செல்வந்தர்கள் நிறைய கட்டிடங்கள், தேவாலயங்கள் மற்றும் கோபுரங்களைக் கட்டி இருந்தார்கள்.
16 ஆம் நூற்றாண்டில் (16th Century) ஏற்பட்ட பிளேகு (Plague) எனும் நோயினால் அந்த நகரின் ஜனத்தொகை 72,000 ல் இருந்து 59,000 ஆகக் குறைந்தது. இந்த நகரம் பல கிருஸ்துவ மதக் குருக்களின் (Papal) கட்டுப்பாட்டில் இருந்தது. 1879 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதியன்று அது ஒன்றுபட்ட (United) 'இத்தாலி' நாட்டுடன் இணைந்தது. வட 'இத்தாலி'யில் (North Italy) இன்று 'போலோக்னா' மிக முக்கியமான வர்த்தக (Commercial) , தொலை தொடர்ப்பு (Communications) கொண்ட, தொழில்சாலைகள் (Industrial) மிகுந்த நகரமாக உள்ளது.

'போலோக்னா'விற்குச் செல்ல குறைந்தக் கட்டண 

(Budget Travel) விமான சேவை
'போலோக்னா' சர்வதேச விமான நிலையம் (BLQ), அல்லது 'குலில்மோ மர்கானி' விமான நிலையம் (Guglielmo Marconi Airport) எனப்படும் விமான நிலையம் 'போலோக்னாவின்' புறநகர் பகுதியில் உள்ளது. அங்கு செல்ல 'போலோக்னா'வின் மத்திய ரயில் நிலையத்தில் ( Bologna Central Train Station) இருந்து 81 அல்லது 91 நம்பர் பஸ்களில் ஏறிச் செல்லலாம். அதற்க்கான கட்டணம் ஒரு யூரோ (€1) ஆகும். மேலும் விவரம் அறிய 'டரான்ஸ்போர்டி பப்ளிஸ்சி போலோக்னா'வின்வின் ATS எனும் இணையதளத்தைப் (ATC website of Trasporti Pubblici Bologna ) பார்க்கவும். நீங்கள் ஐந்து யூரோ (€5) கட்டண செலவில் 'எரோபஸ்' அல்லது 15 யூரோ (€15) கட்டண செலவில் 'டாக்சி' மூலமும் செல்லலாம்.

ரயிலில் (By Train) செல்ல வேண்டுமா

'ஐரோபியாவின்' (Europian) அனைத்து பெரிய நகரங்களில் இருந்தும் 'போலோக்னா'விற்குச் செல்ல ரயில் வசதிகள் உள்ளன. ' மிலான்' (Milan) நகரில் இருந்து அங்கு 65 நிமிடங்களில் செல்லலாம். 'ப்லோரேன்ஸ்' (Florence) நகரில் இருந்து 2 மணி 20 நிமிடங்களிலும் , 'வெனிஸ்' (Venice) நகரில் இருந்து 2 மணி நேரத்திலும் அங்கு செல்லலாம். 'போலோனோ'வின் உள்ளே உள்ள 'டுயோ டோரி'யை (Due Torri) சுற்றிப் பார்க்க நடந்து கூடச் செல்லலாம். அல்லது ATS போன்ற (ATS Bus) பஸ்களிலும் செல்லலாம்.
Il canale delle Moline, Bologna
போலோக்னா வின் Il கனாலே டெல்லே மோலினே
Author: Twice25 (Creative Commons Attribution ShareAlike 2.5

No comments:

Post a Comment