குவா டி லாஸ் மனோஸ் அல்லது
'குவா டி லாஸ் மனோஸ்' அல்லது 'கேவ்ஸ் ஆப் ஹாண்ட்ஸ்' (Cueva de las Manos, or Cave of Hands) என்பது 'அர்ஜென்டைனா' (Argentina) நாட்டின் மலைக் குகைகளில் காணப்படும் சித்திர (Art) வேலைபாடுகள். இதற்கு யுனெஸ்கோ புராதான சின்ன மையம் என்ற அங்கீகாரம் 'மொரோக்கோ'வின் (Morocco) 'மராகேஷ்' (Marrakesh) எனும் நகரில் 29.04.1999 அன்று கூடிய கூட்டத்தில் தரப்பட்டது. இந்த குகை தரை மட்டத்தில் (Depth) இருந்து 24 மீட்டர் கீழே உள்ளது. குகையின் நுழை வாயில் பகுதியின் (Mouth) அளவு 15 மீட்டர் ஆகும்.
'குவா டி லாஸ் மனோஸ்' சில் என்ன பார்க்கலாம்
(What to See in Cueva de las Manos)
'குவா டி லாஸ் மனோஸ்' குகையில் பண்டைய காலத்தைய (கற்காலம்) சித்திரங்களைக் (prehistoric cave art) காணலாம். அவற்றில் பல இடது கையின் வெளி வடிவம் (stencilled outlines) வரையப்பட்டு உள்ளது. இடது கையை கீழே வைத்துக் கொண்டு அதன் வெளி வடிவத்தை வலது கையில் ஒரு ஸ்பிரே மெஷினை (Spray Pump) வைத்துக் கொண்டு வண்ணம் தீட்டப்பட்டது போல உள்ளது. சிவப்பு (Red), வெள்ளை (White), கருப்பு (Black) மற்றும் மஞ்சள் (Yellow) நிறங்களில் அவை காணப்படுகின்றன. அந்தக் கைகளின் அளவு ஒரு 13 வயது பையனின் (13 year old boy) கைவிரல்கள் போல உள்ளன.
ரியோ பிண்டுராசில் உள்ள 'குவா டி லாஸ் மனோஸ்'
Author: Mariano (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Mariano (Creative Commons Attribution ShareAlike 3.0)
'குவா டி லாஸ் மனோஸ்' - இன்னொரு தோற்றம்
Author: Marianoc (Creative Commons Attribution ShareAlike 3.0)
இவற்றைத் தவிர அங்கு 'குவானகோஸ்' (guanacos) எனப்படும் மிருகத்தின் சித்திரங்களும் உள்ளன. எனவே அவை அந்தப் பகுதியில் இருந்துள்ளன எனத் தெரிகின்றது. மேலும் அந்த குகைகளின் மேல் பகுதியில் (Ceilings) காணப்படும் சித்திரங்களை வண்ணம் தோய்த்த (dipping in pigments) அம்புகளை (hunting weapons) மேலே எய்து வரைந்து இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது.
வரலாறு
(History)
தென் அர்ஜென்டைனா (Argentina) பகுதியில் 'படகோனியா' (Patagonia) எனும் இடத்தில் வசித்து வந்திருந்த வேட்டைக்காரர்கள் 13,000 முதல் 9,500 ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றை வரைந்து இருக்கலாம் என நம்புகிறார்கள்.
இது உள்ள இடம்
(Location)
'குவா டி லாஸ் மனோஸ்' என்பது 'அர்ஜென்டைனா'வின் (Argentina) 'படகோனியா' (Patagonia) மாவட்டத்தில் உள்ள 'ரியோ பிண்டுராஸ்' (Río Pinturas) எனும் ஊரில் உள்ளது.
உலக புராதான சின்ன விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : S47 9 W70 40
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1999
பிரிவு : Cultural
தகுதி : III
இங்கு செல்ல வேண்டுமா
(Visiting this Site)
'குவா டி லாஸ் மனோஸ்' குகைகளைக் காணச் செல்ல வேண்டும் எனில் 'புயினோஸ் ஐரேஸ்' (Buenos Aires) சென்று அங்குள்ள ஏதாவது ஒரு ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு அங்கிருந்து இந்த இடத்திற்குச் செல்லலாம்.
‘பெரிதோ மொரினோவின்’ தென் புறத்தில் 163 கிலோமீட்டர் (Kilo meter) தொலைவில் உள்ள 'பிரான்சிஸ்கோ P. மோரினோ நேஷனல் பார்க்கில்' (Francisco P. Moreno National Park) 'குவா டி லாஸ் மனோஸ்' எனும் இந்த குகை பகுதி உள்ளது.
'புயினோஸ் ஐரேஸ்'சில் நிறைய சுற்றுலாப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு கிளிக் செய்து 'புயினோஸ் ஐரேஸ்'சில் (Hotels in Buenos Aires) உள்ள ஹோட்டல்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment