சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சால்ஸ்புர்க்
(Read Original Article in :- Unescoworldheritagesites.com/salzburg_austria )
(Read Original Article in :- Unescoworldheritagesites.com/salzburg_austria )
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 'சால்ஸ்பர்க்' (Salzburg) அல்லது 'ஆல்ஸ்டட் சால்ஸ்பர்க்' (Altstadt Salzburg) என்ற இடம் 'ஆஸ்ட்ரியா'வில் (Austria) யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையம் (UNESCO World Heritage Site) என அங்கீகரிக்கப்பட்டுள்ள இடமாகும். இதற்கான அங்கீகாரம் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 முதல் 7 ஆம் தேதி வரை கூடிய உலக புராதான சின்ன அமைப்பின் (World Heritage Committee) கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த இடத்தின் பரப்பளவு மொத்தம் 236 ஹெக்டயர் ஆகும் (தரைபடத்தில் உள்ள சிவப்பு நிற கோடுகளைப் பார்க்கவும்). இந்த இடத்தை சுற்றி உள்ள இடத்தின் மொத்த பரப்பளவு 467 ஹெக்டயர் ஆகும் (தரைபடத்தில் உள்ள பச்சை நிற கோடுகளைப் பார்க்கவும்).
'சால்ஸ்பர்க்' பல விதங்களிலும் பெருமை வாய்ந்தது. இதுவே அன்றைய ஜெர்மன் நாட்டின் நன்கு பராமரிக்கப்பட்டுள்ள (Best preserved) நகரம் ஆகும். இங்குதான் 'மொஸார்ட்' (Mozart) எனும் இசைக் கவிஞ்சன் பிறந்தார். இந்த புராதான சின்ன மையத்தில் பார்க்க வேண்டிய இடங்களை கீழே தந்து உள்ளேன்.
'சால்ஸ்பர்க்' பல விதங்களிலும் பெருமை வாய்ந்தது. இதுவே அன்றைய ஜெர்மன் நாட்டின் நன்கு பராமரிக்கப்பட்டுள்ள (Best preserved) நகரம் ஆகும். இங்குதான் 'மொஸார்ட்' (Mozart) எனும் இசைக் கவிஞ்சன் பிறந்தார். இந்த புராதான சின்ன மையத்தில் பார்க்க வேண்டிய இடங்களை கீழே தந்து உள்ளேன்.
தரை மீது அமைக்கப்பட்டு உள்ள பெயர் பலகை
Author: Nem80 (public domain)
Author: Nem80 (public domain)
உலக புராதான சின்ன மையத்தின் விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 47 48 2 E 13 2 36
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1996
பிரிவு : கலை
தகுதி : II, IV, VI
'ஆல்ஸ்டட் சால்ஸ்பர்க்'கில் என்ன பார்க்கலாம்
(What to See in Altstadt Salzburg)
இந்த இடத்தில் பார்ப்பதற்கு நிறையவே இடங்கள் உள்ளன. அவற்றை கீழே தந்து உள்ளேன்.
அல்ட்ஸ் ரதுஸ் ( Altes Rathaus)பிஸ்டுங் ஹோஹென்சால்ஸ்பர்க் (Festung Hohensalzburg (Hohensalzburg Fortress)
பிரான்சிஸ்கனேர்கிற்சே (Franziskanerkirche)
ஜெட்ரிடிகஸ்ஸே (Getreidegasse )
க்ரோசெச்ஸ் பெஸ்ட்ஸ்பில்ஹஸ் (Grosses Festspielhaus)
ஹாஸ் டிர் நடுர் ( Haus der Natur)
கபிடேல்ப்லாஸ் (Kapitelplatz)
கபுசினேர்பர்க் (Kapuzinerberg)
கொல்லேஜின்கிற்சே (Kollegienkirche)
மகர்ட்ப்லாஸ் (Makartplatz)
மொசார்டியும் (Mozarteum)
மொசார்ட்ஸ் கெபுர்ட்ஷச்ஸ் (Mozarts Geburtshaus)
நான்பெர்க் அப்பே (Nonnberg Abbey (Stift Nonnberg)
ரெசிடன்ஸ் (Residenz)
சால்ஸ்பர்க் கதீட்ரல் (Salzburg Cathedral (Salzburger Dom)
சால்ஸ்பர்க் மியூசியம் (Salzburg Museum)
ஸ்லோப் மிரபெல் (Schloß Mirabell)
செயின்ட் பீட்டர் செமேட்றி (St. Peter Cemetery (Petersfriedhof)
செயின்ட் சபேச்டியன் செமேட்றி (St. Sebastian Cemetery (Friedhof St. Sebastian)
செயின்ட் பீட்டர் அப்பே (St Peter abbay (Stift St Peter)
கீழ் கண்டவை இந்த நகருக்கு அருகில் உள்ள
சுற்றுலா தலங்கள்.
மரியா பிளெயின் (Maria Plain)
ஒபென்டோர்ப் (Oberndorf)
ஸ்லோப் லியோபோல்ட்ஸ்க்ரோன் (Schloß Leopoldskron)
இந்த இடத்தைக் கட்டும் தரைப் படம்
(Location Map)
வரலாற்று சிறப்பு மிக்க 'சால்ஸ்பர்கை' பெரிய அளவில் பார்க்க
படத்தின் மீது அல்லது இங்கே கிளிக் செய்யவும்
மோன்ஸ்பர்கில் இருந்து தெரியும் சால்ஸ்பர்க்
Author: Thomas Pintaric (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Thomas Pintaric (Creative Commons Attribution ShareAlike 3.0)
சால்ஸ்பர்கின் வரலாறு
(History of the City of Salzburg)
கற்காலத்தின் பிந்தைய (Neolithic age) காலத்தில் 'சால்ஸ்பர்கில்' மனிதர்கள் இருந்துள்ளார்கள். 'செல்ட்ஸ்' (Celts) எனப்படுபவர்களே இங்கு வந்து தங்கியவர்களில் முதல் இனத்தவர். அதன் பின் வந்த ரோமானியர்கள் (Romans) இவர்களுடன் தமது குடியிருப்புக்களை இணைத்துக் கொண்டு 'ஜுவாவும்' (Juvavum) எனும் நகரை (Town) உருவாக்கிக் கொண்டார்கள். 7 ஆம் நூற்றாண்டில் 'சால்ஸ்பர்கின் ரூபர்ட்' (Rupert of Salzburg) என முதலில் அழைக்கப்பட்ட 'செயின்ட் ரூபர்ட்' (Saint Rupert) என்பவர் இங்கு பிஷாப்பாக வந்தப் பின் இந்த நகரம் வீழத் துவங்கியது. அதன் பெயரை அவரே 'சால்ஸ்பர்க்' என மாற்றினார்.
1731 ஆம் ஆண்டு அக்டோபர் (October) மாதம் 31 ஆம் தேதியன்று வெளியேற்றம் என்ற உத்தரவை (Edict of Expulsion) போட்டார். அதன்படி 'சால்ஸ்பர்க்'கில் இருந்த கிருஸ்துவ பரோடேஸ்டன்ட் (Protestants) பிரிவினர் அனைவரும் ரோமன் கதோலிகர்களாக (Roman Catholics) மாற வேண்டும். இல்லை என்றால் 'சால்ஸ்பர்க்'கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவினால் ஆயிரக்கணக்கானவர்கள் தமது மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ள விரும்பாமல் (Renoncing faith) அங்கிருந்து வெளியேறினார்கள்.
அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் 'சால்ஸ்பர்க்' நகரம் பலரது ஆட்சியின் கீழ் இருந்தது. 1805 ஆம் ஆண்டு அதை 'ஆஸ்ட்ரிய' மன்னர் தமது ஆட்சியில் இணைத்துக் கொண்டார். ஆனால் 'வார்க்ராமில்' (Wargram) நடந்த சண்டையில் அவர் தோற்றுவிட இது 'பவாரியா' (Bavaria) நாட்டின் ஒரு பகுதி ஆயிற்று. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னால் மீண்டும் 'ஆஸ்ட்ரியா' நாட்டுடன் அதை இணைத்தார்கள். ஆனால் 'ரூபர்டிகவு' (Rupertigau) மற்றும் 'பெர்சிஸ்ட்கடேன்' (Berchtesgaden) எனும் இரண்டு பகுதிகளும் 'பவாரியா' நாட்டுடன் சேர்க்கப்பட்டது.
முதலாம் உலகப் போருக்குப் பின் இந்த நகரம் 'ஜெர்மன் ரிச்சுடன்' (German Reich) சேர்க்கப்பட்டது. 1938 ஆம் ஆண்டு அங்கிருந்த 'ஜியூஸ்' (Jews) எனப்படும் இனத்தவர் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். அவர்களை அடைத்து வைக்கப்பட்டு இருந்த கொட்டரை (Camp) இரண்டாவது உலகப் போருக்குப் (Second world war) பின்னர்தான் தெரிந்தது. அந்த யுத்தத்தின் போது 'சால்ஸ்பர்க்'கில் இருந்த பல பாலங்களும் (Bridges) தேவாலயத்தின் மேல் கூண்டுகளும் (dome of the cathedra) நாசம் அடைந்தன. ஆனால் 'போரோகியூவின்' (Baroque) பல கட்டிடங்கள் சேதம் அடையவில்லை.
இரண்டாவது உலகப் போருக்குப் பின் 'சால்ஸ்பர்க்' 'ஆஸ்ட்ரியா'வின் தலை நகரமாயிற்று (Capital) . 1950 ஆம் ஆண்டு அதன் ஜனத்தொகை 1,00,000 என்ற அளவில் ஆயிற்று. 2006 ஆம் ஆண்டு அந்த தொகை 1,50,000 என்ற அளவில் உயர்ந்தது.
சால்ஸ்பர்க் பெயரின் அர்த்தம்
(Etymology)
சால்ஸ்பர்க் என்றால் உப்பு அரண்மனை (salt castle) என்று பெயர்
சால்ஸ்பர்கிற்கு செல்வது எப்படி
(Visiting Historic Centre of the City of Salzburg)
விமானம் மூலம் (By Plane)
இந்த நகரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 'சால்ஸ்பர்க் வுல்ப்காங் அமேடியுஸ் சர்வதேச விமான நிலையம்' (Salzburg Wolfgang Amadeus Mozart International Airport) என்பதை 20 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த விமான நிலையத்திற்கு அம்ஸ்டர்டாம் (Amsterdam), ப்ருச்செல்ஸ் (Brussels), லண்டன் (London), வியன்னா (Vienna) , ஜுரிச் (Zurich) மற்றும் ஜெர்மனியின் (Germany) பல இடங்களில் இருந்தும் விமான சேவைகள் உள்ளன.
கார் மூலம் (By Car) 'முனிச்' (Munich) நகரில் இருந்துக் காரில் (Car) சென்றால் அதன் தென் பகுதியின் A8 சாலை வழியே சென்றால் வியன்னாவில் கிழக்குப் பகுதியில் உள்ள A1 பாதையை அடையலாம்.
சால்ஸ்பர்க் உள்ளே
(Getting Around Salzburg)
'சால்ஸ்பர்க்' நகரை சுற்றிப் பார்க்க வேண்டுமானால் நடந்தே (Walk) செல்லலாம். இங்கு தரப்பட்டு உள்ள தரைப் படத்தில் (Map) நீங்கள் பார்க்ககூடிய இடங்கள் (Places to Visit) காட்டப்பட்டு உள்ளன.
தங்கும் இடங்கள்
(Accommodation in Salzburg)
'ஹோட்டல்ஸ் இன் சால்ஸ்பர்க்' (Hotels in Salzburg) எனும் பெயர் மீது கிளிக் செய்து அங்குள்ள ஹோட்டல்களின் விவரங்களை அறிந்து கொள்ளவும். அதில் அனைத்து விகிதத்திலும் உள்ள ஹோட்டல்களின் விவரங்கள் தரப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment