ஆர்மேனியாவின் ஹக்ஹ்பட் மற்றும் சனஹின் மடாலயங்கள்
(Read Original Article in :-
(Read Original Article in :-
'ஹக்ஹ்பட்' மற்றும் ' சனஹின்' (Haghpat-and-Sanahin) எனும் பைசண்டைன் கலையில் கட்டப்பட்டு உள்ள மடாலயங்கள் ஆர்மேனியாவின் துமானியன் மாகாணத்தில் (Tumanian) உள்ளது. அவை இரண்டுமே 10 முதல் 13 ஆம் நூற்றாண்டில் ஆண்டு வந்த 'கயூரிகியன்' வம்சத்தினரால் (Kiurikian Dynasty) கட்டப்பட்டது.
1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 முதல் 7 தேதி வரை மெக்ஸ்சிகோ நாட்டில் உலக புராதான சின்ன அங்கத்தினர்கள் கூடிய கூட்டத்தில் இந்த இரண்டு மடாலயங்களும் யுனெஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Sites) ஏற்கப்பட்டன. சுற்றுப் புறத்தையும் சேர்த்து மொத்தமுள்ள 23.8 ஹெக்டர் பரப்பளவில் இந்த 'மோனாஸ்ட்டேரி' (Monastery) எனப்படும் மடாலயங்கள் 2.65 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது.
உலக புராதான சின்னத்தின் குறிப்பின்படி இந்த இரண்டு மோனாஸ்ட்டேரி எனப்படும் மடாலயங்களும் ஆர்மேனியன் நாட்டு மதக் கலையை (Religious) எடுத்துக் கட்டுவதாக உள்ளன என தெரிவிக்கின்றது. பரம்பரைப் பரம்பரையான 'கௌகசியன்' தாய்நாட்டு கலை மற்றும் 'பைசண்டைனின்' (Byzantine) மாதாகோவில் (Cathetral) கலை என்ற இரண்டையும் சேர்த்து அமைக்கப்பட்டு உள்ளது.

செயின்ட் நிஷான் மாதா கோவில் மற்றும் ஹக்ஹ்பட் மோனாஸ்ட்டேரி
Author: Heretiq (public domain)
ஹக்ஹ்பட் மோனாஸ்ட்டேரி மணி கூண்டு
Author: Heretiq (public domain)
சிற்பக் கலை மிக்க அமினாப்ரிகிச் எனப்படும் ஒரு தூண்
ஹக்ஹ்பட் மோனாஸ்ட்டேரி வாசகசாலை
சுரப் நஷன் சர்ச் , ஹக்ஹ்பட் மோனாஸ்ட்டேரி
சனஹின் மோனாஸ்ட்டேரி
சையோ மிகுல் டோஸ் மிஸ்சோயெஸ் சிதைவுகள், ரியோ கரண்டி டூ சுல், பிரேஸில்
சனஹின் மோனாஸ்ட்டேரி வாசகசாலை
Author: Heretiq (public domain)
சனஹின் மோனாஸ்ட்டேரி
Author: Hotel Achab (Creative Commons Attribution 2.0)
'ஹக்ஹ்பட்' மற்றும் 'சனஹின்' மோனாஸ்ட்டேரி இரண்டுமே 'செயின்ட் நிஷானினா'ல் (St.Nishan) 10 ஆம் நூற்றாண்டில் ஒரே சமயத்தில் நிறுவப்பட்டது. லோரி (Lori) மாகாணத்தின் வலது பக்கத்தில் உள்ள 'ஹக்ஹ்பட்' கிராமத்தில்தான் 'ஹக்ஹ்பட்' மோனாஸ்ட்டேரி நிறுவப்பட்டு உள்ளது. அதற்கு உள்ளே 'செயின்ட் நிஷானின்' சிறிய சர்ச்சும் உள்ளது. 966-967 AD ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் மிஞ்சி இருப்பது இதுதான். 967 மற்றும் 991 AD யில் கட்டப்பட்டு உள்ள 'செயின்ட் நிஷானின்' மிகப் பெரிய மாதாகோவிலும் (Cathetral) இங்குதான் உள்ளது.
'ஹக்ஹ்பட்' மோனாஸ்ட்டேரியில் உள்ள மற்ற கட்டிடங்கள் 1005 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உள்ள 'சோர்க் கிரிகார்' (Sourb Grigor) அல்லது 'செயின்ட் க்ரிகோரி' (Gregori) சர்ச் ஆகும். அதன் பின் அதற்கு இருபுறமும் மேலும் இரண்டு தொழுகை இடங்கள் (Chapels) கட்டப்பட்டு உள்ளன. அவற்றில் 1257 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள சிறிய தொழுகை இடத்தின் பெயர் 'ஹமாசஸ்ப் ஹவுஸ்' (Hamazasp) என்பதாகும். பெயரிடப்படாமல் உள்ள பெரிய தொழுகை இடம் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.
'ஹக்ஹ்பட்' மோனாஸ்ட்டேரியில் அற்புதமான கலையுடன் கூடிய தூண்கள் உள்ளன. அவை 11 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டு இருந்திருக்க வேண்டும். அவற்றில் 1273 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உள்ள 'அமினாப்ரிகிச்' (Amenaprkich) எனப்படும் தூணே அற்புதமானது.

'லோரி' (Lori) மாகாணத்தின் 'சனாஹின்' கிராமத்தில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ளது 'சனாஹின்' மோனாஸ்ட்டேரி. 'சனஹின்' என்றால் 'மற்றதை விடப் பழமையானது' என்று அர்த்தமாம். மற்றது என்பது 'ஹக்ஹ்பட்' மோனாஸ்டேரியைக் குறிப்பதாக எண்ணுகிறார்கள். இந்த இரண்டிலும் வட்டவடிவமான வாசகசாலைகள் உள்ளன. 'டிபெட்' நதி (Debed River) ஓடும் மலைவழிப் கால்வாய் (Canyon) பிரித்து வைத்துள்ள இரண்டு கிராமங்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி லோரி மாகாணத்தில் உள்ளன.
உலக புராதான சின்ன மையம்
உள்ள இடம் : N 41 5 42 E 44 42 37.008அங்கீகாரம் பெற்ற வருடம் : 1996
பிரிவு : கலை
தகுதி : II, IV
இங்கு செல்வது எப்படி
இந்த இரண்டு மையங்களும் 'ஆர்மேனியா'வின் வடக்குப்புறம் உள்ளன. ஆகவே நீங்கள் தலைநகரான 'ஏரவானில்' (Yeravan) தங்கி இருப்பதே நல்லது. அங்கிருந்து இந்த மையங்கள் வெகு தொலைவில் இருந்தாலும் அங்கிருந்துதான் உங்களுடைய பொருளாதார வசதிக்கு ஏற்ப தேர்ந்து எடுக்கும் வகையில் போக்குவரத்து சாதன வசதிகள் உள்ளன.
'எரேவாவா'னில் உள்ள ஹோட்டல்களில் இணையத்தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ள மேலே உள்ள எரவானின் மீதே கிளிக் செய்யவும். அந்த இரண்டு இடங்களுக்கும் தனியான வாகனத்தில் செல்ல விரும்பினால் ஏரவானில் இருந்து 'லோரி' மாகாணத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கவும்.
தங்கும் இடங்களுக்கு பதிவு செய்து கொள்ள 'ஆர்மேனியா'வின் ஹோட்டல்கள் அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் என்ற ஏதாவது இரண்டின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment