துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, July 17, 2011

அர்ஜென்டைனா - இகுவாசு பால்ஸ்

இகுவாசு பால்ஸ்
(Read Original Article in : iguazu_falls )
Iguazu Falls, Argentina/Brazil

இகுவாசு பால்ஸ்

'இகுவாசு பால்ஸ்' (Iguazu Falls) அல்லது போர்துகீசிய மொழியில் 'இகுவாக்யூ பால்ஸ்' (Iguaçu Falls) அல்லது ஸ்பானிஷ் மொழியில் 'கடாரடாஸ் டெல இகுவாசு' (Cataratas del Iguazú) எனப்படும் இந்த நீர்வீழ்ச்சியே உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். இது பராகுவே (Paraguay) மற்றும் 'அர்ஜென்டைனா'வின் (Argentina) இடையிலான எல்லையில் உள்ளது.
Iguaçu Falls, as seen from the base
இகுவாசு பால்ஸ்
Author: Andreas Tille (Creative Commons Attribution 3.0 Unported)

'அர்ஜென்டைனா' மற்றும் 'இகுவாசு பால்ஸ்சின்' இடையே உள்ள 2.7 கிலோமீட்டர் நீளப் பகுதியின் இடையில் 270 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. போர்துகேசிய - அர்ஜென்டைனா என்ற இரண்டு நாடுகளுமே (Both Countries) அந்த நீர்வீழ்ச்சியின் பக்கங்களில் பார்க்குகளை அமைத்து உள்ளன. 'அர்ஜென்டைனா'வில் உள்ள 'இகுவாசு நேஷனல் பால்ஸ்' ( Iguazú National Park) மற்றும் மறு பக்கத்தில் உள்ள 'இகுவாக்யூ நேஷனல் பால்ஸ்' (Iguaçu National Park) என்ற இரண்டுமே யுனெஸ்கோ உலக புராதான சின்னம் (Unesco World Heritage Sites) என்ற அங்கீகாரத்தை முறையே 1984 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் பெற்று உள்ளன.
பொதுவாக அங்குள்ள அந்த நீர்வீழ்ச்சிகளின் சராசரி உயரம் 64 மீட்டர் என்றாலும், மிக அதிக உயர நீர்வீழ்ச்சி 82 மீட்டர் ஆகும். அந்தப் நீர்வீழ்ச்சியின் மிக அற்புதமான பகுதியை 'கர்கண்டா டெல் டியப்லோ' (Garganta del Diablo) எனக் கூறுகிறார்கள். போர்துகேசிய (Portuguese) மொழியில் அதை 'கர்கண்டா டோ டியப்போ' (Garganta do Diabo) எனக் கூறுகிறார்கள்.
Cataracts of Iguazu Falls
பெரிய செங்குத்தான இகுவாசு நீர்வீழ்ச்சி
Author: Lau m85 (public domain)

'அல்வார் நுனேன்ஸ் கபிஸ டி வாக்க' (Álvar Núñez Cabeza de Vaca) என்ற ஸ்பானிஷ் (Spanish) நாட்டை சேர்ந்தவரே இந்த நீர்வீழ்ச்சியைக் கண்டு பிடித்தவர்.
'இகுவாசு பால்ஸ்' உள்ள இடத்தை பார்க்க இரண்டு நகரங்களில் இருந்து செல்லலாம். 'இகுவாசு பால்சியன் ஸ்டேட் ஆப் பரானா'வில் (Iguazu Fallsian state of Paraná) உள்ள 'போஸ் டூ இகுவாக்யூ' (Foz do Iguaçu) மற்றும் 'அர்ஜென்டினா' மாகாணமான 'மிசியோனிஸ்' (Misiones) என்பதில் உள்ள 'புயேர்டோ இகுவாசு' (Puerto Iguazú) என்ற நகரில் இருந்தும் செல்லலாம். இந்த நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ள மற்ற சுற்றுலா இடங்கள் 'இடைப்பூ ஹைட்ரோ எலெக்ட்ரிக் பிளாண்ட்' (Itaipu hydroelectric power plant), மற்றும் 'ஜெசூட் மிஷன்ஸ் ஆப் தி குவரனிஸ்' (Jesuit Missions of the Guaranis) , பராகுவே (Paraguay) போன்றவை.
Aerial view of Iguazu Falls
வானத்தில் இருந்து பார்த்தால் தெரியும் 'இகுவாசு பால்ஸ்'
Author: Mario Roberto Duran Ortiz (Creative Commons Attribution 3.0 Unported)

'இகுவாசு பால்ஸ்'சிற்கு எப்படிப் போவது
(How to go to the Iguazu Falls)

'இகுவாசு பால்ஸ்' உள்ள இடத்தை பார்க்க 'அர்ஜென்டினா'வின் 'போஸ் டூ இகுவாக்யூ' (Foz do Iguaçu) மற்றும் 'புயேர்டோ இகுவாசு' (Puerto Iguazú) மற்றும் 'பராகுவே'யில் இருந்து சிறிது தொலைவில் உள்ள 'சிடாத் டெல் எஸ்டி' (Ciudad del Este) என்ற நகரில் இருந்தும் செல்லலாம் .(மேலே உள்ள தரைப் படத்தைப் பார்க்கவும்.)
'புயினோஸ் ஐரேஸ்'சில் இருந்து 'புயேர்டோ இகுவாசு' அல்லது 'ரியோ டி ஜானிரோ'வில் (Rio de Janeiro) இருந்து 'போஸ் டூ இகுவாக்யூ'விற்கு விமானம் மூலம் சென்று அங்கு இருந்து இந்த பால்ஸ்சைப் பார்க்கச் செல்லலாம். அதற்க்கான கட்டணம் 'அர்ஜென்டைனா'வின் பக்கத்தில் இருந்து 30AR$ அல்லது 'இகுவாசு' பக்கத்தில் இருந்து 20 R$pp ஆகும்.

நுழைவுக் கட்டணம்
(Admission Details)

'இகுவாசு' பால்ஸ்சின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் 11.50 யுரோ(euros). அதைப் பர்ர்க்க செல்ல வேண்டிய கோபுரம் திறந்து இருக்கும் நேரம் 9:30 am முதல் 11:45 pm வரை ஆகும். சில நாட்களில் அது 9:00 am முதல் 12:45 am வரையும் திறந்து இருக்கும்.

எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.

No comments:

Post a Comment