கலையழகும் இயற்கைக் காட்சிகளையும் கொண்ட வச்சாவு பள்ளத்தாக்கு
(Read Original Article in:- Unescoworldheritagesites.com/wachau_austria)
(Read Original Article in:- Unescoworldheritagesites.com/wachau_austria)
30 கிலோ மீட்டர் பரப்பளவில் 'மேலக்' (Melk) மற்றும் 'கிரெம்ஸ்' (Krems) நகரங்களுக்கு இடையே உள்ள பகுதியே 'வச்சாவு' (Wachau) பள்ளத்தாக்கு. அதை 'தனுபி நதி' (Danube River) இயற்கையாக ஏற்படுத்தி உள்ளது. கற்காலத்திலேயே (prehistoric) இங்கு மனிதர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். இந்தப் பகுதியில் 'மேல்க் (Melk)', 'துருன்ஸ்டைன்' (Dürnstein) மற்றும் 'கிரெம்ஸ்' போன்ற அற்புதமான இயற்கை அழகுகளைக் கொண்ட நகரங்கள் உள்ளன.
இடிபாடுகளைக் கொண்ட 'துருன்ஸ்டைன்' கோட்டை. இதில்தான்
'டியூக் லிபோல்ட்' என்ற மன்னர் 'ரிச்சர்ட்' என்ற மன்னரை சிறைப்
பிடித்து வைத்து இருந்தார்.
Author: Airin (Creative Commons Attribution 1.0)
'டியூக் லிபோல்ட்' என்ற மன்னர் 'ரிச்சர்ட்' என்ற மன்னரை சிறைப்
பிடித்து வைத்து இருந்தார்.
Author: Airin (Creative Commons Attribution 1.0)
'துருன்ஸ்டைன்' தேவாலயம்
Author: Jimmy Harris (Creative Commons Attribution 2.0)
'துருன்ஸ்டைன்' தேவாலயம்- இன்னொரு காட்சி
Author: Alexxx86 (Creative Commons Attribution ShareAlike 3.0)
'துருன்ஸ்டைன்' - இன்னொரு காட்சி
Author: Denis Barthel (Creative Commons Attribution ShareAlike 3.0)
'துருன்ஸ்டைன்' - மற்றும் ஒரு காட்சி
Author: Georges Jansoone (Creative Commons Attribution ShareAlike 3.0)

'வச்சாவு'வில் என்ன காணலாம்
(What to See in Wachau Cultural Landscape)
'வச்சா'வுவில் உள்ள 'தனுபி நதி' அற்புதமானது. அதைத் தவிர இருபுறமும் உள்ள திராட்ஷைத் தோட்டங்கள் (Vineyards) பார்கவே அற்புதமாக இருக்கும். 'துருன்ஸ்டைன்' கோட்டையில்தான் இங்கிலாந்தை (England) சேர்ந்த சிங்கம் போன்ற வீரரான (Lion Hearted) 'ரிச்சார்ட்' என்பவரை 'டியூக் லிபோர்ட்' என்ற மன்னன் சிறை வைத்து இருந்தான். இதுவே அதிக சுற்றுலாப் பயணிகள் பார்க்க விரும்பும் இடம்.
831 AD யில் அமைக்கப்பட்டு உள்ள 'மேல்க்' எனும் நகரில் 'போரோக்யூவின்' மடாலயத்தைப் (Boroque Monastry) பார்க்கலாம். அதை 'ஸ்டிப்ட் மேல்க்' (Stift Melk) என்கிறார்கள். போர்ஷஸ்டாதுஸ் (Forsthaus) எனும் இடத்தில் நகரத்தைப் பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள வசதியாக சுற்றுலா பயண அலுவலகம் (city archives and tourist office) உள்ளது.

'கிரெம்ஸ் அன் டெர் டொனவு' (Krems an der Donau) என்பது 'வச்சாவு'வில் உள்ள மிகப் பெரிய நகரம் ஆகும். அந்த நகரை நடந்தே சென்று சுற்றிப் பார்க்கலாம். அங்கு 1480 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு உள்ள மத்திய காலத்தை (medieval) சேர்ந்த 'ஸ்டைனர் டோர்' (Steiner Tor) எனப்படும் நுழை வாயில் பார்க்க வேண்டியது.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 48 21 52 E 15 26 03
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : II, IV
இது உள்ள இடம்
'வியன்னா'வின் மேற்குப் பகுதியில் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'வச்சாவு' உள்ள இடத்தை தரைப்படத்தில்(Map) பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
அங்கு செல்வது எப்படி
(Getting there)
'வியன்னா'வில் இருந்து 'மேல்க்', 'கிரெம்ஸ்' மற்றும் 'வச்சாவு' செல்ல ரயில் சேவை உள்ளன. காரில் சென்றால் 'மேற்கு ஆடோபன்' (West-Autobahn) எனும் சாலையில் (A1 / E60) செல்லவும். இல்லை என்றால் E 59 அல்லது S 5 பஸ்களில் 'கிரெம்ஸ்' அல்லது 'துருன்ஸ்டைன்' வரை செல்லலாம்.
No comments:
Post a Comment