பஹமாஸ் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read Original Article in :- Bahamas )
அட்லாண்டிக் கடலில் உள்ள சிறிய தீவு நகரமே 'பஹமாஸ்' (Bahamas) என்பது. இந்த தீவு நாட்டில் 29 முக்கிய தீவுகள், 661 குட்டித் தீவு திட்டுக்கள் , 2387 குட்டித் தீவுகள் அடங்கி உள்ளன. அவை அனைத்தையும் சேர்த்து இந்த நாட்டின் பரப்பளவு 13939 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த தீவு பிரதேசம் உள்ள இடம் 'கியூபா' (Cuba) நாட்டின் வடக்குப் பகுதி, அல்லது 'துர்க்ஸ்' மற்றும் 'கைகொஸின்' (Turks and Caicos) enbathin வட மேற்கு , அல்லது 'பிளோரிடா' (Florida) வின் தென் கிழக்கில் அமைந்து உள்ளன.
பஹமாசின் ஆழமில்லாத நீல நிற ஏரியில் உள்ள தீவு
Author: Dolphins (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Dolphins (Creative Commons Attribution 3.0 Unported)
'பஹமாசின்' ஜனத்தொகை 330000 மில்லியன் ஆகும். இதன் தலை நகரம் 'நாசாவு' (Nassau). 'பஹமாஸ்' என்றப் பெயர் 'பாஜா மார்' அதாவது ஆழமில்லாத கடல் என்பதில் இருந்து வந்தது.
பஹமாசின் வரலாற்றின்படி ஒரு காலத்தில் இங்கு 'டைனோ' (Taino) எனும் மலைவாழ் மக்களில் 'அராவாக்' (Arawak) மொழி பேசிய 'லுகாயான்' (Lucayan ) எனும் இனத்தவரே குடியேறி இருந்தார்கள். 1492 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவர் எங்குதான் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தார். 'ஸ்பானிஷ்' (Spanish) நாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வந்தபோது 'லுகாயன்' இனத்தவரை அடிமைகளாக 'ஹிஸ்பானியோலா' (Hispaniola) எனும் தீவிற்கு பிடித்துச் சென்றார்கள். அதன் பின்னர் பிரிட்டிஷ் நாட்டினர் (British) 'பெர்முடாவில்' (Bermuda) இருந்து இங்கு வந்து தங்கியவரை இந்த தீவு பிரதேசம் 1513 முதல் 1648 காலியாகவே கிடந்தது.
இன்று இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிதி (Offshore Finance) போன்றவற்றினால் வளர்ச்சி பெற்று வருகின்றது. இந்த நாட்டின் சீதோஷ்ண நிலை மிக அதிக வெட்பம் முதல் அதிக வெட்பம் வரை மாறி மாறி உள்ளது. கோடைக் காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் சுழல் காற்று (Hurricane) அதிகமாக உள்ளது.
இங்கு செல்வது எப்படி
இந்த தீவு நாட்டிற்குச் செல்ல 'நஸ்சாவு' (Nassau) அல்லது 'பிரீபோர்ட்' (Freeport) வரை விமானத்தில் செல்லலாம். அல்லது ஏதாவது ஒரு கப்பலில் செல்லலாம்.
நஸ்சாவு துறை முகத்தில் பெஸ்டிவல் எனும் தங்கும் இடம்
No comments:
Post a Comment