பியுனோஸ் ஏரிஸ் சுற்றுலா குறிப்புகள்
(Read Original Article in :- Buenos Aires Travel Guide, Argentina)
பியுனோஸ் ஏரிஸ்
Author: Luis Argerich (Creative Commons Attribution 2.0 Generi
'பியுனோஸ் ஏரிஸ்' என்பது அர்ஜென்டினா நாட்டின் தலை நகரம். இதன் மத்தியப் பகுதியின் பரப்பளவு 203 சதுர கிலோ மீட்டர். 2011 ஆண்டின் கணக்கின்படி இதன் ஜனத்தொகை 2.9 மில்லியன் மக்கள் ஆகும். ஆனால் 'பியுனோஸ் ஏரிஸ்' நகரின் சுற்றுப் பகுதியையும் சேர்த்து அதன் மொத்தப் பரப்பளவு 4,758 சதுர கிலோ மீட்டர் ஆகும். 'சையோ பௌலோ' (São Paulo) நகருக்கு அடுத்து 'பியுனோஸ் ஏரிஸ்' நகரமே இரண்டாவது பெரிய நகரமாகும். இது உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட மூன்று மணி நேரம் பின் தங்கியது. இதன் சர்வதேச தொலைபேசியின் ஆரம்ப எண் 011 ஆகும். Author: Luis Argerich (Creative Commons Attribution 2.0 Generi
பியுனோஸ் ஏரிஸ் நகரில்
கோரிண்டச்ஸ் அவின்யூ எனும் பகுதி
Author: Cornelius (Creative Commons Attribution 2.0 Generic)
கோரிண்டச்ஸ் அவின்யூ எனும் பகுதி
Author: Cornelius (Creative Commons Attribution 2.0 Generic)
'பியுனோஸ் ஏரிஸ்' நகரை தெற்கு ஆப்ரிக்காவின் 'பாரிஸ்' (Paris) நகரம் என்று அழைப்பார்கள். 'டங்கோ' (Tango) எனும் ஒருவகை நடனம் பிறந்த இடம் இதுதான்.லத்தின் அமெரிக்காவின் நவீன நாகரீகம் (Latin American Fashion) , சினிமா, மற்றும் கலை நிகழ்சிகள் அதிகம் உள்ள இடம் இது. ஐரோபியாவின் கட்டிடங்களுக்கு ஒப்பான முறையில் இந்த நகரில் உள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதை அனைவரும் கண்டு வியப்பார்கள். ஆகாயத்தை தொடும் கட்டிடங்கள் (Sky Scrapers) இங்கு அதிகம்.
பெட்ரோ டி மேன்சாடோ (Pedro de Mendoza) என்பவர்தான் 1536 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியன்று இந்த நகரை நிறுவினார். முதலில் இதன் பெயர் 'சியுடாட் டி நுஷ்ட்ரா செநோரா சாண்டா மரியா டில் போயேன் ஏரிஸ்' (Ciudad de Nuestra Señora Santa María del Buen Ayre) என்றே இருந்தது. அதன் அர்த்தம் 'தென்றல் காற்று போன்ற நம் பெண்மணியான செயின்ட் மேரியின் நகரம்' (City of Our Lady Saint Mary of the Fair Winds) என்பதே.
சினிமா தியேட்ரொ ஒபெரோ, அவிநிடா கோரிஎண்டிஸ், 'பியுனோஸ் ஏரிஸ்'
Author: Barcex (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Barcex (Creative Commons Attribution 3.0 Unported)
'அர்ஜென்டினாவை' பொறுத்தவரை 'பியுனோஸ் ஏரிஸ்' நகரமே முக்கியமான இடம் ஆகும். 1776 ஆம் ஆண்டு 'வைஸ் ராயல்டி ஆப ரியோ டி லா பிளாடோ' (Viceroyalty of Río de la ப்ளட) வின் தலைநகரமாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இது 'பியுனோஸ் ஏரிஸ்' மாகாணத்தின் தலை நகரமாயிற்று. அடுத்து 1880 ஆம் ஆண்டு ர்ஜேண்டைனாவின் தலை நகரமாயிற்று.
இக்ரேஜா டி சான் நிகோலஸ் டி பரி, 'பியுனோஸ் ஏரிஸ்'
Author: Aleposta (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Aleposta (Creative Commons Attribution 3.0 Unported)
இன்று 'பியுனோஸ் ஏரிஸ்' 48 பாரியோஸ் (Barrios) எனப்படும் மாவட்டங்களைக் கொண்டுள்ளது. நகரை நல்ல முறையில் நிர்வாகிக்க 15 கம்முனாஸ் (comunas) எனும் நிர்வாகப் பகுதிகளாக பிரித்து வைத்து உள்ளார்கள்.
'பியுனோஸ் ஏரிஸ்' சிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Buenos Aires)
இங்கு செல்ல வேண்டும் எனில் அர்ஜெண்டினாவின் எசிஸா சர்வதேச விமான நிலையத்துக்கு {(The Ezeiza International Airport (EZE)} சென்று அங்கிருந்து 33 கொலோ மீட்டர் தொலைவில் உள்ள புற நகர் பகுதியை அடைய பஸ்கள், டாக்சிகள் மற்றும் தனியார் வாடகை வண்டிகள் கிடைக்கும். மனுவல் டியேண்டா லியோன் (Manuel Tienda León) என்ற பஸ்ஸில் செல்லக் கட்டணம் 45 பேசொஸ் (pesos) மற்றும் முன்பதிவு செய்து கொள்ளும் டாஸ்சிகளுக்கான கட்டணம் 150 பேசொஸ் ஆகும் . நகரின் உள்ளே சுற்றிப் பார்க்க மெட்ரோ ரயில் வசதி உள்ளது. நடந்தே கூட நகரை சுற்றலாம்.
No comments:
Post a Comment