'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா'
(Read Original Article in :-quebrada-de-humahuaca_argentina)
(Read Original Article in :-quebrada-de-humahuaca_argentina)
குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா கணவாய்
Author: Marianocecowski (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Marianocecowski (Creative Commons Attribution ShareAlike 3.0)
'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா' (Quebrada de Humahuaca) என்பது பண்டைய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட குறுகிய கணவாய் . அதை 'காமினோ இன்கா' ( Camino Inca) எனும் குறுகிய மலை பள்ளத்தாக்கு (Valley) என்றும் கூறுவார்கள். இது 'அர்ஜென்டைனா'வின் (Argentina) 'ஜுசுரி' மாகாணத்தில் (Jujuy province) உள்ளது. மேலும் 'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா' என்பது அருகில் உள்ள சிறிய ஊரின் 'ஹுமாஹுவாக்கா' கணவாய் என்ற பெயரால் வந்தது. 30.06.2003 முதல் 05.07.2003 வரை பாரிசில் கூடிய உலக புராதான சின்ன மைய அங்கத்தினர்களின் (World Heritage Committee) கூட்டத்தில் இதை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள்.
இது உலக புராதான சின்னமாக அன்கீகரிக்கப்பட்டதின் காரணம் அந்த இடம் சமூக, கலை, மற்றும் பொருளாதார கலாச்சாரத்தை ( economic, social and cultural ) எடுத்துக் கட்டும் விதத்தில் அமைந்து உள்ளதினால்தான். 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்கள். கற்காலத்தை (prehistory) சேர்ந்த அந்த வேட்டை ஆடித் திரிந்த மக்களின் (hunter-gatherers) பல சின்னங்களும் இங்கு கிடைத்து உள்ளன. அந்த காலம் முதல் இந்தக் காலம் வரை இந்த இடத்தில் பல்வேறு நாகரீகத்தை சேர்ந்த மக்கள் இருந்துள்ளார்கள். 15 ஆம் நூற்றாண்டில் இந்த இடம் 'ரியோ டி லா ப்ளேடா' மற்றும் 'பெரு' (Rio de la Plata and Peru) என்ற இரண்டு நகரங்களையும் இணைக்கும் இடமாக 'இன்கா' மன்னரின் (Inca Empire) ஆட்சி காலத்தில் இருந்துள்ளது. மேலும் 'அர்ஜென்டைனா'வின் சுதந்திரப் போராட்டத்தின் (Argentine War of Independence) போது இந்த இடம் யுத்த பூமியாகவும் இருந்துள்ளது.
'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா'வில் என்ன பார்க்கலாம்
(What to See in Quebrada de Humahuaca)
'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா'வில் இயற்கை காட்சிகளையும், அதன் அருகில் உள்ள 'டில்காரா' (Tilcara) எனும் இடத்தில் உள்ள 'புக்காரா'வில் (Pucara) அமெரிக்காவின் முந்தைய அரண் மற்றும் 'உகூயா' (Uquía) மற்றும் 'யாவி'யில் (Yavi) உள்ள தேவாலயங்களையும் காணலாம்.
இது உள்ள இடம்
(Location)
'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா' எனும் இந்த இடம் 'புயினோஸ் ஐரேஸ்'சில் இருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு மற்றும் வடக்கில் 'அல்டிப்லானோ' (Altiplano) , கிழக்கில் 'சப் ஆண்டியன் மலை'கள் (Sub-Andean hills) மற்றும் தெற்கில் 'வெல்ஸ் டேம்பிலடோ' (Valles Templados) போன்றவையும் 'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா'வின் எல்லைகளாக உள்ளன.
உலக புராதான சின்ன விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் S 23 11 59.5 W 65 20 55.9
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2003
பிரிவு : கலை
தகுதி : II, IV, V
இந்த இடத்திற்கு செல்வது எப்படி
(How to reach there)
'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா'விற்குச் செல்ல வேண்டும் எனில் முதலில் 'புயினோஸ் ஐரேஸ்' சென்று அங்குள்ள ஏதாவது ஒரு ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு அங்கிருந்து 'குபெட்ரிடா டி ஹுமாஹுவாக்கா'விற்குச் செல்லலாம். 'புயினோஸ் ஐரேஸ்'சில் நிறைய சுற்றுலாப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அல்லது நீங்கள் 'அர்ஜென்டைனா'வின் ''www.turismo.gov.ar'' என்ற சுற்றுலா இணையத்தளம் சென்று அவர்களின் உதவியுடன் ஏதாவது ஒரு சுற்றுலா நிறுவனத்தை அணுகலாம். என்னைப் பொறுத்தவரையில் ‘அர்ஜென்டைனா’வின் சிறிய ஊர்களில் தங்குவதை விட அனைத்து வசதிகளும் நிறைந்த தலை நகரான 'புயினோஸ் ஐரேஸ்'சில் தங்கிக் கொண்டு அங்கிருந்து அனைத்து இடங்களுக்கும் செல்வதே சிறந்தது என்று கூறுவேன். இங்கு கிளிக் செய்து 'புயினோஸ் ஐரேஸ்'சில் (Hotels in Buenos ஐரேஸ்) உள்ள ஹோட்டல்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment