புஷ்கின் பாஸ் , ஆர்மேனியா
Author: Lockalbot (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Lockalbot (Creative Commons Attribution 3.0 Unported)
'ஐரோப்பியா' (Europe ) மற்றும் 'ஆசியா'வுக்கு (Asia) இடையே உள்ள பகுதியை 'காகஸ்' (Caucasus) பிரதேசம் என்பார்கள். அந்தப் பகுதியில் பல பிரதேசங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மலைப் பிரதேசமான 'ஆர்மேனியா' (Armenia) எனும் நாடு. இதை கிழக்கு 'ஐரோப்பியா' அல்லது கிழக்கு 'ஆசியா' என்று கூடக் கூறுவார்கள். இந்த நாட்டின் பரப்பளவு 29,743 சதுர கிலோ மீட்டர் (11,484 சதுர மைல்) ஆகும். இதன் எல்லைகள் வடக்கில் 'ஜியார்கியா'வையும் (Georgia), கிழக்கில் 'அஜர்பைஜான்' ( Azerbaijan ) மற்றும் 'நாகூர்னா கரபாக்' (Nagorno-Karabakh) என்ற நகரையும், தெற்கில் 'இரான்' (Iran) மற்றும் மேற்கில் 'துர்கி' (Turkey) நாட்டையும் தொட்டபடி உள்ளன.
எகிபத்ருஷ் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த
ஆர்மேனியன் தேவாலயம்
Author: Serouj (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Serouj (Creative Commons Attribution 3.0 Unported)
2010 ஆம் ஆண்டின் கணக்கின்படி 'ஆர்மேனியா'வின் ஜனத்தொகை 3.3 மில்லியன், GDP என்பது $ 8.8 பில்லியன், மற்றும் தனி நபர் வருமானம் எனும் GDP $2,676 ஆகும் . தலை நகரம் ஏரவான் (Yerevan).
'ஆர்மேனியா'வின் வரலாறு 2492 BC க்கு முற்பட்டது . 'அன்டோலியா' (Anatolia) எனும் 3000 வருட பழைய பூமி தரைப் படத்தில் (Map) இடம் பெற்றுள்ள ஒரே நாடு இதுதான். இந்த நாடு AD 301 ஆம் ஆண்டில் தம்முடைய நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மதம் கிருஸ்துவ மதம் (Christian) என அறிவித்துக் கொண்டதினால் உலகிலேயே இதுவே முதலாம் கிருஸ்துவ மத நாடாகியது.
'ஆர்மேனியா'வின் வரலாறு 2492 BC க்கு முற்பட்டது . 'அன்டோலியா' (Anatolia) எனும் 3000 வருட பழைய பூமி தரைப் படத்தில் (Map) இடம் பெற்றுள்ள ஒரே நாடு இதுதான். இந்த நாடு AD 301 ஆம் ஆண்டில் தம்முடைய நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மதம் கிருஸ்துவ மதம் (Christian) என அறிவித்துக் கொண்டதினால் உலகிலேயே இதுவே முதலாம் கிருஸ்துவ மத நாடாகியது.
காபன் பகுதியில் உள்ள வாச்சகன் நதியில் இருந்து
பார்த்தால் தெரியும் குஷ்டப் மலை
Author: Yakovlev Sergey (public domain)
பார்த்தால் தெரியும் குஷ்டப் மலை
Author: Yakovlev Sergey (public domain)
பல நூற்றாண்டுகளில் பலதரப்பட்ட பிரிவினரும் இந்த நாட்டின் ஆட்சியைப் பிடித்தார்கள். இதை ஆண்டவர்கள் AD 428 ஆம் ஆண்டை சேர்ந்த 'சசானிட்' மன்னர் (Sassanid Empire), 884 லில் 'பக்ராடுனி' வம்சத்தினர் (Bagratuni), 1045 ல் 'பைசண்டைன்' மன்னர் (Byzantine Empire), 1071 னில் 'துர்கி'யை சேர்ந்த 'செல்சுக்' மன்னர் (Seljuk Empire) 12 ஆம் நூற்றாண்டில் 'ஜகாரிட்' (Zakarid) குடும்பத்தினர் 1230 ஆண்டுகளில் 'மங்கோல் '(Mongul) இனத்தவர் மற்றும் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'ஓட்டமான்' மன்னர்கள். (Ottoman Empire). 1908 ஆம் ஆண்டு அவர்களை பதவியில் இருந்து துரத்திய புரட்சி இளைஞ்சர்கள் (Young Turks) நாட்டை பிடித்துக் கொண்டார்கள்.
1922 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் தேதியன்று 'ஆர்மேனியா'வை தனது நாட்டுடன் 'சோவியத் யூனியன்' (Soviet Union) இணைத்துக் கொண்டது. 1980 ஆம் ஆண்டில் 'சோவியத் யூனியனின்' பிரதமரான 'கோர்பச்சேவ்' (Gorbachev) கொண்டு வந்த சீர்திருத்தங்களின்படி 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி 'ஆர்மேனியா' சுதந்திர நாடாக (Independent) மாறியது. 1991 ஆம் ஆண்டு 'சோவியத் யூனியன்' கலைக்கபட்டபோது இந்த நாடு சுதந்திரம் அடைந்ததை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். தற்போது இந்த நாடு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்ட ஜனநாயக நாடாகும்.
வோரடான் நதியில் டெவில் பிரிட்ஜ்
Author: Lockalbot (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Lockalbot (Creative Commons Attribution 3.0 Unported)
CIS நாட்டை சேர்ந்தவர்களுக்கும் 'ஆர்ஜென்டினா'வை (Argentina) சேர்ந்தவர்களுக்கும் 90 நாட்கள் அங்கு தங்கிக் கொள்ளும் வரை விசா (Visa) தேவை இல்லை. ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 'ஆஸ்த்ரேலியா' (Australia), 'கானடா' ( Canada), 'ஜப்பான்' (Japan), 'சிங்கப்பூர்' (Singapore) மற்றும் 'அமெரிக்காவை' (United States) சேர்ந்தவர்கள் 3,000 டிராம் ($8/€6) கட்டணத்தை செலுத்தி விசா பெற்று 21 நாட்கள் அந்த நாட்டில் பயணம் செய்யலாம். ஆப்கானிஸ்தானை (Afghanistan), தவிர 'பங்க்ளாதேஷ்' (Bangladesh ), 'காமேரான்' (Cameroon), 'எகிப்து' (Egypt), 'இராக்' (Iraq), 'நைஜெர்' (Niger), 'நைஜீரியா' (Nigeria), 'பாகிஸ்தான்' (Pakistan), 'சவூதி அராபியா' (Saudi Arabia), 'சோமாலியா' ( Somalia), 'ஸ்ரீலங்கா' (Sri Lanka), 'சூடான்' (Sudan) போன்ற நாடுகளில் உள்ளவர்கள் இணையதளத்திலேயே விசாவிற்கு விண்ணப்பித்து அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
கார்னியில் உள்ள பகான் கிரேக்கோ ரோமன் ஆலயம்
Author: Lockalbot (Creative Commons Attribution 3.0 Unported)
விமானம் மூலம்Author: Lockalbot (Creative Commons Attribution 3.0 Unported)
(By Plane)
'எரவானில்' (Yerevan) உள்ள ஜார்டனச்ஸ் சர்வதேச விமான நிலையமே {Zvartnots International Airport (EVN)} இந்த நாட்டிற்குச் செல்ல முக்கியமான வாயில் பகுதியாகும். 'ஐரோப்பியா' மற்றும் 'ஆசியா'வின் பல நாடுகளில் இருந்தும் விமான சேவைகள் உள்ளன
ரயில் மூலம்
(By Rail)
'ஜியார்ஜியா'வின் ( Georgia) 'திலிப்சி' (Tbilisi) நகரில் இருந்து 'ஏரவானுக்கு' ரயில் சேவைகள் உள்ளன . முன்னர் 'துர்கி' (Turkey) மற்றும் 'அஜர்பைஜான்' (Azerbaijan) pondra நாடுகளுடன் இருந்த ரயில் சேவைகள் tharpothu நிறுத்தப்பட்டு விட்டன.
ஆர்மேனியாவின் முக்கிய நகரங்கள்
1. எரேவன் (Yerevan) - தலை நகர்
2. டிலிஜான் (Dilijan)
3. கும்ரி (Gyumri)
4. ஜெர்முக் (Jermuk)
5. தகஹட்ஜார் (Tsaghkadzor)
6. வனட்ஜார் (Vanadzor)
யுனெஸ்கோ புராதான மையங்கள்
(Unesco World Heritage Sites in Armenia )
(2) எஸ்மியாட்சின் மாதா ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும்
(3) ஜெகார்ட் மடாலயம் மற்றும் அஸாத் வால்லி
No comments:
Post a Comment