இஸ்சிகலாஸ்டோ / தலம்பயா நேஷனல் பார்க்ஸ்
(Read Original Article in :-
(Read Original Article in :-
'இஸ்சிகலாஸ்டோ மற்றும் தலம்பயா' நேஷனல் பார்க்ஸ் (Ischigualasto and Talampaya) என்பன 'அர்ஜென்டைனா'வில் (Argentina) அடுத்தடுத்து உள்ள இரண்டு புராதான சின்னங்கள். இவை இரண்டும் 'அர்ஜெண்டினா'வின் வடமேற்குப் பகுதியில் உள்ள 'சான் சுவான்' (San juan) மாகாணம் மற்றும் 'லா ரியோஜா' (La Rioja) என்ற இரண்டு மாகாணங்களின் எல்லைகளிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல ஊடுருவி உள்ளன. 'ஆஸ்ரேலியா' (Australia) நாட்டில் 02.12.2000 அன்று நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee) கூட்டத்தில் இவை இரண்டும் யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites) அங்கீகரிக்கப்பட்டது.
'இஸ்சிகலாஸ்டோ மற்றும் தலம்பயா' நேஷனல் பார்க்கில் என்ன பார்க்கலாம்
(What to See in Ischigualasto & Talampaya National Parks)
'இஸ்சிகலாஸ்டோ மற்றும் தலம்பயா' நேஷனல் பார்க்கில் 245-208 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இருந்த மம்மல், டினாஸ்சியர் (mammals, dinosaurs) போன்ற மிருகங்களின் உடல் அமைப்பு மற்றும் வடிவங்களையும் காட்டும் எலும்புகள் மற்றும் அவற்றின் வாழ்கை முறைகளையும் காட்டும் வகையில் காட்சிகள் அமைந்து உள்ளன. அவற்றைத் தவிர சுற்றி இருந்த இயற்கை சூழலை எடுத்துக் காட்டும் இயற்கையாக அமைந்துள்ள பாறை வடிவமைப்புகளும் உள்ளன.
'இஸ்சிகலாஸ்டோ' நேஷனல் பார்க்கில் உள்ள பாறைகள்
Author: idobi (Creative Commons Attribution ShareAlike 3.0)
தலம்பயா நேஷனல் பார்க்கின் இன்னொரு காட்சி
Author: Andarin2 (Creative Commons Attribution ShareAlike 3.0)
இவை உள்ள இடம்
(Location)
'இஸ்சிகலாஸ்டோ ' நேஷனல் பார்க் சுமார் 603.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது . அது 'சான் ஜுவான்' மாகாணத்தில் (San Juan province) கடல் மட்டத்தில் (above sea level) இருந்து 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது.
'தலம்பயா' நேஷனல் பார்க் 'லா ரியோஜா' மாகாணத்தில் 2150 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடல் மட்டத்தில் (above sea level) இருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.
இந்த உலக புராதான சின்ன இடத்தின் விவரம்
உள்ள இடம் : S30 0 0 W68 0 0
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : இயற்கை
தகுதி : VIII
இங்கு செல்ல வேண்டுமா
(Visiting this Site)
'குவா டி லாஸ் மனோஸ்' குகைகளைக் காணச் செல்ல வேண்டும் எனில் முதலில் 'புயினோஸ் ஐரேஸ்' (Buenos Aires) சென்று அங்குள்ள ஏதாவது ஒரு ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு அங்கிருந்து இந்த இடத்திற்குச் செல்லலாம்.
'புயினோஸ் ஐரேஸ்'சில் இருந்து 'சான் ஜுவான்' அல்லது 'லா ரியோஜா' என்ற நகருக்குச் சென்று அங்குள்ள இந்த இடத்தை அடையலாம்.
புயினோஸ் ஐரேஸ்'சில் நிறைய சுற்றுலாப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு கிளிக் செய்து 'புயினோஸ் ஐரேஸ்'சில் (Hotels in Buenos Aires) உள்ள ஹோட்டல்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment