'அல்ஜீரியா'வில் (Algeria) உள்ள 'டாஸ்சிலி என் அஜீர்' (Tassili n'Ajjer) என்பதும் யுனேஸ்கோ உலக புராதான சின்ன அமைப்பினால் (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்ட இடம். இந்த இடம் குகைக்குள் காணப்படும் சரித்திர காலத்துக்கு முந்தைய சித்திரங்களுக்காக (prehistoric cave art) இதை உலக புராதான சின்ன மையமாக அங்கீகரித்தது.
'டாஸ்சிலி என் அஜீர்'ரில் என்ன பார்க்கலாம்
(What to See in Tassili n'Ajjer)
இங்குள்ள குகைகளில் 15,000 வரையப்பட்ட மற்றும் செதுக்கப்பட்ட சித்திரங்களும் (drawings and etchings) காணப்படுகின்றன. அவை அனைத்தும் விலங்குகள் காலத்துக்கு ஏற்ப இடம் மாறிச் செல்லும் சித்திரங்களாகவும் மனித வாழ்கையைக் காட்டும் படங்களாகவும் உள்ளன. அவை அனைத்தும் 6000 BC வருட காலத்துக்கு முற்பட்டவை, அதாவது 1 AD ஆம் நூற்றாண்டை (1st century AD) சேர்ந்தவை என்கிறார்கள். அந்த சித்திரங்கள் பல இடங்களிலும் மாறுபட்டு (varying) உள்ளன. ஆகவே அவை பல்வேறு காலங்களில் (different periods) வரையப்பட்டு இருக்கலாம். அப்படிப்பட்ட சித்திரங்களைத் தவிர 'டாஸ்சிலி என் அஜீர்' குகையில் இயற்கையாக அமைந்துள்ள பாறை வளைவுகளும் வடிவங்களும் உள்ளன. குகைக்குள்ளேயே சுமார் 300 க்கும் மேற்பட்ட பாறை வளைவுகள் இயற்கையாக (natural rock arches) அமைந்து உள்ளன.
'டாஸ்சிலி என் அஜீர்'உள்ள இடம்
(Location)
'டாஸ்சிலி என் அஜீர்' எனும் இந்த இடம் 'அல்ஜீரியா'வின் தென்கிழக்குப் பகுதியில் 'சஹாரா' பாலைவனப் (Sahara Desert) பிரதேசத்தில் உள்ளது. அதன் மிக அருகில் உள்ள ஊர் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'டிஜானேட்' (Djanet) ஆகும்.
வரலாறு
(History)
'டாஸ்சிலி என் அஜீர்' எனும் இந்த இடம் சரித்திர காலத்துக்கு முந்தைய காலத்தில் வேறு சூழ்நிலையில் இருந்துள்ளதாகவும் அப்போது அந்த இடம் விளைநில பூமியாகவும் (vegetation) இருந்ததாகவும், காலத்துக்கு ஏற்ப மழையும் பெய்து (regular rainfall) வந்துள்ளதாகவும் தெரிகின்றது.
உலக புராதான சின்னம்
இருப்பிடம் : N25 30 0 E9 0 0
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1982
என்ன பிரிவு : பல வகை
தகுதியின் விவரம் : I, III, VII, VIII
அங்கு செல்வது எப்படி
(Getting there)
'டாஸ்சிலி' என்ற இந்த இடத்தின் மிக அருகில் உள்ள ஊர் 'டிஜானேட்' (Djanet) ஆகும். ஆகவே அங்கு செல்ல வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு 'சஹாரா' பாலைவனம் மூலமே செல்லலாம்.
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1982
என்ன பிரிவு : பல வகை
தகுதியின் விவரம் : I, III, VII, VIII
அங்கு செல்வது எப்படி
(Getting there)
'டாஸ்சிலி' என்ற இந்த இடத்தின் மிக அருகில் உள்ள ஊர் 'டிஜானேட்' (Djanet) ஆகும். ஆகவே அங்கு செல்ல வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு 'சஹாரா' பாலைவனம் மூலமே செல்லலாம்.
'டாஸ்சிலி என் அஜீர்'
Author: Gruban (Creative Commons Attribution 2.0)
Author: Gruban (Creative Commons Attribution 2.0)
'டாஸ்சிலி என் அஜீர்'ரில் உள்ள சித்திரங்கள்
Author: Gruban (Creative Commons Attribution 2.0)
Author: Gruban (Creative Commons Attribution 2.0)
No comments:
Post a Comment