ம'சப் வாலி
( Read Original Article in :- Mzab-valley_algeria)
'ம'சப் வாலி' (M'Zab Valley) என்பது அல்ஜீரியாவின் மற்றொரு யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம் (UNESCO World Heritage Site). 'வட சகாராவில்' (Northen Sahara) உள்ள இந்த இடத்தை 1982 ஆம் ஆண்டு உலக புராதான சின்னமாக அங்கீகரித்து உள்ளார்கள். 10 ஆம் நூற்றாண்டில் ' இப்ரியா' (Ibriya) இன மக்கள் கட்டி இருந்த பண்டைக் கால வீடுகள் (Traditional Abodes) இங்கு பார்க்க வேண்டியவை. இங்கு சுவர்களால் தடுத்து வைக்கப்பட்டு உள்ள ஐந்து கிராமங்கள் (five walled villages) உள்ளன. ஒரு குடும்பத்தினரும் அவரவர் வாழ்கை முறையில் தங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள அவை ஒவ்வொன்றும் 'வாப் ம'சப்' என அழைக்கப்பட்டன. 1982 ஆம் ஆண்டு பாரிஸ்சில் (Paris) டிசம்பர் மாதம் (December) 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee) கூடி விவாதித்த கூட்டத்தில் இந்த சிறப்பான முறையில் கட்டப்பட்டு இருந்த 'ம'சப் வாலி' யை உலக புராதான சின்னமாக அங்கீகரித்தார்கள்.
'ம'சப் வாலி' யை சேர்ந்தவர்கள் வருடம் முழுவதும் அந்த இடத்தில் தங்கியது இல்லை. வெயில் காலங்களில் அவர்கள் அங்கிருந்து குடி பெயர்ந்து 'செப்கா' (Chebka) என்ற வறட்சி நாடு சூழ்ந்த சஹாரா பாலைவன பனைமரச் சோலைகளில் (Palm Grove Oasis) சென்று தங்குவார்கள்.
'இப்ரிய'ர்களின் வாழ்கை முறை அவர்கள் கலாசாரத்தைக் கட்டிக் காத்தபடி இருந்தது. ஏழு கிராமங்களை சேர்ந்த அங்கத்தினர்களின் குழு ( council ) தாம் கடைபிடிக்க வேண்டிய கலாசாரம் (Culture), மதம் (Religious) மற்றும் சமூக சடங்குகளை (Social Matters) முடிவு செய்வார்களாம்.
'ம'சப் வாலி'யில் என்ன பார்க்கலாம்
(What to See in M'Zab Valley)
சுவர்களினால் சூழப்பட்ட ஐந்து கிராமங்கள் அல்லது 'கசூர்' (Ksour) என்பதே இங்கு முக்கியமான இடம். அவற்றின் பெயர்கள் 'தகிர்டெட்' (Tagherdayt), 'பென்னி இஸ்குயின்' (Beni Isguen), 'மிலிகா' (Melika), 'பவனோஉரா' (Bounoura) மற்றும் 'எல் அடியுப்' (El-Ateuf) போன்றவை ஆகும். அவற்றைத் தவிர பின்னர் ஏற்பட்டுள்ள இரண்டு கிராமங்களான 'பெரியன்னே' (Berianne ) மற்றும் 'எல் குயிரரா' (El Guerara) போன்றவையும் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் அவரவர்கள் கட்டி உள்ள மசூதி (Mosque) மற்றும் கிராமத்தைக் கண்காணிக்கும் வகைக்கான உயரமான ஸ்தூபி (Minaret) உள்ளது. அனைத்து வீடுகளும் அந்த மசூதியை சுற்றியே அமைந்து உள்ளன.
இந்த பகுதி உள்ள இடம்
(Location)
அல்ஜீரியாவின் தலை நகரமான அல்ஜியர்ஸ்சில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடம் 'கார்டையா' (Ghardaia) மாகாணத்தில் உள்ளது.
உலக புராதான சின்னம்
இருப்பிடம் : N32 28 59.988 E3 40 59.988
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1982
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : II,III,IV
அங்கு எப்படி செல்வது
(How To Reach)
'ம'சப் வாலி' லோகாவுட் என்ற இடத்தின் தென் புறமாக உள்ளது. ட்ரான்ஸ் சஹாரா முக்கிய நெடுஞ்சாலை NI மூலம் ஒரு வண்டியில் இங்கு செல்ல முடியும். அதை விட இங்கு செல்ல 'அல்ஜீரியா'வின் ஏதாவது ஒரு சுற்றுலா பயண அலுவலகத்தை (travel agent) அணுகுவதே சிறந்தது.
செய்க் சிதி யைஸா மசொலினியம்
Author: Michel-georges Bernard (Creative Commons Attribution ShareAlike 3.0)
No comments:
Post a Comment