'ஆசியா'வின் (Asia) தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் (south-central Asia) உள்ள 'ஆப்கானிஸ்தான்' (Afghanistan ) நான்கு பக்கங்களிலும் நான்கு நாடுகள் சூழ்ந்த நாடு. 647,500 சதுர கிலோ பரப்பளவைக் கொண்ட அந்த நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் 'பாகிஸ்தான்' (Turkmenistan) நாட்டு எல்லை இருக்க, வடக்கில் 'துர்க்மெனிஸ்தான்' (Turkmenistan) , 'உஸ்பெகிஸ்தான்' (Uzbekistan) மற்றும் 'தாஜிகிஸ்தான்' (Tajikistan) நாடுகளும், மேற்குப் பகுதியில் 'இரானும்' (Iran), வடகிழக்கில் 'சீனா'வும் (China ) உள்ளன.
மச்ஜிடி ஜமி இன் ஹீரட் , ஆப்கானிஸ்தான்
Author: Sven Dirks, Wien (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Sven Dirks, Wien (Creative Commons Attribution 3.0 Unported)
2011 ஆம் ஆண்டு கணக்கின்படி 'ஆப்கானிஸ்தான்' நாட்டின் ஜனத் தொகை (Population) 28.4 மில்லியன் (Million) மக்கள் ஆவர். அதன் தலைநகரமான (Capital) 'காபூல்' (Kabul ) 'ஆப்கானிஸ்தானின்' மிகப் பெரிய நகரம். 'ஆப்கானிஸ்தானின்' GDP வளர்ச்சி $14.5 பில்லியன் (Billion), பர் காபிடாவின் (Per Capita) GDP $501
1970 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டில் சமுதாயப் புரட்சி (social upheaval) மற்றும் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் (continuous war ) போன்றவற்றில் 'ஆப்கானிஸ்தான்' மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 1979 ஆம் ஆண்டில் அந்த நாட்டை 'சோவியத் யூனியன்' (Soviets) ஆக்ரமித்துக் கொண்டது. ஆனால் 'பாகிஸ்தான்' நாட்டின் ஆதரவுடன் 'தாலிபான்' (Taliban) எனும் பயங்கரவாத அமைப்பு 1990 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் நிர்வாகத்தை பிடித்துக் கொண்டது. 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (October) அந்த அரசை 'அமெரிக்க' ராணுவம் (US led Invasion) விரட்டி அடிக்க மெல்ல மெல்ல அந்த நாடு முன்னேற்றப் பாதையில் நடக்கத் துவங்கி உள்ளது.
1970 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டில் சமுதாயப் புரட்சி (social upheaval) மற்றும் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் (continuous war ) போன்றவற்றில் 'ஆப்கானிஸ்தான்' மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 1979 ஆம் ஆண்டில் அந்த நாட்டை 'சோவியத் யூனியன்' (Soviets) ஆக்ரமித்துக் கொண்டது. ஆனால் 'பாகிஸ்தான்' நாட்டின் ஆதரவுடன் 'தாலிபான்' (Taliban) எனும் பயங்கரவாத அமைப்பு 1990 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் நிர்வாகத்தை பிடித்துக் கொண்டது. 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (October) அந்த அரசை 'அமெரிக்க' ராணுவம் (US led Invasion) விரட்டி அடிக்க மெல்ல மெல்ல அந்த நாடு முன்னேற்றப் பாதையில் நடக்கத் துவங்கி உள்ளது.
(Visiting Afghanistan)
'ஆப்கானிஸ்தான்' நாடு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது ஏற்ற இடமல்ல. அந்த நாட்டின் ஆபத்தான (Dangerous) பல இடங்கள் இன்னமும் அந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் (not in Control) இல்லை. தனி நபர் உயிருக்கும் ( Threats to personal safety ) உத்தரவாதம் இல்லை. ஆகவே அந்த நாட்டுக்கு பயணிக்கும் முன்னர் அங்குள்ள நிலைமையை (latest development) நன்கு அறிந்து கொண்டப் பின்னர்தான் அங்கு செல்ல வேண்டும்.
'ஆப்கானிஸ்தான்' நாட்டிற்குச் செல்ல விசா (need Visa) தேவை. ஆகவே அந்த நாட்டின் வெளிநாட்டு இலக்காவின் (Foreign Ministry) இணையதளத்தில் (web page) சென்று அதற்கான விவரங்களைப் பார்க்கவும்.
பறவைகள் சாலை , காபுல் , ஆப்கானிஸ்தான்
Author: Michal Hvorecky (Creative Commons Attribution 2.0 Generic)
Author: Michal Hvorecky (Creative Commons Attribution 2.0 Generic)
(By Plane)
அந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் எனில் 'காபூல்' சர்வதேச விமான நிலையத்திற்குச் (Kabul International Airport (KBL)) சென்றே அங்கிருந்து நகருக்குள் செல்ல வேண்டும். 'அரியனா ஆப்கான் ஏர்லைன்ஸ்' (Ariana Afghan Airlines) விமான சேவை 'காபுல்' (Kabul) மற்றும் 'துபாய்கு' (Dubai) இடையே தொடர்ந்து உள்ளது. அதைத் தவிர அவ்வப்போது தேவைக்கு ஏற்ப 'பிராங்க்பர்ட்'(Frankfurt), 'இஸ்லாமாபாத்' (Islamabad), 'இஸ்தான்புல்' (Istanbul), 'நியூ டெல்லி' (New Delhi) மற்றும் 'தெஹரான்' (Teheran) போன்ற நகரங்களுக்கும் அந்த நிறுவனம் விமான சேவை அளிக்கின்றது. அடிக்கடி அந்த விமானப் பயணங்களில் தாமதம் (Delays) ஏற்படும், அது மட்டும் அல்லாமல் அந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதும் (cancellation) உண்டு.
அந்த விமான நிலையத்தில் உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் விமான சேவைகள் கீழ் வருமாறு:-
'காம் ஏர்' (Kam Air) - 'துபாய்', 'டெல்லி', 'அல்மாட்டி', 'இஸ்தான்புல்', 'மஷாத்' போன்ற இடங்கள் (Dubai, Delhi, Almaty, Istanbul, Mashad) ,
'பாமிர் ஏர்வேஸ்' (Pamir Airways) - 'துபாய்' (Dubai),
'ஏர் அராபியா' (Air Arabiya)- 'ஷார்ஜா' (Sharja),
'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' (Pakistan International Airlines)- 'இஸ்லாமாபாத்' மற்றும் 'பெஷாவர்' (Islamabad, Peshawar),
'இரான் ஏர்' (Iran Air) - 'தெஹரான்' (Teheran)
'ஏர் இந்தியா' (Air India)- 'நியூ டெல்லி' (New Delhi).
ஆப்கானிஸ்தானின் பெரிய நகரங்கள்
(Major Towns in Afghanistan )
(1) காபூல் - தலை நகரம் (kaabul - capital)
(2) பால்க் (Balkh )
(3) பாமியான் (Bamiyan )
(4) காஸ்னி (Ghazni )
(5) ஹெராத் (Herat)
(6) ஜாலாலாபாத் (Jalalabad )
(7) கண்டஹார் (Kandahar )
(8) கோண்டுஸ் (Konduz )
(9) மழார் இ ஷரிப் (Mazar-e Sharif)
ஆப்கானிஸ்தானில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Afghanistan)
(1) பாண்ட் இ அமீர் (Band-e Amir )
(2) கைபர் பாஸ் (Khyber Pass )
(3) பஞ்ச்ஷீர் வாலி (Panjshir Valley)
(4) சலாங் பாஸ் (Salang paas)
(5) ஷமாலி ப்லைன் (Shamali Plain)
ஆப்கானிஸ்தானில் யுனேஸ்கோ உலக தொல்பொருள்
ஆராய்ச்சி மைய அமைப்பின் கீழ் உள்ள இடங்கள்
(UNESCO World Heritage Sites in Afghanistan)
(1) மினாரெட் மற்றும் ஜாம் என்ற இடத்தின் தொல்பொருள் சின்னங்கள்
(2) பாமியான் வாலியின் தொல்பொருள் சின்னங்கள் மற்றும் கலாச்சார அமைப்பு சின்னங்கள்
No comments:
Post a Comment