துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி - பலேர்மோ

பலேர்மோ
(Read Original Article in :-Palermo)
Panorama of Palermo, Sicily
சிசிலியில் பலேர்மோவின் அழகான காட்சி
Author: Xerones (Creative Commons Attribution 2.0 Generic)


'சிசிலி'யின் (Sicily) தலைநகரமே 'பலேர்மோ' (Palermo) . இது 'இத்தாலி'யின் தென் பகுதியில் 'தைர்ஹெனியான்' கடல் (Tyrrhenian Sea) எதிரில் அமைந்து உள்ளது. இதன் வரலாறும் 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டதே. இந்த நகரமும் சமையல் கலை (Cuisine) , கலாசாரம் (Culture) மற்றும் கட்டிடக் கலைக்கு (Architecture) பெயர் போன நகரமாகும். இத்தாலியின் ஐந்தாவது பெரிய நகரமான (5th biggest City) இதன் ஜனத்தொகை 2011 ஆம் ஆண்டின் கணக்குப்படி சுமார் 900,000 ஆகும்.
Chiesa di San Domenico, Palermo
சீசா டி சான் டொமெனிக்கோ
Author: Dedda71 (Creative Commons Attribution 3.0 Unported)
 
'பலேர்மோ'வில் உள்ள பெரும்பாலான மக்கள் ரோமன் கத்தோலிகர்கள் (Roman Catholics). ஒவ்வொரு ஆண்டும் ஜூன் பதினைந்தாம் தேதியன்று (15th June) நடைபெறும் 'செயின்ட் ரோசாலியாவின்' (Saint Rosalia) பண்டிகை (feast day) இங்கு மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
'பலேர்மோ'வில் சர்ச்சுகள் (Churches), அரண்மனைகள் (Palaces), முயூஸியம் (Musium), இசை-நாடக அரங்குகள் (Opera Houses) மற்றும் பல சுற்றுலா இடங்கள் உள்ளன.

'பலேர்மோ'விற்கு விமானப் பயணம்
 (Going to Palermo By Plane )
'பலேர்மோ'விற்கு விமானத்தில் செல்ல வேண்டும் எனில் அங்கிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'பலேர்மோ' விமான நிலையத்தில் சென்று இறங்க வேண்டும். ஐரோபியாவின் (Europe) பல நாடுகளில் இருந்தும் அங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து 'பலேர்மோ' நகருக்குள் செல்ல ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் (Every half an hour) ஒரு ஷட்டல் பஸ் (Shuttle bus) வசதி உள்ளது. அதன் கட்டணம் €5.80.

படகில் செல்ல (By Ferry )
ஜெனோவ (Geneo), நேப்பில்ஸ் (Naples) , மால்டா (Malta), காக்லியாரி (Cagliari) மற்றும் சர்டினியா (Sardinia) போன்ற இடங்களில் இருந்து படகில் 'பலேர்மோ'விற்கு செல்ல வசதி உள்ளது.
Ballarò Market, Palermo
'பலேர்மோ'வின் பல்லாரோ மார்கெட்
Author: Alessandro Cataldo (Creative Commons Attribution 3.0 Unported)

'பலேர்மோ'விற்கு உள்ளே சுற்றிப் பார்க்க
'பலேர்மோ'விற்கு உள்ளே உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க நடந்தும் பஸ்களிலும் செல்லலாம். பஸ்களில் 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் பயணச் சீட்டு €4 கட்டணத்தில் கிடைக்கின்றது. 

பலெர்மோவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Palermo)
(1) துயோமோ
1184 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மாதா கோவில்
(2) கேசு
போரோக்கின் தேவாலயம்
(3) லா  மகியோனி 
1191 ஆம் ஆண்டு மாட்டியோ டைலோ 
நிறுவிய தேவாலயம் 
(4) லா மோர்டரானா
1140 ஆம் ஆண்டு ஆண்டியோச் ஜியார்ஜ்  
நிறுவிய தேவாலயம்
(5) முசியோ அர்சியலாஜிகோ ரீஜியனலே   
முந்தய மடாலயத்தில் அமைந்துள்ள  
தொல்பொருள் ஆராய்ச்சி மியூசியம்
(6) ஓரடோரியோ  டெல்  ரொசாரியோ  டி  சான்  டொமேனிகோ
16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிறிய 
டொமினிகோ கலையில் அமைந்துள்ள 
தொழுகை இடம்
(7) ஓரடோரியோ  டெல்  ரொசாரியோ  டி சண்டை  சிடா 
கன்னி மேரி  ரோசரிக்கு  அற்பநிக்கபட்டு 
உள்ள சிறிய தொழுகை இடம்.
(8) ஓரடோரியோ டி  சான்  லோரேன்சோ
அற்புதமான கலை அழகுடன் கூடிய சுவற்றைக் 
கொண்ட சிறிய பிரசங்க அறை
(9) பலஸ்சோ அபாடேல்லிஸ்  மற்றும் 
கல்லெறிய ரீஜியனலே டி  சிசிலியா
15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள 
ஸ்பானிஷ், கோதிக், இத்தாலியன் போன்ற 
அனைத்து  கலைகளையும்  உள்ளடக்கி  
கட்டப்பட்டு உள்ள மாளிகை.
(10) பலஸ்சோ ரியலே
பைசண்டைன் ஆட்சியில் ஆட்சி 
மையமாக  இருந்த இடம் 
(11) பர்கோ  டெல்லா  பாவோரிடா
மன்னன் பெர்டினான்ட் IV வேட்டை
ஆட பயன்படுத்திய பார்க்
(12) சான்  டொமேனிகோ
1640 ஆம் ஆண்டு உருவான 
டொமினிகோ தேவாலயம் 
(13) சான்  ஜியோவன்னி   தேக்லி  எரெமிடி
மசூதியின் மைதானத்தில் கட்டப்பட்ட
நார்மன் தேவாலயம்
(14) சான்ட  கடெரீனா
பலேர்மிடன் போரோக் மாதிரியில் 
கட்டப்பட்டு உள்ள தேவாலயம்
(15) வுச்சிரியா
பலெர்மோவில் மத்திய கால பாணியில் 
அமைந்து  உள்ள கடைவீதி. 

No comments:

Post a Comment