ஜெகார்ட் மடாலயம் மற்றும் அஸாத் மேல் பள்ளத்தாக்கு
(Read Original Article in :-
'ஆர்மேனியா'வின் மத்தியக் காலப் பகுதியில் இருந்த அற்புதமான கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டே 'ஜெகார்ட் மடாலயம்' (Monastery of Geghard). இதுவும் 'ஆர்மேனியா'வின் யுனேஸ்கோவின் உலக புராதான சின்ன மையம் ( U NESCO World Heritage Site of Armenia). இங்கு தேவாலயங்களும் கல்லறைகளும் இயற்கையாக அமைந்து உள்ள உறுதியான பெரும் கல் பாறைகளில் (solid rock) அமைக்கப்பட்டு உள்ளன.
'ஆஸ்திரேலியா'வின் (Australia) 'கைர்ன்ஸ்' (Cairns) நகரில் 2000 ஆண்டு நவம்பர் மாதம் 7 முதல் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன அங்கத்தினர்கள் (World Heritage Committee) கூட்டத்தில் ஜெகார்ட் மடாலயம் மற்றும் அஸாத் மேல் பள்ளத்தாக்கு என்ற இரண்டையும் யுனேஸ்கோவின் உலக புராதான சின்னங்களாக (UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள். இந்த மையத்தில் உள்ள மடாலயங்கள் அதன் கட்டிடக் கலை மற்றும் அற்புதமான வேலைபாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டன.
ஜெகார்ட் மடாலயம்
ஜெகார்ட் மடாலயம் - நுழை வாயில்
ஜெகார்ட் மடாலயம்
குளிர் காலத்தில் ஜெகார்ட் மடாலயம்
இந்த இரண்டு இடங்களிலும் என்ன பார்க்கலாம்
(What to see)
'ஜெகார்ட்' மடாலயம் மற்றும் 'அஸாத்' மேல் பள்ளத்தாக்கு (zhat Valley) என்ற இரண்டுமே அற்புதமானவை. இங்குள்ள மடாலயம் உறுதியான பாறையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மடாலயத்தில்தான் ஏசுவின் (Jesus) உடலை துளைத்த ஈட்டியை (Lance) ஒரு சமயத்தில் வைத்து இருந்தார்களாம். இதனுள் உள்ள பல 'கச்சார்' (khachkars) எனப்படும் தூண்கள் அற்புதமான வேலை அமைப்புக்களுடன் உள்ளன. சுற்றிலும் மலை உச்சிகள் நீண்டு கிடக்கும் (Cliffs) மேல் பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்து உள்ள இந்த மடாலயம் பார்க்கவே அற்புதமாக இருக்கும்.
இது உள்ள இடம்
ஜெகார்ட் மடாலயம் 'கோடயக்' மாகாணத்தில் (Kotayk Province) உள்ள 'ஜெகார்ட்' எனும் கிராமத்தில் (Village) உள்ளது. ஏரவானின் கிழக்குப் பகுதியில் இது உள்ளது.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
இருப்பிடம் : N 40 9 32 E 44 47 48அங்கீகாரம் பெற்ற வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : II
இங்கு செல்வது எப்படி
'ஆர்மேனியா'வின் கிழக்கு பக்கத்தில் இவை உள்ளன. ஆகவே நீங்கள் தலைநகரான 'ஏரவானில்' (Yeravan) தங்கி இருப்பதே நல்லது. அங்கிருந்து இந்த மையங்கள் வெகு தொலைவில் இல்லை என்றாலும் அங்கிருந்துதான் உங்களுடைய பொருளாதார வசதிக்கு ஏற்ப தேர்ந்து எடுக்கும் வகையில் போக்குவரத்து சாதன வசதிகள் உள்ளன. ஒரே நாளில் காலை நேரத்திலேயே 'ஜெகார்ட்' மடாலய பகுதியின் அனைத்து இடங்களையும் பார்க்க முடியும் .
'எரேவாவா'னில் உள்ள ஹோட்டல்களில் இணையத்தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ள மேலே உள்ள எரவானின் மீதே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment