டிம்காட்
( Read Original Article in :- Timgad)
( Read Original Article in :- Timgad)
அங்கு என்ன பார்க்கலாம்
(What to See in Timgad)
'ரோமாரியர்கள்' (Romans) நிர்மாணித்த 'டிம்காட்' என்ற இந்த இடம் ஒரு பட்டணத்தை எப்படி அமைப்பது என்பதைக் காட்டும் ஒன்று. 'பெர்பெர்களின்' (Berbers) படையெடுப்பை சமாளிக்க வட ஆப்ரிக்காவில் (North Africa) ரோமானியர்கள் கட்டி இருந்த ராணுவ குடியிருப்பை (Military Colony) ஒத்து இருந்தது அந்த குடியிருப்பின் அமைப்பு . 'டிம்காட்'டில் இன்றும் 'ரோமானியர்கள்' கட்டி இருந்த 'ட்ராஜன் வளைவு' (Trajan Arch) மற்றும் நியாயாலயம் (Forum) போன்றவை சிதைந்த நிலையில் (Ruins) உள்ளன. அன்று கட்டப்பட்டுள்ள 3500 பேர் அமர்ந்து காணக்கூடிய காட்சியரங்கம் இன்றும் உபயோகத்தில் உள்ளது. ரோமானியர்கள் கட்டி இருந்த குளியல் இடம் (Public Bath) , கடைவீதி (Market) , வாசகசாலை (Library) மற்றும் 'பசிலிக்கா' (Basilica) போன்றவையும் உள்ளன. 'ஜுபிடர்' (Jupiter) கடவுளுக்கு ரோமானியர்கள் கட்டி இருந்த 'கபிடோலின்' (Capitoline Temple) ஆலயமும் சிதைந்த நிலையில் உள்ளது. அது ரோமில் உள்ள புகழ் பெற்றவர்களைப் புதைக்கும் (Pantheon) இடத்தின் அளவில் அமைந்து உள்ளது.
இந்த பகுதி உள்ள இடம்
(Location)
'டிம்காட்' என்ற இந்த இடம் 'பாட்னா' (Batna) மாகாணத்தில் உள்ளது.
உலக புராதான சின்னம்
இருப்பிடம் : N35 27 0 E6 37 59.988
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1982
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : II,III,IV
அங்கு எப்படி செல்வது
(How To Reach)
'டிம்காட்' செல்ல வேண்டும் எனில் 'பாட்னா' நகரில் இருந்து ஏதாவது ஒரு வண்டியில் செல்லலாம். அது 'பாட்னா'வில் இருந்து 35 கிலோமீட்டர் (KM) தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment